(கு - ரை.) 1. வயலைக்கொடி -பசலைக்கொடி. மருங்குல் - இடை. 2. வருந்துதலையுடைய ஊர்ந்து செல்லுகின்றநடையினையுடைய இளம்பருவத்து அந்தணன்; ‘’ஒல்லெனீர்ஞாலத் துணர்வோ விழுமிதே, நல்லிசை முச்செந்தீநான்மறையோன் - செல்லவும், வென்றன்றி மீளா விறல்வேந்தர்வெம்பகை, என்றன்றி மீண்ட திலர்” (பு. வெ.172) தன்மையென்னும் மெய்ப்பாட்டிற்குஇவ்வடி மேற்கோள்; ‘தன்மை யாவது - சாதியியல்பு;பார்ப்பார் அரசர் இடையர் குறவரென்றின்னோர்மாட்டு ஒருவரையொருவர் ஒவ்வாமற் கிடக்கும் இயல்பு’(தொல். மெய்ப்பாடு. சூ. 12, இளம்.) 1 - 2. அகநா. 337 : 7 - 9. 3. எல்லி - இரவு. நில்லாது புக்கு -வாயில்காவலனாற் சொல்லி விடாதே அரசனிடம்போய்; ‘’அருமறை நாவி னந்தணர்க் காயினும்,அடையா வாயிலவ னருங்கடை குறுகி” (சிறுபாண்.204 - 6) 4. சொல்லிய சொல்லோ சில : ‘’பலசொல்லக்காமுறுவர் மன்றமா சற்ற, சிலசொல்ல றேற்றா தவர்”(குறள், 649) 5. சீப்பு - கதவுக்கு வலியாகஉள்வாயிற்படியிலே நிலத்தேவீழ இடும் மரம்; சிலப்.15 : 215, அடியார். இஃது ஒருவகைத் தாழ். 6. மாண்வினையானை - மாட்சிமைப்பட்டதொழிலையுடைய யானை; மாட்சிமையாவது, போரிலே எதிர்த்தாலன்றிமற்ற இடத்து ஓருயிரையும் துன்புறுத்தாமை; “வினைநவில்யானை”, “தொழினவில் யானை” (பதிற். 82,84). மணி - யானையின் இருபக்கத்தும் அணியப்படும் மணி;“மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா” (இன்னா.14) மு. அந்தணன் தூது சென்றதற்கும்(தொல். அகத்திணை. சூ. 28, இளம்; 26, ந.; நம்பி.சூ. 75; இ. வி. சூ. 443, உரை), தூதருரை கேட்ட அகத்துழிஞையோன்திறம்கண்டோர் கூறியதற்கும் (தொல். புறத்திணை. சூ.12, ந.) மேற்கோள். (305)
|