(கு - ரை.) 1. பருதி - சூரியன். பயம் - பிரயோசனம். 2. பகல் - நாள்; ஒரு முகூர்த்தமுமாம். எழுவரைத் தலைவராக எய்திய அத்தன்மையையுடையது. 3. வையம் - பூமி. தூக்கின் - சீர்தூக்கினால். 4. ஐயவி - வெண்சிறுகடுகு. ஆற்றாது - சீர் நில்லாது. 3 - 4. தவத்திற்கு வையம் ஐயவியளவும் நிறையொவ்வாது; சீவக. 2983; "ஏமநீ ருலகமோ ரிம்மிப் பாலென, நாமவே னரபதி நீக்கி நன்கலம், தூமமார் மாலையுந் துறக்கின் றானரோ" (சீவக. 3027) 5. காதலர் - வீட்டில் விருப்பமுடையோர். 6. பற்றுவிட்டோரை ; "நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான். றன்னையே தான்வேண்டுஞ் செல்வம்" (திவ். பெருமாள். 5 : 9) 7. விடாதோர் - விருப்பமொழியாதவர்கள். மு. தொல். புறத்திணை. சூ. 21, ந. மேற். (358)
|