(கு - ரை.) 1. களரி - காடு. 2. புறநா.362 : 17 - 8; "நன்பகலுங் கூகை நகும்" (பு. வெ.39) 3. ஈமவிளக்கு - பிணஞ்சுடும் விறகின் அழல். 4. அஞ்சுவந்தன்று - அச்சம் வரப்பெற்றது. முதுகாடு-மயானம். 5. அமர்காதலர் - விரும்பிய காதலையுடைய மகளிர். 6. என்பு - எலும்பு. 7. எல்லாருடைய பிற்காலத்தையும் தான்கண்டு. 8. மன்பதை - மக்கட்டொகுதி. தானாய்-தானே இருப்பிடமாகி; "மக்கட் பிணத்த சுடுகாடு" (நாலடி.121) மு.இச்செய்யுள் காடுவாழ்த்தென்னும் துறைக்கு மேற்கோள்; தொல்.புறந்திணை. சூ. 19, இளம்; சூ. 24, ந. (356)
1. இந்நூலின் முதற்பதிப்பில் இதன் முன்பிருந்த பகுதி சிலபிரதிகளில் 377-ஆம் பாட்டின் முதலில் வரையப்பட்டிருந்தமையாலும், இச்செய்யுள் பழையவுரைகளில் இந்த அளவிலேயே மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்த மையாலும், பொருண் முடிபாலும் இங்ஙனம் பதிப்பிக்கலாயிற்று.
|