272
மணிதுணர்ந் தன்ன மாக்குர னொச்சி
போதுவிரி பன்மர னுள்ளுஞ் சிறந்த
காத னன்மர நீமற் றிசினே
கடியுடை வியனகர்க் காண்வரப் பொலிந்த
5தொடியுடை மகளி ரல்குலுங் கிடத்தி
காப்புடைப் புரிசை புக்குமா றழித்தலின்
ஊர்ப்புறங் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையு நினதே.

(பி - ம்.) 3 ‘மரனீழற்றிசினே’5 ‘கொடியணிமகளிர்’, ‘தொடையுடை’

திணையும் துறையும் அவை.

மோசிசாத்தனார்.


(கு - ரை.) 1. நீலமணி பூத்தாற்போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சியே; “மணியேர்நொச்சி”, “மணிக்குர னொச்சி” (நற்.184: 9, 293: 1)

1 - 3. நொச்சியே! நீ காதல் நன்மரமென்க.

4. கடியுடை வியனகர்: புறநா. 95: 3.

1 - 5. புறநா. 271: 1 - 4.

6 - 8. “எயில்காத்த னொச்சி”(“வெட்சிநிரைகவர்தல்” என்னுஞ் செய்யுள்);“கருங்குர னொச்சி மிலைந்த, திருந்துவேல் விடலை”தகடூர் யாத்திரை; “பல்சான்றீரே” என்னுஞ்செய்யுள்:புறத்திரட்டு, 1341: 10.

மு. உழிஞைத்திணைத்துறைகளுள்,‘அகத்தோன் வீழ்ந்தநொச்சி’ என்பதற்கு இதனைமேற்கோள்காட்டி, ‘இது சூடினநொச்சியைப்புகழ்ந்தது’ என்பர்; தொல். புறத்திணை. சூ. 13, .

(272)