(பி - ம்.) 1 ‘மீக்கூறத்’ திணையும் துறையும் அவை. கல்லாகியும் இடங்கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது. (இ - ள்.) பலர்க்கும் அருளுடைமையான் நிழலையொத்து உலகத்தார் மிகுத்துச் சொல்ல 1உலகத்தையாளுந்தன்மை முடியச்செலுத்துதற்கு மறுமையை நினைத்தால் முடிவுபோகாமையின் வடக்கிருத்தற்கு வரைந்த சிறிய இடத்தின்கண் இருந்து உயிர்நீத்தலின் நிலைபெற நடப்பட்ட கல்லான இடத்தும் இடங்கொடுத்தளிப்பர் நிச்சயமாக; உடம்போடு இனியவுயிர் விரும்பு மாறுபோல விரும்பும் உரிமையையுடைய பழையதாகிய நட்பையுடையோர் தம்மிடத்தே செல்லின்-எ - று. மீக்கூறியென்பது மீக்கூறவெனத் திரிக்கப்பட்டது; ஆணைகூறி யென்றுமாம். தொன்னட்புடையோர் தம்முழைச் செலின், இடங்கொடுத்தளிப்ப வெனக் கூட்டி வினைமுடிவுசெய்க. அவன் நட்பினை வியந்து கூறியது. |