(கு - ரை.) 1. "வினைநவில் யானை பிணிப்ப, வேர்துளங் கினநம் மூருண் மரனே", "செந்நுதல் யானை பிணிப்ப, வருந்தல மன்னெம் பெருந்துறை மரனே" (புறநா.347 : 12 - 3, 348 ; 8 - 9) 1 - 2. இவை சீர்கூனாய் வந்ததற்கு மேற்கோள் ; யா. வி. ஒழிபு. சூ. 2. 3. இவ்வடி வஞ்சியடியினிறுதியில் ‘வழி’ எனத் தனிச்சொல் வந்ததற்கு மேற்கோள் ; யா. வி. ஒழிபு. சூ. 1 ; இ. வி.சூ. 751, உரை. 4. கழாலின் - கழுவுதலால். வஞ்சியடியின் நடுவில் ‘துறை’ என்பது தனிச்சொல்லாகியும் கூனாகியும் வந்ததற்கு இவ்வடி மேற்கோள் ; யா. வி.ஒழிபு. சூ. 1, 2 ; இ. வி. சூ. 751, உரை. 5. இறைகூர்தல் - தங்குதல்6. பொறை - பாரம். 7. வம்பவேந்தர் - புதிய அரசர். 6 - 7. சேனைப்பாரத்தால் நிலம் நெளிதல் ; புறநா.23 : 15 ; "கார்விளை மேக மன்ன..........நிலனெளி பரந்த வன்றே" (சீவக. 433) 8. கைகவரிரும்பு - உலைத்துருத்தியின் வாயிரும்பு. 13. செருப்புகல் வேண்டி - போரைவிரும்பி ; "போரெனிற் புகலும் புனைகழன் மறவர்" (புறநா.31 ; 9) 14. நிரல் - வரிசை. தருதலில்லையென்று ; புறநா.343 ; 12. 15. கழிகளாற் கட்டப்பட்ட கேடகத்தை யுடையர் ; "வள்ளித்தண்டை" (சீவக. 2218). கதுவாய் - வடு ; "எறிந்திலை முறிந்த கதுவாய் வேலின்" (புறநா.347 : 4) 17. கழாத்தலையர் - கழுவாத தலையினையுடையர். 19. மு. புறநா.347 ; 9. 18 - 9. ‘அன்னோ’ என்பது இரக்கக்குறிப்புணர்த்தியதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். இடை. சூ. 34, ந. 20. பன்னல் - பருத்தி ; "பருத்தி வேலிச் சீறூர்", "பருத்தி வேலி...... அங்குடிச் சீறூர்" (புறநா.299 : 1, 324 : 7 - 8) மு.காஞ்சித்திணைத்துறைகளுள், மகட்பாற்காஞ்சிக்கு மேற்கோள் காட்டி, நிரலல்லோர்க்குத் தரலோவில்லென வென்றலின், அரசர்க்கு மகட்கொடைக்குரியரல்லாத அனைநிலைவகையோர்பாற்பட்டது’ என்பர் ; தொல்.புறத்திணை. சூ. 24, ந. (345)
|