(கு - ரை.) 2. விண்டு - திருமால். பிறங்கல் - மலை ; இங்கே தானியப்போர். 3. முகடு - உச்சி. 2 - 3. “விண்டு வனைய வெண்ணெற் போர்வின்” (ஐங்குறு. 58) 4. பகடுதருபெருவளம் - எருது முதலியவைகள் உழுதுண்டாக்கிய பல பண்டம். 5. கெண்டி - கிண்டி. 6. அரியல் - கள். 7. பசித்தென - பசித்ததாக. 8. இரும்பேரொக்கல் - வறுமையாற்கரிந்த பெரிய சுற்றங்கள். 9. பண்பில - பண்பில்லாதன. 11. மருங்கு - சுற்றம். 12. ஆதலின் இவன் அளியன். 12 - 3. முருகு. 282 - 5. 15. நுழைமீன் - ஒருவகைமீன் ; நுழைந்துசெல்லுகின்ற மீனுமாம். 16. புதா - ஒருவகைநாரை ; இப்பெயர் போதாவெனவும் வழங்கும் ; “உள்ளு மூரலும் புள்ளும் புதாவும்” (சிலப். 10 : 117) 18. நின்வெய்யோளொடு - நின்னால்விரும்பப்பட்ட மனைவியோடு. 20. பதனறிந்து - காலமறிந்து. 21. ஆயிரம்விளைக - ஆயிரக்கலம் விளைக ; “வேலி, யாயிரம் விளையுட் டாகக், காவிரி புரக்கு நாடு” (பொருந. 246 - 8) (391)
|