257
செருப்பிடைச் சிறுபர லன்னன் கணைக்கால்
அவ்வயிற் றகன்ற மார்பிற் பைங்கட்
குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
செவியிறந்து தாழ்தருங் கவுளன் வில்லொ
5டியார்கொலோ வளியன் றானே தேரின்
ஊர்பெரி திகந்தன்று மிலனே யரணெனக்
காடுகைக் கொண்டன்று மிலனே காலைப்
புல்லா ரினநிரை செல்புற நோக்கிக்
கையிற் சுட்டிப் பையென வெண்ணிச்
10சிலையின் மாற்றி யோனே யவைதாம்
மிகப்பல வாயினு மென்னா மெனைத்தும்
வெண்கோ டோன்றாக் குழிசியொடு
நாளுறை மத்தொலி கேளா தோனே.

(பி - ம்.) 1 ‘செறுபரல்’ 3 ‘குச்சிநிரை...மேவாய்’

திணை - வெட்சி; துறை - உண்டாட்டு.
----------------

உண்டாட்டாவது:-
‘’தொட்டிமிழுங் கழன்மறவர்
மட்டுண்டு மகிழ்தூங்கின்று” (பு. வெ. 15)

(இ - ள்.) . . . . . . . . . திரண்டகாலையும் அழகிய வயிற்றினையும் பரந்தமார்பினையும் பசிய கண்ணினையும் குச்சுப்புல் நிரைத்தாற்போன்ற நிறம் பொருந்திய மயிரினையுடையதாடியினையும் செவியிறந்து முன்னே தாழ்ந்தகதுப்பினையுமுடையனாய் வில்லுடனே யார்தான் இவ்வளிக்கத் தக்கான்றான்? ஆராயின், ஊரைப்பெரிதும்நீங்கினதும் இலன் (பி - ம். நீங்கின்றுமலன்);தனக்கு அரணெனக் கருதிக் காட்டைக் கைக்கொண்டதும்இலன்; இற்றைநாட் காலையே பொருந்தாதாரது இனமாகியநிரை போகின்ற இடத்தைப் பார்த்துத் தன் கையாற்குறித்து மெல்ல எண்ணிக் கரந்தையார் செய்யும்பூசலைமாற்றி வில்லாலே கொடு போந்தனன்; அந்நிரைதாம்மிகப்பலவேயாயினும் என்னபயன்படும் எத்தன்மைத்தும்,பால்முதலியன பெய்யப்படாமையிற் சிறிதும் வெள்ளியமுகந்தோன்றாத பானையைக் காண்டலுடனே, நாட்காலத்துஉறைதெறிப்பக் கடையும் மத்தின் ஒலியைக் கேளாதபடிபிறருக்கு நேராகக் கொடுத்தல் (பி - ம். பிறர்க்குநோக்கிக் கொடுத்தல்) வல்லனாயினான், அவனுக்கு?-எ - று.

1 பகைவர் மேல் நடக்கவொட்டாதுஎதிரில் நின்று விலக்குதலின், ‘செருப்பிடைச் சிறுபரலன்னன்’ எனப்பட்டான்.

‘அன்ன’ என்று பாடமோதி,செருப்பிடைச் சிறுபரலோசைபோல நெடிய ஓசையையுடையகாலென்றுரைப்பாரும் உளர்.
யார்கொலென்றது அறியான்வினாதலன்றி வியப்பின்கண்வந்தது.

‘ஊர்பெரி திகந்தன்று மிலனே’என்பது நிரைகோட்கடுமை.

சிறுபரலன்னன் கவுளனாகிய அளியனானவன்றான்யார்கொல்லோ? தேரின் வில்லோடு ஊர்பெரிது இகந்தன்றும்இலனாய்க் காடு கைக் கொண்டதும் இலனாய்நோக்கிஎண்ணி மாற்றினான்; மாற்றிக் குழிசிகாண்ட லோடுமத்தொலி கேளாதோனாயினான்; அவனுக்கு அவைதாம்மிகப்பல வாயினும் என்னாம் எனக்கூட்டுக.

கேளாதோற்கென உருபுவிரித்துஉரைப்பினும் அமையும்.


(கு - ரை.) மு. வெட்சித்திணைத்துறைகளுள்,‘நோயின் றுய்த்தல்’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 3, இளம்.

13. உறை - துளி. (257)


1 ”தருக்கி யொழுகித் தகவல்லசெய்தும், பெருக்க மதித்தபிற் பேணாத செய்தும்,கரப்புடை யுள்ளங் கனற்று பவரே, செருப்பிடைப் பட்டபரல்” (பழமொழி, 224)