(கு - ரை.) 1. வில் உலாவி நிமிர்ந்த மார்பு ; "சிலையுலாய் நிமிர்ந்த மார்பன்" (சீவக. 2976) 3. வலிதுஞ்சு தடக்கை - வன்மை நிலைபெற்ற பெரிய கையையுடைய. வாய்வாள் - குறிதப்பாத வாள். தடவென்னும் உரிச்சொல் பெருமையை யுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உரி. சூ. 24, சே.; உரி. 22, ந.; இ. வி.சூ. 284, உரை. 4. வள்ளியனாதல் - பெருங்கொடையை உடையானாதலை. 5. உள்ளலோம்புமின் - நினைத்தலைத் தவிர்மின். 16. வைகறையில். 7. "ஒருகண் மாக்கிணை யொற்றுபு" (புறநா. 392 : 5) 8. பாடு - ஒலி. தந்தை - பாட்டுடைத் தலைவன் தந்தை. 9. வஞ்சி - பகைமேற் செல்லுதலை. 11 - 2. "இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர், பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர், தேற்றா வீகையு முளதுகொல்" (புறநா. 140 : 7-9) 13. பெயர்த்தனெனாக - பெயர்க்க. 15. அதற்கொண்டு - அதனால். 16. "இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற" (புறநா. 390 : 20) மு. புறநா. 140. இப்பாட்டினைப் பொருநராற்றுப்படைக்கு மேற்கோளாகக் காட்டினர் ; தொல். புறத்திணை. சூ. 30, இளம்.; சூ 36, ந. இப்பாட்டு, புகழாப்புகழ்ச்சியென்னும் அணியின்பாற்படும். (394)
1. புதுக்கோட்டைக்குத் தெற்கே கோனாட்டில் எறிச்சியென்று பழையதோர் ஊர் உள்ளது; அதிற் பஞ்ச பாண்டவர் சுனைகளென்று ஐந்து சுனைகளும் ஒரு சிவஸ்தலமும் உள்ளன. இங்கே எறிச்சிலூரென்று அவ்வூரென்று கருதப்படுகின்றது.
|