72
நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளைய னிவனென வுளையக் கூறிப்
படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையுந் தேரு மாவும்
5படையமை மறவரு முடையம் யாமென்
றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ
டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய
10என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலே னாகுக
ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் றலைவ னாக
15உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா வின்மையா னுறவே.

திணையும் து றையும் அவை.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்றநெடுஞ்செழியன் பாட்டு.

(இ - ள்.) நம்மாற் சிரிக்கத்தக்கார்இவன் ஆளும் நாட்டை மிகுத்துச் சொல்லுவாரெனவும்இவன்றான் இளையனெனவும் யான் வெறுப்பச் சொல்லிஒலிக்குமணி இருமருங்கும் ஒன்றோடொன்று மாறியிசைக்கும்பரந்த அடியினையும் பெரிய காலினையுமுடைய உயர்ந்தநல்ல யானையினையும் தேரையும் குதிரையையும் படைக்கலத்தொழில்அமைந்த வீரரையும் உடையேம் யாமென்று எனது மிக்கவலிக்கு அஞ்சாதே மாறுபடுஞ் சினம் பெருகிப்புல்லிய வார்த்தைகளைக் கூறிய சினம்பொருந்தியஅரசரைப் பொறுத்தற்கரிய போரின்கண்ணே சிதறப்பொருது முரசத்தோடுகூட அவரைக் கைக்கொண்டிலேனாயின், பொருந்திய எனது குடைநிழற்கண் வாழ்வார்,தாங்கள் சென்றடையும் நிழல் காணாதே கொடியன் எம்முடையவேந்தனென்று கருதிக் கண்ணீரைப் பரப்பிக் குடிமக்கள்பழிதூற்றும் கொடுங்கோலையுடையேனாகுக; உயர்ந்ததலைமையுடனே மேம்பட்ட கேள்வியையுடையமாங்குடிமருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்றபலரும் புகழும் தலைமையையுடைய புலவர் பாடாது நீங்குக,எனது நிலவெல்லையை; என்னாற் புரக்கப்படுங்கேளிர்துயரம் மிக இரக்குமவர்கட்குக் கொடாதவறுமையை யான் உற-எ-று.
என் நிழல் வாழ்நராகிய குடியென்க.

உளையக்கூறியதனைத் தம்மிடத்திருந்துகூறியதாகவும், சிறுசொற் சொல்லியதனைப் போர்க்களத்துஎதிர்ப்பட்டுக் கூறியதாகவும் கொள்க.

இவனென்றார், தம் கருத்துக்கண்அணுமையான்.

அகப்படேனாயினென்றது ஈண்டுப் பிறவினைமேல்நின்றது.

வேந்தரைத் தாத்கி அகப்படேனாயின்,கோலேனாகுக; இன்மை யானுற என் நிலவரை புலவர்பாடாதுவரைகவென மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க.

‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்’என்பதனை, நாட்டாரால் மீக்கூறப்பட்ட மந்திரிச்சுற்றமுதலாயினார்நகுதக்கனரெனப் பிரித்துரைப்பினும் அமையும்.

‘நிலவரைப் புரப்போர்’ எனவும்பாடம்.


(கு - ரை.) 1. நாடு மீக்கூறுநர் :காட்சிக் கெளியன் கடுஞ் சொல்லனல்லனேல், மீக்கூறுமன்ன னிலம்” (குறள், 386)

எள்ளல் நகையை விளக்குமிடத்து ‘நகுதக்கனரேநாடுமீக்கூறுநர் என்றாற்போல் வீரத்தெழுந்த வெகுளிநகையும் எள்ளல் நகையின்கண் அடக்கவேண்டும்’ என்பர்;தொல். மெய்ப்பாடு. சூ. 4. பேர்.

2. புறநா. 58, 77, 78; “பாம்புமரசும் பகையுஞ் சிறிதென, ஆம்பொரு ளோதின ரிகழார்”(பெருங். 4-10 : 130-31); “இளைய ரின முறைய ரென்றிகழார்நின்ற, ஒளியோ டொழுகப் படும்” (குறள், 698);“அளையுறை பாம்பு மரசும்.......இளைய வெளிய பயின்றனவென்றெண்ணி,இகழி னிழுக்கந் தரும்” (ஆசாரக். 84); “சீர்த்தகுமன்னர்........இளைதென்று பாம்பிகழ்வா ரில்” (பழ.383)

4. நெடுநல்யானை : புறநா. 57 : 11.

3-4. “படுமணி யிரட்டுமருங்கின்.....வேழம்” (முருகு. 80-82). பாவடி : புறநா.15 : 8.

