(கு - ரை.) 2. துடியன் - துடிப்பறைகொட்டுபவன். 3. வளைந்த கரிய கோட்டையும் இனியநரப்புத் தொடையையுமுடைய சிறிய யாழ். 4. தோல் - கேடகம். 3 - 4. “தேஎந் தீந்தொடைச் சீறியாழ்ப்பாண” (புறநா. 70 : 1) 5. கடுந்தெற்று மூடை - நெருங்கத்தெற்றின தானியக்கோட்டை; மூடை - குதிருமாம்; “கடுந்தெற்றுமூடையி னிடங்கெடக் கிடக்குஞ்சாலி” (பொருந.245 - 6) 6. மலைந்த - சூடிய. 7. அரசகாரியத்தைச் செய்யும் அரியதலைமையையுடைய சுற்றம். 8. மொசிதல் - மொய்த்தல்; பதிற்.11 : 12, 46 : 8. 10. செம்மல் உக்கு ஓஒ. 11. பகைவரைக் கோபிக்கின்றநெடியவேல் மார்பினுட் போதலால்; “எஃகுளங் கழிய”(புறநா. 282 : 1) 14. குருசிலென்பது அவனென்னும் பொருளில்வந்தது. 13 - 4 புகழுக்கு நாணுதல் : புறநா.152 : 21 - 2, குறிப்புரை; கலித். 119 : 9. 15. தண்ணடை : மருதநிலத்தூர்; புறநா.287 : 10. 14 - 5. பிணங்குகதிர் அலமரும் கழனி- பின்னிய நெற்கதிர் சுழலும் வயல்; புறநா. 338 :10. 16. வறுமையையுடைய சுற்றத்தார்க்குத்தலைவனென்றது, ஓரிரவலனை. நல்கினனெனப் (17) பரந்தோரெல்லாம்புகழக் (13) குருசில் இறைஞ்சியோனென்க (14) (285)
|