184
காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்
5அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்
10யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா னுலகமுங் கெடுமே.

திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ.(பி - ம். திணையும் துறையும் அவை)

பாண்டியன் அறிவுடை நம்பியுழைச்சென்றபிசிராந்தையார் பாடியது.

(இ - ள்.) காய்த்த நெல்லையறுத்துக்கவளமாகக் கொள்ளின் ஒரு மாவிற்குறைந்த நிலத்திற்கதிரும்பலநாளைக்காகும்; நூறுசெய்யாயினும் யானை தனித்துப்புக்குஉண்ணுமாயின் அதனது வாயின்கட்புகுந்த நெல்லினும்கால் மிகவும் கொடுக்கும்; அப்பெற்றியே அறிவுடையஅரசன் இறை கொள்ளும் நெறியை அறிந்து கொள்ளின்அவன்நாடு கோடி பொருளினை ஈட்டிக் கொடுத்துத் தானும்மிகவுந் தழைக்கும்; வேந்தன் அறிவால் மெல்லியனாகிநாடோறும் தரமறியாத உறுதிகூறாது 1 அவன்விரும்புவதனையே தானுங் கூறும் ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடுகூடி அன்புகெடக் கொள்ளும் பொருட்டொகுதியைவிரும்பின் அந்த யானை புக்க புலம்போலத் தானும்உண்ணப்பெறான், உலகமுங் கெடும்-எ - று.

பரிவுதவவென்றோதி, அக்குடிகட்குவருத்தமிக என்றுரைப்பாரும் உளர்.

‘மெல்லியன் கீழவ னாகி’ என்றும்பாடம்.


(கு - ரை.) 1. நெற்கவளம் : புறநா.44 : 2, குறிப்புரை.

2. மா - ஒருவகையளவை; “மாமாவின்வயின்வயினெல்” (பொருந. 180)

4. வேற்றுமைக்கண் யகரவீற்றின்முன்பகரம் இயல்பாயதற்கு மேற்கோள்; நன். சூ. 223, மயிலை.நன். வி. சூ. 224; . வி. சூ. 133, உரை.

5, “நல்லற நெறிநிறீஇ யுலகாண்டவரசன்” (கலித். 129 : 4)

5 - 6. “குடியோம்பிக், கொள்ளுமாகொள்வோற்குக் காண்டுமே மாநிதியம், வெள்ளத்தின்மேலும் பல” (நீதிநெறி. 29)

8. “கல்லென் சுற்றமொடுகால்கிளர்ந்து திரிதரும்” (பெரும்பாண். 21);“கல்லென் சுற்றக் கடுங்குர லவித்து” (குறிஞ்சிப்.151)

9. நற். 226 : 2 - 3.

5 - 11. புறநா. 75.

மு. “வாய்ப்படுங் கேடுமின்றாம் வரிசையி னரிந்து நாளுங், காய்த்த நெற்கவளந் தீற்றிற் களிறுதான் கழனி மேயின், வாய்ப்படலின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளின்,நீத்தநீர் ஞால மெல்லா நிதி நின்று சுரக்கு மன்றே”(சீவக. 2907); “மாநிரப்புறாச் சிறுபுலப் பயன்களும்வயக்கரி நிலைநாடித், தான ளித்திடி னடுபசி கெடுமதுசார்ந்துபுக் குணின்வேலி, யான தென்னினுங் வாலினுங்காலினு மழிந்துவாய் புகலின்றிப், போன தாமதுபோன்றதவ் விறைமகன் புவியெலாம் பொலிவற்றே”(சீகாழித்தலபுராணம், பூதவிமோசனமானவத்தியாயம்,7)

வாயுறைவாழ்த்திற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 29, இளம்.; சூ. 35, ந.

(184)


1 “இகழி னிகழ்ந்தாங் கிறைமகனொன்று, புகழினு மொக்கப் புகழ்ப” (நீதிநெறி.44)