69
கையது கடனிறை யாழே மெய்யது
புரவல ரின்மையிற் பசியே யரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி யுடுத்த வுயவற் பாண
5பூட்கை யில்லோன் யாக்கை போலப்
பெரும்புல் லென்ற விரும்பே ரொக்கலை
வையக முழுதுடன் வளைஇப் பையென
என்னை வினவுதி யாயின் மன்னர்
அடுகளி றுயவுங் கொடிகொள் பாசறைக்
10குருதிப் பரப்பிற் கோட்டுமா தொலைச்சிப்
புலாக்களஞ் செய்த கலாஅத் தானையன்
பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே
பொருநர்க் கோக்கிய வேல னொருநிலைப்
பகைப்புலம் படர்தலு முரியன் றகைத்தார்
15ஒள்ளெரி புரையு முருகெழு பசும்பூட்
கிள்ளி வளவற் படர்குவை யாயின்
நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகற்
றேர்வீ சிருக்கை யார நோக்கி
நீயவற் கண்ட பின்றைப் பூவின்
ஆடும்வண் டிமிராத் தாமரை
சூடா யாத லதனினு மிலையே.

(பி - ம்.) 3 ‘வெயர்நனை’ 5 ‘பூண்டகை’6 ‘ரொக்கலொடு’ 13 ‘கேற்றியவில்ல’

திணையும் துறையும் அவை.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைஆலத்தூர்கிழார் பாடியது.

(இ - ள்.) நின் கையகத்தது, இலக்கணமுறைமைநிரம்பிய யாழ;் உடம்பின் கண்ணது, 1 ஈத்தளிப்போரில்லாமையாற்பசி; அரையதாகிய வேற்றிழை ஊடுபோன வேர்ப்பால்நனைந்த சீரையை 2 அற்றம் மறைத்து உடுத்தவருத்தத்தையுடைய பாண! மடியால் மேற்கோளில்லாதவன்உடம்பையொப்பப் பெரிதாகப் புற்கென்ற மிகப்பெரியசுற்றத்தையுடையையாய் உலகமெல்லாவற்றையுஞ் சூழ்வந்துபின்னை என்னை, மெல்ல வறுமைதீர்ப்பார் யாரெனக்கேட்கின்றாயாயின், கேளாய்; வேந்தரது கொல்யானைபுண்பட்டுவருந்தும் கொடியெடுக்கப்பட்ட பாடிவீட்டின்கட்குருதிப்பரப்பின்கண்ணே யானையைக் கொன்றுபுலாலையுடைய போர்க்களத்தையுண்டாக்கிய போர்செய்யும்படையையுடையவன், உயர்ந்த நிலையையுடைத்தாகிய மாடத்தையுடையஉறையூரிடத்திருந்தான்; அவன், பொருவோர் பொருட்டுஎடுக்கப்பட்ட வேலையுடையனாய் ஒரு பெற்றியே பகைவர்நாட்டின்கட் போதலும் உரியன்; சுற்றப்பட்ட மாலையையும்ஒள்ளிய எரியையொக்கும் நிறம்பொருந்திய பசும்பொன்னாற்செய்யப்பட்ட பூணினையும் உடைய கிள்ளிவளவனிடத்தேசெல்குவையாயின் அவனது நெடிய வாயிலின்கட் காலம்பார்த்து நிற்றலும் உடையையல்லை; விளங்கிய பகற்பொழுதின்கண்அவன் பரசிலர்க்குத் தேர்வழங்கியிருக்கும்இருப்பை நின் கண்ணாரப் பார்த்து நீ அவனைக் கண்டபின்புபூவின்கண் ஆடும் வண்டு ஊதாத பொற்றாமரைப்பூவைச்சூடாயாதல் அந்நெடுங்கடை நிற்றலினும் உடையையல்லை;அதனால், ஆண்டுச் செல்வாயாக-எ - று.

தகை தார் தகைத்தாரென நின்றது; மேம்பட்டதாருமாம்.

