(கு - ரை.) 1. சாறு - விழா, ஈற்று -ஈனுதல். 2. ஞான்றஞாயிறு - அத்தமித்த சூரியன்;“ஞான்றுதோன் றவிர் சுடர்” (அகநா. 39); தொல்.தொகைமரபு, சூ. 29, இளம். மேற். 3. நிணக்கும் - பிணிக்கும்; “நிணந்தெனெஞ்ச நிறைகொண்ட கள்வனை” (சீவக. 1311). இழிசினன்- இழிவையுடையான்: புறநா. 287 : 2, 289 : 11; “இழிசினர்க்கேயானும் பசித்தார்க ணீதல், கழிசினங் காத்தல்கடன் (சிறுபஞ்ச. 77) 4. போழ் - பிளவு. ‘விரைவு’ என்னும்மெய்ப்பாட்டிற்கு மேற்கோள்; தொல். மெய்.சூ. 12, இளம். மு. சாறு........போரேயென்பது இழிந்ததன்மேல்வந்ததாலெனின்.....ஊசியினது விரைவு மற்றுள்ள விரைவின்உயர்ந்ததாதலின் அதுவும் உயர்ந்ததாம் (தொல்.உவம சூ. 3, இளம்.); “சாறுதலைக் கொண்டென.....என்னும்பாட்டினுள் உவமப்பொருளாகிய போழ்தூண்டூசிக்குப்பல அடைகூறி அதனோடு உவமிக்கப்படும் போர்த் தொழிலினையாதுமோரடையின்றி வாளாது கூறினானாயினும் உவமப்பொருளானே போர்த்தொழிற்குற்றதும் உணரக் கூறினானாம்;என்னை? உண்டாட்டும் கொடையும் உரனொடு நோக்கிமறுத்தலுமுதலாகிய உள்ளக்கருத்தினான் ஒரு கணத்துள்ளேபலவேந்தரை ஒருங்கு வேறற்கு விரைகின்றது போர்த்தொழிலென்பதுதெளியப்பட்டமையின்” (தொல். உவம. சூ. 20, பேர்.);‘சாறுதலைக் கொண்டென.........நெடுந்தகை போரே:இதனுள் ஆர்புனை தெரியல் நெடுந்தகை போர்த்தொழிலுவமையாகியபோழ்தூண்டூசித்தொழிற்குப் பல அடை புணர்ப்பினும்அவை யனைத்தும் போர்த்தொழில் விரைவையே சிறப்பித்துவந்தமையால் வழுவாகாது இலக்கணமாம்’ (இ. வி,.சூ. 641, உரை) (82)
1. “அகத்தடியாண் மெய்ந்நோவ” (தனிப்பாடல்)
|