4-5. “திணைவிராயெண்ணல் வழுவென்பதேகருத்தாயின், ‘நெடுநல் யானையுந் தேரு மாவும்,படையமை மறவரு முடையம்யாம்’ எ - ம். ‘இருமனப் பெண்டிருங்கள்ளுங் கவறும்’ எ - ம், படர்க்கைச் சொல்லும்அஃறிணைக் கிளவியும் விராயெண்ணுதல் வழக்குப் பயிற்சியுடைமையான்அவையும் அடங்க ‘உயர்திணைச் சொல்லே யஃறிணைக்கிளவி’ எனப் பொதுப்பட ஓதாது ‘தன்மைச் சொல்லேயஃறிணைக் கிளவி’ எனத் தன்மைச்சொல்லையே விதந்தோதல்குன்றக்கூறலாமாகலானும் அவர்க்கது கருத்தன்மையறிக”(தொல். கிளவி. சூ. 45, சே.)

3-5. நாற்படை : புறநா. 55 : 7 - 8,351 : 1 - 3.

4-6. உடைமையென்னும் மெய்ப்பாட்டிற்குமேற்கோள;் தொல். மெய்ப்பாடு. சூ. 12, இளம்.

7. சிறுசொல் : சீவக. 207; சூளா.அரசியல். 317.

6-7. ‘உறுதுப்பஞ்சா......வேந்தரையென்பதுகொலை பொருளாக வெகுளிச்சுவை பிறந்தது; என்னை? சிறுசொற்சொல்லுதலென்பதுபுகழ்கொன்றுரைத்தலாகலின்’ (தொல். மெய்ப்பாடு.சூ. 10, பேர்.) இ. வி. 578, மேற்.

8-9. புறநா. 25 : 5 - 7 ஆம் அடிகளின்குறிப்புரையைப் பார்க்க; துளங்குகுடி விழுத்திணைதிருத்தி முரசகொண், டாண்கட னிறுத்த”, “இருபெருவேந்தரையு முடனிலை வென்று, முரசுங் குடையுங் கலனுங்கொண்டு” (பதிற். 31; 8-ஆம் பத்துப் பதிகம்)

6-9. வெகுளிச்சுவைக்கு இவ்வடிகள் மேற்கோள்;தொல். மெய்ப்பாடு. சூ. 10, இளம்.

12.“வன்பழி தூற்றுங் குடியதேமாமதுரை”, “குடிபழி தூற்றுங் கோலனு மல்லன்”(சிலப் 19 : 28, 23 : 34)

11-2. ‘பெயர்’ என்பதற்கு ‘வஞ்சினம்’எனப் பொருள் கூறி, ‘கொடியனெம்.....கோலே னாகுக’என்னும் பகுதியை மேற்கோள் காட்டி, ‘கூறும் வஞ்சினத்தால்தனக்கு ஒருபெயர் பெறுதலின் வஞ்சினத்தைப் பெயரென்றார்’என விசேடவுரையும் எழுதினர்; பட்டினப். 289, ந.

13-6. இவ்வடிகளிலுள்ள கூற்றுக்களால்,இவனது அவைக்களத்துப் புலவர்களுள், மாங்குடிமருதனார்தலைவரென்பதும், இவன் அவர் பாடலில் மிக்கவிருப்புடையவனென்பதும், இதுபற்றியே இவன் மீது அவர்மதுரைக்காஞ்சி யென்னும் நூலை இயற்றினாரென்பதும்ஊகித்தறியற் பாலன.

17. புரப்போர் : செயப்பாட்டு வினையாலணையும்பெயர்.

18. “சாதலி னின்னாத தில்லையினிததூஉம், ஈதலியையாக்கடை” (குறள், 230) என்பதுஇவ்வடியின் பொருளை வலியுறுத்துகின்றது.

17-8. புறநா. 71 : 6, குறிப்புரை;“கலிமா னோயே கலிமா னோயே, நாகத் தன்ன நன்னெடுந்தடக்கைக், காய்சின யானைக் கலிமா னோயே, வெள்ளத்தானைமுன்.....முன், னுள்ளழித்துப் புகேஎ னாயி னுள்ள,திரப்போ னின்மை கண்டும், கரப்போன் சிறுமை யானுறுகவ்வே” (தகடூர்யாத்திரை)

மு. காஞ்சித் திணைத்துறைகளுள்,இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத் துன்னருஞ் சிறப்பின்வஞ்சினங் கூறியதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 19, இளம்.; 24, ந.; “மன்னர்நுங்கள் புறக்கொடை கண்டு ........கலப்ப லன்றேல், எரிசுடர்வழங்கும் வையத் தென்பெயர் கெடுக வென்றான்” (சீவக.773) என்பதன் விசேடவுரையில், ‘இது சீவகன் வஞ்சினம்.இது, முன் இளமை முதலியவற்றை அவ்வரசர்கொன்று கூறுதலின்அக்கொலை பொருளாகப் பிறந்த வெகுளியென்னும் மெய்ப்பாடு.இது நகுதக்கனரே என்னும் புறப்பாட்டினுட் கண்டுகொள்க.’என்று எழுதியிருக்கின்றனர் நச்சினார்க்கினியர்.

(72)