318
கொய்யடகு வாடத் தருவிற குணங்க
மயிலஞ் சாயன் மாஅ யோளொடு
பசித்தன் றம்ம பெருந்தகை யூரே
மனையுறை குரீஇக் கறையணற் சேவல்
5பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
குரற்செய் பீலியி னிழைத்த குடம்பைப்
பெருஞ்செய் நெல்லி னரிசி யார்ந்துதன்
புன்புறப் பெடையொடு வதியும்
யாணர்த் தாகும் வேந்துவிழு முறினே.

(பி - ம்.) 4 - 5. ‘யணற செலலப்,பாண’ 5. ‘நரம்பிசைநீரொடு’ 6 ‘குரசை பீலியினிளமைமூத்தகுடம்பை’, ‘குரசெய்பீலியினிமைமூத்த’, ‘பூத்த’7 ‘செய்செல்லின்’

திணையும் துறையும் அவை.

பெருங்குன்றூர்கிழார்.


(கு - ரை.) 1. கொய்த இலைக்கறிகள்வாடவும் கொண்டுவந்த விறகு உணங்கவும்.

2. மாஅயோள் - மாமை நிறத்தினையுடையவள்;மனைவி. மாமை - அழகிய நிறம்; “மாமைக் கவினே” (ஐங்குறு.35, 103, 134)

3. பசித்தன்று - பசித்தது. ஊர் பசித்தது.

4. கழுத்திற் கறுப்பினையுடைய ஆண்குருவி;“உள்ளிறைக் குரீஇக் காரணற் சேவல்” (நற்.181)

5. வயமான் - சிங்கம். 6. குடம்பை -கூடு.

7. நெல்லின் அரிசி - நெல்லொடுகூடிய அரிசி. ஆர்ந்து - உண்டு.

8. வாடிய ஆம்பற்பூவைப்போன்றசிறகுடைமையாற் புன்புறப் பெடை யென்றார்; “புன்புறப்புறவின் கணநிரை”(பதிற். 39 : 11)

4 - 8. “ஆம்பற் பூவின் சாம்ப லன்ன,கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ, முன்றி லுணங்கன்மாந்திமன்றத், தெருவி னுண்டாது குடைவன வாடி, இல்லிறைப்பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்” (குறுந்.46 : 1 - 5)

9. யாணர்த்து - புதுவருவாயினையுடையது.வேந்து - பகை வேந்தன். விழுமுறின்=விழுமமுறின் - துன்பமுற்றால்;“தன்னிறை விழுமுறினே” (புறநா. 314 : 7)

(318)