(கு - ரை.) 1. மடுப்ப - உண்பிக்க. 2. அஞ்சி - ஒருகுறுநில மன்னன். ஒடு -ஆல். 1 - 2. “பிரசங் கலந்த வெண்சுவைத்தீம்பால், விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்,புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோ, லுண்ணென்றோக்குபு புடைப்ப” (நற். 110 : 1 - 4) 3. உயவு - கவலை. இனி - இப்பொழுது. 4. ஆனான் - அமையானாகி. 5. முன்னாள்- முதல்நாள். 6. புண்ணில் ஒன்றிய அம்பை யான்உன்னிலனென்பான். 7. புறநா. 273 : 3; ஐங்குறு. 202. 8. தோல் - யானை; கேடகமுமாம். அணல்- தாடி; “மையணற்காளை” (புறநா. 83) (310)
|