300
தோறா தோறா வென்றி தோலொடு
துறுகன் மறையினு முய்குவை போலாய்
நெருந லெல்லைநீ யெறிந்தோன் றம்பி
அகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன்
5பேரூ ரட்ட கள்ளிற்
கோரிற் கோயிற் றேருமா னின்னே.

(பி - ம்.) 2 ‘துறுகண்மறை’ 4 ‘கற்பெய்’6 ‘போறரிற்கோரிற்றேரு’ ‘கோரிற்கோரிற்’

திணை - தும்பை; துறை - தானைமறம்.

அரிசில்கிழார்.


(கு - ரை.) 1. தோல் தா தோல்தா என்றி - கேடகத்தைக் கொடு, கேடகத்தைக் கொடுஎன்கின்றாய்.

2. துறுகல் - குண்டுக்கல்; ஐங்குறு.210, 239; துறுகல்லிலே உன்னை மறைத்துக் கொள்வாயாயினும்பிழைப்பாய்.

கு’ என்பது சாரியையாக வந்ததற்கு‘உய்குவை போலாய்’ என்பது மேற்கோள்; நன்.சூ. 243, மயிலை. ; நன். வி. சூ. 244.

3. நெருநலெல்லை - நேற்றைப்பகலில்;“நெருந லெல்லை யேனற்றோன்றி” (அகநா. 32 : 1)

3 - 4. நேற்றுப்பகலில் நின்னாலேஎறியப்பட்டவனுடைய தம்பி, அகலினிடத்துப் பெய்தகுன்றிமணியைப்போலக் கோபத்தாற் சுழலுங் கண்களையுடையவனாகி “வென்றிக் கணத்தை விடுத்தானகன்மீது பெய்த, குன்றிக் கணம்போற் சுழல்கண்ணழல் கொப்புளிப்பச் சென்று” (திருவிளை. 5 : 30)

குடிகோள்பற்றி வந்தவெகுளிக்கு மேற்கோள்;தொல். மெய்ப்பாடு. சூ. 10, பேர்.

6. ஓரிற்கோயிற்...னின்னே - ஒருவீட்டினுள்ளே கட்கோயைத் தேடுவதுபோல நின்னைத் தேடுகின்றான்;கோய் - கள்முகக்கும் பாத்திரம்; “கோய்வாயிற்கீழுயிர்க்கீ துற்றுக் குரைத்தெழுந்த, நாய்வாயு ணல்லதசை” (சிறுபஞ்ச. 17); “சாத்துக் கோயும் பூத்தகைச்செப்பும்” “கோலக் கோயுட் கொண்டுநிறை யமைத்த,சூடமை சாந்தும்” (பெருங். 3. 5 : 78, 9 : 43 - 4); “கோய்சொரி நறவ மென்னத் தண்புன லுகுக்குங்குன்றின்” (கம்ப. சேதுபந்தன. 25)

5 - 6. தொல். உவம. சூ. 37, பேர்.மேற்.

(300)