314
மனைவிக்குவிளக் காகிய வாணுதல் கணவன்
முனைக்குவரம் பாகிய வென்வே னெடுந்தகை
நடுகற் பிறங்கிய வுவலிடு பறந்தலைப்
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
5குடியு மன்னுந் தானே கொடியெடுத்து
நிறையழிந் தெழுதரு தானைக்குச்
சிறையுந் தானேதன் னிறைவிழு முறினே.

(பி - ம்.) 6 ‘நிறையறிந்தெழுந்தரும்’,‘நிறையறிந்தெழுதரு’

திணையும் துறையும் அவை.

ஐயூர் முடவனார்.


(கு - ரை.) 1. “மனைக்கு விளக்கமடவாள்” (நான்மணிக். 104)

2. முனை - போர். வென் - வெற்றி.

3. நடுகல் மிகுந்த பறந்தலை, உவலிடுபறந்தலையெனக் கூட்டுக; உவலிடு - தழைகளைப் பெய்த;பறந்தலை - பாழ்பட்ட இடம்.

4. புல்லிய கொட்டையையுடைய நெல்லி.வன்புலம் - குறிஞ்சியும் முல்லையும்.

5. குடிமக்களுளொருவனும் தானே; மன்,உம்: அசைநிலை.

6. நிறை - நிறுத்தப்படுதல், “நிறையருந்தானை” (சிலப். 25 : 178)

7. சிறை - காவல். இறைவிழுமுறின் -அரசன் துன்பமுற்றால்; “வேந்துவிழு முறவே” (புறநா.316 : 12)

(314)