திணையும் துறையும் அவை. சேரமான் கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டுதுஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு. (இ - ள்.) எப்படிப் பெரிதாயினும்யானுற்ற நோயினது எல்லை எவ்வளவாயிற்று, என்னுயிரைப்போக்கமாட்டாத வலியையுடைத்தல்லா மையால்?கள்ளி வளரப்பட்ட புறங்காட்டுள் வெள்ளிடையின்மூட்டிய தீயை விளைக்கும் சிறிய விறகையுடைய படுக்கையின்கண்ஒள்ளிய அழலாகிய பாயலின்கண்ணே பொருந்தப்பண்ணிமேலுலகத்தே போயினாள், மடவாள்; அவள் மாயவும் இன்னமும்உயிரிருந்துவாழ்வேன்; இவ்வுலகியற்கை இருந்தவாறுஎன்னோ! - எ - று. எனைத்தென்றது, உயிரைப் போக்கமாட்டாமையின்நோயை இகழ்ந்து கூறியவாறு. ‘பாவை சேர்த்தி’ என்றோதிஅவளுடம்பை அழகுபடப் பள்ளியுட் கிடத்தியென்றுஉரைப்பாரும் உளர். உயிர் செகுக்கலாமைக்குக் காரணம்மதுகையுடைத்தல்லாமையென வுணர்க. பாயல்சேர்த்தி இன்னும்வாழ்வலெனஇயையும். சேர்த்தவெனத் திரிப்பினும்அமையும். ‘ஞாங்கர் மாய்ந்தனள்’ என்பதற்குஎன்னை நீத்து முன்னே இறந்தாளென்றுமாம். |