270
பன்மீ னிமைக்கு மாக விசும்பின்
இரங்கு முரசி னினஞ்சால் யானை
நிலந்தவ வுருட்டிய நேமி யோரும்
சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே
5நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்
சிறுவர் தாயே பேரிற் பெண்டே
நோகோ யானே நோக்குமதி நீயே
மறப்படை நுவலு மரிக்குரற் றண்ணுமை
இன்னிசை கேட்ட துன்னரு மறவர்
10வென்றிதரு வேட்கையர் மன்றங் கொண்மார்
பேரம ருழந்த வெருவரு பறந்தலை
விழுநவி பாய்ந்த மரத்தின்
வாண்மிசைக் கிடந்த வாண்மையோன் றிறத்தே.

(பி - ம்.) 2 ‘முகிலி னினஞ்சால்’

திணை - கரந்தை; துறை - கையறுநிலை.
கழாத்தலையார்.

கண்டார் தாய்க்குச் சொல்லியது.


(கு - ரை.) 1. மாகவிசும்பு: புறநா.35: 18, குறிப்புரை.

2 - 3. ஒலிக்கும் முரசினையும் இனமிக்கயானைகளை நிலத்தில் மிகச் செலுத்திய ஆஞ்ஞாசக்கரத்தையுமுடையஅரசர்களும்.

4. வேட்ப - விரும்புவார்.

5. நல்ல மணமுடைய பொருள்களை நீக்கியதனால்மணமில்லாத வெளுத்த தலைமயிரை யுடையதாய் (6) எனக்கூட்டுக; புறநா. 276: 1.

8. அரிக்குரல் - அரித்தெழுகின்றஓசை. அரிக்குரற்றண்ணுமை: புறநா. 249: 4, 369: 21, 396:4.

12. நவி - கோடாலி. மரத்தின் -மரத்தைப்போல.

13. “கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற்,சென்ற வுயிரினின்ற யாக்கை, இருநிலந் தீண்டா வகை”(தொல். புறத்திணை. சூ. 16); “அப்பணைக் கிடந்தகாளை” (தகடூர்யாத்திரை)

ஆண்மையோன்றிறத்தை (13) நேமியோரும்(3) வேட்ப (4) என்க; பு. வெ. 76-ஆம் பாடலைப்பார்க்க.

(270)