(கு - ரை.) 2. நார் - மரங்களின் நார். போழ் - பனங்குருத்து. உண்டு - சுவைத்துண்டு; புறநா. 375 : 5. ஒராங்கு : ஒரு தன்மைப் பட என்னும் பொருள்படுவதோர் இடைச்சொல்; கலித்.142 : 6. இச்சொல், "ஓராங்கு" என்றும் வரும். 3. பசிதினத் திரங்கிய இரும்பேரொக்கற்கு - பசிதின்னலால் வருத்தமுற்ற கரிந்த பெரிய சுற்றத்தார் பொருட்டு; "பசிதினத் திரங்கிய வொக்கல்", "பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை", "இலம்பாடுழந்தவென் னிரும்பே ரொக்கல்", "இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற", "பசித்தென, வீங்குவந் திறுத்தவென் னிரும்பே ரொக்கல்", "இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்" (புறநா. 159 : 21, 160 : 4, 378 : 13, 390 : 18, 391 : 7 - 8, 394 : 16); "பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு" (பெரும்பாண். 25) 4. ஆர்பதம் - உண்ணும் உணவு ; "தேரிற் றந்தவர்க் கார்பத நல்கும்...இசைசா றோன்றல்", "நெல்லின், அம்பண வளவை விரிந்துறை போகிய, வார்பத நல்கு மென்ப" (பதிற். 55 : 11 - 2, 66 : 7 - 9); "ஆர் பதமிக்கு நீரும் நிழலும் பெறுதலிற் களிசிறந்து மாவும் புள்ளும் துணையோ டின்புற்று விளையாடுவன’ (தொல். அகத்திணை. சூ. 6, ந.) மாதிரம் - திசை. துழைஇ - துழாவி; தேடி. 6. அத்தம் - அருஞ்சுரம். குடிஞை - கோட்டான். குடிஞைச் குரலுக்குத் துடியோசை உவமை; புறநா. 170 : 6 - 7, குறிப்புரை. மருள் : உவமவுருபு. குரல் : எழுவாய். 7. உழுஞ்சில் - ஒருவகை மரம்; கவடு-கிளை; "கோடலங் கவட்ட குறுங்கா லுழுஞ்சில்" (அகநா. 151 : 8); உழுஞ்சிலை வாகை யென்பர்; சிலப். 11 : 76, அடியார். 8. பயிர் - அழைத்தல். 9. வறம் - வறுமை, நீரின்மை; கலித்.11 : 14. 10, வரிமரல்திரங்கிய - வரியையுடைய மரல் நீர்வற்றித் திரங்கிய ; "வரிமரற் றிரங்கிய கரிபுறக் கிடக்கை" (சிலப் 11 : 77). மரல், மருளென்று வழங்கும். 11. பழுத்த மரத்தை நினைத்துச் செல்கின்ற வௌவாலைப் போல; புறநா. 47 : 1, குறிப்புரை. 13. துவைத்து - முழங்கி. 14. குரல் - கழுத்து, தானியக்கதிர்; சிலேடை. 15. பிணப்பல் போர்பு - பலவகைப்பட்ட பிணங்களாகிய போர்கள் ; போர்பு-தானியக்கதிர்ப்போர்; புறநா. 209 : 1; "பிணனெதிரப் போர் பழித்து"‘ "அஞ்சா மறவ ராட்போர் பழித்து" (புறநா. 371 : 14, 373 : 25) ; "நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்பழித்து" (அகநா. 366 : 2) 16. வாளாகிய மடலைச் செலுத்தி; மடல் - பனங்கருக்கு. 15 - 7. "கழிபிணம் பிறங்குபோர் பழிகளி றெருதா", "யானையெருத்தின் வாண்மட லோச்சி, அதரி திரித்த வாளுகு கடாவின்", "குடபுலத் ததரி, பொலிக" (புறநா. 342 : 13, 371 : 15 - 6, 373 : 26 - 7) ; "கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக, ஆளழி வாங்கி யதரி திரித்த" (சிலப். 26 : 262) 18. "தெடாரித் தெண்கண் டெளிர்ப்ப வொற்றி", "அரிக்குரற்றடாரி யுருப்ப வொற்றி", "அகன்கட் டடாரிப் பாடுகேட் டருளி" (புறநா. 368 : 15, 369 : 21, 385 : 4) 20. புறநா. 369 : 1. 21. முகவை : புறநா. 368 : 11, 369 : 27, 371 : 20.போல (11) வந்தனென் (21) 22. வடி நவில் - வடித்தல் பயின்ற ; புறநா. 23 : 8. 23. தொடியுடைத் தடக்கை - வளையையுடைய பெரிய கையை. 24. வரிக்குடர் - பலவரியையுடைய குடர் ; "நெறிகொள் வரிக்குடர்" (புறநா. 160 : 6). அடைச்சி - சேர்த்து. 26. செஞ்செவியெருவை : புறநா. 238 : 2 ; "செஞ்செவி யெருவைச் சேவல்" (அகநா. 161 : 5 : 6) 27. போர்க்களம் வென்றோர்க்கு உரித்தாதலால், ‘களங்கிழவோய்’ என்றார் ; புறநா. 371 : 27, 373 : 39. (370)
|