301
பல்சான் றீரே பல்சான் றீரே
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரி னிட்ட வருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே
5முரசுமுழங்கு தானைநு மரசு மோம்புமின்
ஒளிறேந்து மருப்பினுங் களிறும் போற்றுமின்
எனநாட் டங்குநும் போரே யனைநாள்
எறியா ரெறிதல் யாவண தெறிந்தோர்
எதிர்சென் றெறிதலுஞ் செல்லா னதனால்
10அறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே
பலமென் றிகழ்த லோம்புமி னுதுக்காண்
நிலனளப் பன்ன நில்லாக் குறுநெறி
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
15வேந்தூர் யானைக் கல்ல
தேந்துவன் போலான்ற னிலங்கிலை வேலே.

(பி - ம்.) 5 ‘தானையு மரசும்’ 7‘நாட்டாகு’ ‘யானைநான்’ 9 ‘சொல்லானதனால்’10 ‘அறிந்தோ ராயவன்’ 14 ‘எல்லிடப் பட்டாதந்தோனே’16 ‘போலானினங்கிலை’

திணையும் துறையும் அவை.

ஆவூர்மூலங்கிழார்.


(கு - ரை.) 1. சான்றோர் -போர்வீரர்; “தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்”(புறநா. 63) என்பதும் “சான்றோர் மெய்ம்மறை”(பதிற். 14 : 12) என்னுமிடத்து ‘ஈண்டுச் சான்றோரென்பதுபோரில் அமைதியையுடைய வீரரை’ என்னும் அதன் உரையும்அறிதற்பாலன.

2 - 3. மணஞ்செய்யப் பெறாத கன்னியரின்கூந்தல் ஓராடவராலும் தீண்ட வொண்ணாமையால்,பகைவராற் றீண்டமுடியாத முள்வேலிக்கு அஃது உவமைகூறப்பெற்றது.

4. கல்லென்பாசறை - கல்லென்னும்ஓசைபட ஒலிக்கின்ற படை வீடு.

5. “முரசுமுழங்குதானை...மூவர்” (புறநா.35 : 3 - 4)

6. “ஒளிறேந்து மருப்பிற் களிறு” (புறநா.335 : 10; நற். 284 : 9)

7. எனைநாள் - எத்தனைநாள்.

8 - 9. தன்னை எறியாதாரை எறிவதென்பதுஎங்குள்ளது? எதிர்ந்தோரையும் எதிர்த்து எறிதல்செய்யானாகச் செய்தே எறியாரை இவனெறிதல்யாண்டுளது? இல்லை யென்றபடி.

10. அவன் கருதிய காரியத்தை அறிந்தவர்யாவர்?

11. பலம் - பலராகவுள்ளேம்; புறநா.79 : 5 - 6; ‘வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால்அதற்கு வீரனஞ்சான்’ (குறள், 763, பரிமேல்.) என்பதும்,“மறுமனத்த னல்லாத மாநலத்த வேந்த, னுறுமனத்தனாகியொழுகிற் - செறுமனத்தார், பாயிரங் கூறிப்படைதொக்கா லென் செய்ப, ஆயிரங் காக்கைக்கோர்கல்” (பழ. 165) என்பதும், “தடத்திடைக்காக்கை யொன்றே யாயிரங் கோடி கூகை, இடத்திடையழுங்கச் சென்றாங் கின்னுயிர் செகுத்த தன்றே’ (சீவக.1927) என்பதும் இவ்வடியின் கருத்தை வலியுறுத்தும்.

13. பரி - நடை; “வளிதொழி லொழிக்கும்வண்பரிப் புரவி” (புறநா. 304 : 3)

14. எல் - இரவு. 16. ஏந்துவன்போலான் - ஏந்தான்.

15 - 6. யானைப்போர்க்கு வேல் உரித்தென்பர்;“மேல்வருங் களிற் றொடு வேறுரந்து”, “வேலினட்டகளிறு”,“கறையடி யானைக் கல்ல, துறைகழிப் பறியா வேலோன்”(புறநா. 274, 302, 323); “ஒன்றாயினும் பலவாயினுமோரோச்சினு ளெறிய, வென்றாயின மதவேழமு முளவோவெனவினவிப், பொன்றாழ்வரைப் புலிப்போத்தெனப்புனைதார் மிஞிறார்ப்பச், சென்றானிகல்களிறாயிர மிரியச்சின வேலோன்” (சீவக.2262)

13 - 6. ‘’கரிமேலோன் தொட்டதுகழலே கையது வேலே, சுட்டி யதுவும் களிறே..............யானைகாமினவன் பிறிதெறி யலனே.” இச்செய்யுள்புறத்திரட்டிற் கண்டது.

மு. பொருளின்றியுய்த்த பேராண்பக்கத்தின்பாற்படுமென்பர்: தொல். புறத்திணை. சூ. 8, .

(301)