274
நீலக் கச்சைப் பூவா ராடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே
தன்னுந் துரக்குவன் போலு மொன்னலர்
5எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே.

(பி - ம்.) 4 ‘துரக்குநன்’ 7 ‘மொய்கொண்டனனே’

திணை - அது; துறை - எருமைமறம்.

உலோச்சனார்.


(கு- ரை.) 1 - 2. “கொன்றைகமழ்முடியோனும் வேணியினைப் பின்னல்படு குஞ்சியாக்கித், துன்றுமயிற் பீலிநெடுங் கண்ணிதிரு நெற்றியுறச்சுற்றினானே” (வி. பா. அருச்சுனன்றவநிலை. 82);“கானிறை குஞ்சிச் சூட்டிற் களிமயிற் கலாபஞ்சூடி”, “வேடுருவாகி நின்றான்”, “குஞ்சிக்கங்குல்வாய்ச் சிலைபோல் வெட்சிக் கண்ணி சூழ்கலாபச் சூட்டும்” (திருவிளை. 22: 25, 37: 13 - 4)

3. “கைவேல், களிற்றொடுபோக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்” (குறள்,774); “மறவன் நெருப்பிமையாக், கைக்கொண்டவெஃகங் கடுங்களிற்றின் மேற்போக்கி” (பு.வெ. 140)

2 - 7. “கொல்லேறு பாய்ந்தழிந்தகோடுபோற் றண்டிறுத்து, மல்லேறு தோள்வீமன் மாமனைப்- புல்லிக்கொண், டாறாத போர்மலைந் தானங்கரசர்கண்டார்த்தார், ஏறாட லாய ரென” (பாரதம்)

மு. தும்பைத்திணைத்துறைகளுள்,படையறுத்துப் பாழிகொள்ளு மேமமென்பதற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 14, இளம்.; சூ. 17, .

(274)