88
யாவி ராயினுங் கூழை தார்கொண்
டியாம்பொருது மென்ற லோம்புமி னோங்கு திறல்
ஒளிறிலங்கு நெடுவேன் மழவர் பெருமகன்
கதிர்விடு நுண்பூ ணம்பகட்டு மார்பின்
5விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோ ளென்னையைக் காணா வூங்கே.

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) எப்பெற்றிப்பட்டீராயினும்,அணியையும் தூசியையும் கொண்டு யாம் அவனோடு பொருவோமென்றுசொல்லுதலைப் பாதுகாமின், உயர்ந்த வலியையுடைய 1பாடஞ்செய்யும் விளங்கிய நெடிய வேலையுடையஇளையோர்க்குத் தலைவனாகிய சுடர்விடுகின்றநுண்ணிய தொழிலையுடைய பூணணிந்த அழகிய வலியமார்பினையும் 2 களவேள்வி முதலாகியவிழாச்சிறந்த நல்ல போரைச் செய்யும் முழாப்போலுந்தோளினையுமுடைய என் இறைவனைக் காண்பதற்குமுன்; கண்டால்அது செய்தல் அரிதாகலான்-எ - று.

என்னையைக் காணாவூங்கு யாவிராயினும்பொருதுமென்றல் ஓம்புமினெக் கூட்டுக.


(கு - ரை.) 1. கூழை, அணி - பின்படை.3. மழவர் - ஒருவகை வீரர்; புறநா. 90 : 11; “உருவக்குதிரை மழவர்” (அகநா. 1 : 2); “கழற்கான்மழவர்”, “பெருந்தோண் மழவர்” (மதுரைக்.395, 687). ஒளிறிலங்கு நெடுவேல் : புறநா. 57 : 8.

4. அம்பகட்டு மார்பு : புறநா. 59: 1, பி-ம் : 96 : 1.

5. புறநா. 84 : 4.

6. ஊங்கு-இங்கே காலமுன்; புறநா.76 : 3, 141 : 7.

(88)


1. புறநா. 57 : 8, குறிப்புரை.

2. புறநா. 372 : 12 “அரசுபடவமருழக்கி, முரசுகொண்டு களம் வேட்ட” (மதுரைக்.128-9) குறிப்புரை.