(பி - ம்.) 1 ‘மூத்தோர்க்கூற்றமுய்த்தெனவுய்த்தென’7 ‘னாயிற் கழுநீர்’, ‘கழிநீர்’ திணை - அது; துறை - பொருண்மொழிக்காஞ்சி(பி - ம். பொது மொழிக்காஞ்சி). சோழன் நலங்கிள்ளி பாட்டு. (இ - ள்.) தம் குடியின் முதியோரைமுதியோரைக் கூற்றம் கொண்டு போயிற்றாக, விதிதரப்பட்டுத் தம்பால்வந்த பழையவெற்றியால் உண்டாகியஅரசுரிமையைப் பெற்றேமானால் இத்தலைமையைப்பெற்றேமெனக்கொண்டுதம் குடிமக்களை இறைவேண்டியிரக்கும்,மிகுதியில்லாத ஆண்மையையுடைய உள்ளஞ்சிறியோன்பெறின், அத்தாயம் அவனுக்குப் பரிக்கவொண்ணாதாம்படிகனத்தது, மிகவும்; அடுத்துப்பொரும் போரைப் பொறுக்கும்மனவெழுச்சியை யுடைத்தாகிய வலிய முயற்சியையுடையசீரியோன் பெறுவனாயின், தாழ்ந்த நீரையுடைய வற்றியகயத்திடத்துச் சிறிய தண்டாகிய வெளிய கிடேச்சினதுகோடைக்கண் உலர்ந்த சுள்ளியைப்போலப் பெரிதும்நொய்து, குற்றமற்று விண்ணின் கண்ணே பொருந்த உயர்ந்தவெண்குடையினையும் முரசினையுமுடைய அரசரது அரசாட்சியைப்பொருந்திய செல்வம்-எ - று. குடிபுரவிரக்குமென்பது, குடிமக்களைக்கொள்ளுங்கடமையன்றி மிகத்தர வேண்டுமென்று இரத்தலை. தாயம் சிறியோன் பெறின், அதுமிகவும் சிறந்தன்று; வேந்தர் அரசு கெழுதிருவிழுமியோன் பெறுகுவனாயின், நன்றும் நொய்தாலெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. மன்: ஆக்கத்தின்கண்வந்தது. அம்ம:அசைநிலை. |