(கு - ரை.) 1. துடி - ஒருவகைப்பறை. 2. எறிகோல் - பறையை அடிக்குங் குறுந்தடி. இழிசின -புலையா; புறநா. 82 : 3, 289 : 10. 3. கார்காலத்து மழை எய்யப்படும் அம்புகளுக்கு உவமை;“ஒடுங்கா ருடன்றவன் றானை வில்விசை, விடுங்கணையொப்பிற் கதழுறை சிதறூஉ” (பரி. 22 : 5 - 6); “பெயலுறழக்கணைசிதறி” (மதுரைக். 183); “மால்வரைத் தொடுத்துவீழ்ந்த மணிநிற மாரி தன்னைக், காலிரைத் தெழுந்துபாறக் கல்லெனப் புடைத்த தேபோன், மேனிரைத்தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி, கோனிரைத்துமிழும் வில்லாற் கோமகன் விலக்கி னானே” (சீவக.451) 4. வேலுக்குக் கெண்டை உவமம்; புறநா. 249 : 6. 3. பொலம்புனையோடை - பொன்னாற் செய்யப்பட்ட பட்டம்;புறநா. 3 : 7 - 11. 5 - 6. வால்மருப்பு - வெண்மையான கொம்பு. யானை...ஊன்றினும்: “கூற்றம்போற் கொடிய யானைக் கோடுழு தகன்றமார்பம், கீற்றுப்பட்டழகி தாகக் கிடக்கெனக்கொடுத்து நிற்பார்”, முளரிமுக நாகமுளை யெயிறுழுதுகீற” (சீவக. 782, 2870) 7. பீடு - பெருமை. 8. பொய்கையிற் பிறழ்ந்த வாளைமீன். 9. கூட்டுமுதல் - நெற்கூட்டிடத்தே. 10. தண்ணடை பெறுதல் இயல்பென்றபடி; “தண்ணடைபெறுதலுமுரித்தே” (புறநா. 297 : 8). படின் - இறந்தால். 11. தெய்வமகளிருடைய மணத்தை. நன்று - மிகுதியாக; உம்: அசைநிலை. 12. சுவர்க்கத்தில் அனுபவிப்பார். 13. பகையரசனுடைய சேனை. 14. வரவுகாண்டிர் - வருதலைப் பார்ப்பீராக. மு. வஞ்சித்திணைத்துறைகளுள், ‘மாராயம்பெற்றநெடுமொழி’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 7, இளம்.; சூ. 8, ந. (287)
|