பாண! ஒக்கலையாய் வளைஇவினவுதியாயின், தானையையுடையவன், உறந்தையோன்:அவன்பாற் படர்குவையாயின், நின்கையது யாழாதலானும்,மெய்யது பசியாதலானும், நெடுங்கடை நிற்றலுமில்லை;நீ அவற் கண்டபின்றைத் தாமரை சூடாயாதல் அதனினுமிலையெனமாறிக் கூட்டுக.

பூவாகிய தாமரையெனினும் அமையும்;அதற்கு இன் அல்வழிச் சாரியை.
‘புகழ்த்தகையில்லோன்’ (5) என்பதூஉம் பாடம்.

3 ஒருநாள் முதலன பத்துநாழிகையும் அறத்தின்வழியொழுகிப்பின் பத்துநாழிகையும் இறையின் முறைமைகேட்டுச்செய்த பொருளைப் பரிசிலர்க்குக் கொடுத்து மகிழ்ந்திருத்தலால்கடும்பகற்றேர்வீசிருக்கையென்றார்.


(கு - ரை.) 3. “வேரொடு நனைந்துவேற்றிழை நுழைந்த, துன்னற் சிதாஅர்” (பொருந.80-81). சிதார்-கந்தை.

4. உயவல் : மணி. 3 : 90.

5. மேற்கோளில்லாதவனுடைய உடம்புவாடியிருக்கும் என்றபடி.

6. ஒக்கலை-சுற்றங்களை உடையாய்.

11. “செற்றமுங் கலாமுஞ் செய்யாதகலுமின்” (மணி. 1 : 63) கலாஅம்-போர்.

12. புறநா. 67 : 8-9; பட்டினப். 285.

உறையூரென்பதனை உறந்தையென முன்னோர்திரித்து வழங்கியதற்கு மேற்கோள்; தொல்.செய். சூ. 80, பேர்.; ந.

13. “திருமா வளவன் றெவ்வர்க்கோக்கிய, வேலினும் வெய்ய” (பட்டினப். 299 -300). ஓக்கிய - எடுத்த.

16. கிள்ளிவளவன் : பாட்டுடைத்தலைவன் பெயர்.

17. கடும்பகல்-பத்து நாழிகைமுதல்இருபது நாழிகை இறுதியாகவுள்ள காலம்.

18. “நயந்தோர்க்குத், தேரீயும்வண்கை யவன்” (கலித். 42); தேர் வீசுதல் : மதுரைக்.752.

20. “ஆடுவண் டிமிரா வழலவிர் தாமரை”(பெரும்பாண். 481)

16-21. புறநா. 11 : 11 - 7.

20-21. பொற்றாமரைப்பூவைப் பெறுவாய்.“உயவற்பாண, கிள்ளிவளவன்பாற் செல்வாயாயின்,செல்வமெய்துவை” எனக்கூறினமையால், இதுவும்பாணாற்றுப் படையாயிற்று.

(69)


1. “இன்சொலா லீத்தளிக்க வல்லாற்கு”(குறள், 387)

2 “அற்றங் காவாச் சுற்றுடைப்பூந்துகில்” (மணி. 3 : 139)

3 ‘தலைமகனால் தலைநின்று ஒழுகப்படுவனதருமார்த்த காமமென்பன; அம்மூன்றினையும் ஒரு பகலைமூன்று கூறிட்டு முதற்கட் பத்து நாழிகையும் அறத்தொடுபட்டுச்செல்லும்; இடையன பத்து நாழிகையும் அருத்தத்தொடுபட்டுச்செல்லும்; கடையன பத்து நாழிகையும் காமத்தொடுபட்டுச் செல்லும்; ஆதலால் தலைமகன் நாழிகையளந்துகொண்டுதருமத்தொடு படுவான், தலைமகளும் வேண்டவே தானும் வேண்டப்போந்துஅத்தாணி புகுந்து அறங்கேட்பதும் அறத்தொடு பட்டுச்செல்வதும் செய்யும்; நாழிகை யளந்து இடையன பத்துநாழிகையும் இறையும் முறையும் கேட்டு அருத்தத்தினொடுபட்டுவாழ்வானாம்’ (இறை. சூ. 40, உரை)