316
கள்ளின் வாழ்த்திக் கள்ளின்வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
நாட்செருக் கனந்தர்த் துஞ்சு வோனே
அவனெம் மிறைவன் யாமவன் பாணர்
5நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தன னின்றிக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண்
டீவதி லாள னென்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக்
10கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச்
சென்றுவாய் சிவந்துமேல் வருக
சிறுகண் யானை வேந்துவிழு முறவே.

(பி - ம்.) 1 - 2 ‘வாழ்த்திகள்ளின்...தசீயா’3 ‘களந்தரத்துஞ்சு’ 4 ‘மிறையவன்’ 8 ‘டீதலிலாளன்’9 ‘வள்ளியலகு விளங்கிழை’ 11 ‘சென்று நாசிவந்துமேவருசிறுகண்’, ‘செறுவர் சிவந்து’ ‘செறுநர் சிவந்து’

திணையும் துறையும் அவை.

மதுரைக்கள்ளிற் கடையத்தன்(பி - ம். கடையத்தனார் வெண்ணா
கனார்)


((கு - ரை.) 1. கள்ளினைவாழ்த்தி; புறநா. 297 : 6.

2. சீத்தல் - தூத்தல்; பெருக்கல்;“மந்தி சீக்கு மணங்குடை முன்றிலில்” (புறநா.247 : 4) “மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றில்” (பெரும்பாண்.497)

3. நாட்செருக்கு அனந்தர் - விடியற்காலத்துக்கள்ளைக் குடித்த மயக்கத்தால்.

1 - 4. காட்டு - செத்தை; “துடைப்பந்துகட்காட்டுப் புல்லிதழ்” “காட்டுக் களைந்து”(ஆசார. 45 - 6). ஒடு: அசை. தூவாத முன் வாயிலினிடத்தேதானுண்ட கள்ளை வாழ்த்தி நாட்கால அனந்தரால்துயில்வோன்; “முன்றிற்கிடந்த பெருங்களியாளற்கு” (புறநா. 317 : 2) தூங்குவோனாகிய அவனேஎம் தலைவன்.

5 - 6. நேற்றுவந்த விருந்தினரைஉபசரித்ததற்காகத் தன் பழைய வாட்படையை ஈடாகவைத்தான்.இன்று - இன்றைத்தினம்.

7. பணையம் - ஈடு. 8. ஈயாதவனென்றுகருதாமல் நீயும். அணிகலத்தை அணியவும்; வள்ளி - பூங்கொடி.

மு. ‘மறவன் ஆரமரோட்டல் கூறியது’என்பர்; தொல். புறத்திணை. சூ. 6,.

(316)