(கு - ரை.) 1. "குன்றக் குறவ னார்ப்பி னெழிலி, நுண்ப லழிதுளி பொழியு நாட" (ஐங்குறு. 251); "ஏனற் பசுங்கதி ரென்றூழ்க் கழிய வெழிலியுன்னிக், கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா", "இறவரை யும்பர்க் கடவுட் பராய்நின் றெழிலியுன்னிக், குறவரை யார்க்குங் குளிர்வரை நாட" (திருச்சிற். 159, 260) 'என' என்னும் இடைச்சொல் வினைப்பொருண்மைகுறித்து வந்ததற்கு மேற்கோள்; தொல். இடை. சூ. 10, சே; இ. வி. சூ. 255, உரை. 1-2. "வையக முற்று மாமழை மறந்து வயலி னீரிலை மாநிலந் தருகோம், உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன வொளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும், பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும், செய்கை கண்டுநின் றிருவடி யடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே" (தே. சுந்தர.) 4. கண்மாறல் : குறுந்.125 : 7; கலித். 46 ; 18. 5. புறநா. 168 : 6 - 7. 9. "பறையிசை யருவி" (புறநா.126 ; 8) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. "புணரி, குணில்பாய் முரசி னிரங்குந் துறைவன்" (குறுந். 328) 12. புறநா. 130 ; 3, குறிப்புரை. "மலைவளம் புகழ்ந்தும்" (பெருங். 2, 12: 134) 13. இகுத்தல் - சொரிதல் : மலைபடு.226. 14. "கருங்கால் வெண்குருகு மேயும், பெருங்குள மாயிற்றென் னிடைமுலை நனைந்தே" (குறுந். 325 : 5 - 6) 13 - 4. "அரிமதர் மழைக்கண்ணீ ரலர்முலைமேற் றெறிப்பபோல்" (கலித்.77: 4); "முலைமேல், வடிக்கேழ் மலர்நெடுங்கண் வார்புயலுங்காலும்" (சீவக. 2049) 15. "நெய்த லுண்கண் பைதல் கூரப், பின்னிருங் கூந்தன் மறையினள் பெரிதழிந், துதியன் மண்டிய வொலிதலை ஞாட்பி, னிம்மென் பெருங்களத் தியவ ரூதும், ஆம்பலங் குழலி னேங்கிக், கலங்கஞ ருறுவோள்" (நற்.113); "குழலினு மினைகுவள் பெரிதே" (ஐங்குறு.306); "சிறுகுழல்........இனைதியோ வெம்போல" (கலித்.129 : 16 - 8); "குழலேங்கு மாறேங்கி யழுதார் கோதை மடவாரே" (சீவக.2945); "வேய்ங்குழல் விளிகொ ணல்யாழ் வீணையென் றினைய நாண, வேங்கினள்" (கம்ப.கிட்கிந்தா. அரசியல். 3) (143)
1 நெருநற்று : "நெருநற்றுச் சென்றாரெங் காதலர்" (குறள்,1278)
|