பக்கம் எண் :

140

வரிசைக் கொப்பப் பகைவரைப் கடப்பை யான் தாழாது பாடுவேன்;
நின்புகழ் விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; ஆதலான் எமக்குக்
கைம்முற்றல; ஒளியோர் பிறந்த இம் மலர்தலை யுலகத்து வாழே மென்றலும்
அரிது என மாறிக் கூட்டுக. தாழாது செய்யுட் செய் செந்நா வென
வியைப்பினு மமையும். ஒளியோ ரென்றது, கபிலன் முதலாயினோரை. வாழே
மென்றதும் அரிதென்ற கருத்து, பாடாதிருத்தலும் அரிதென்றதாக்கி, யாமும்
வல்லபடி பாடிப் போதுவே மென்றதாகக் கொள்க. நன்றுமன் என்பது
கழிவின் கண் வந்தது. பாடுவன்மன்னா லென்றவழி மன்னும் ஆலும்
அசைநிலை.

     பாடுவன்மன் னென்பதனை அல்லீற்றுத் தனித்தன்மை வினையாக்கி
நின் வரிசைக் கொப்ப, நின் பகைவரைக் கடப்பைப் பாடுவேன்; அதனால்
விரிப்பின் அகலும், தொகுப்பின் எஞ்சும், மம்மர் நெஞ்சத்து எமக்கு நின்
புகழ் கைம்முற்றல வென அவன் புகழை மேம்படுத்துக் கூறியவாறாக
வுரைப்பினு மமையும். இப்பொருட்குப் பாடுவன்மன் னென்றதனை
ஒழியிசையாகக் கொள்க. சிறந்த செய்யுள் என்றும், செய்யுட் செய்த செந்நா
என்றும் பாடம்.

      விளக்கம்: தெற்றிக்கண்ணிருந்து விளையாடல் மகளிர்
இயல்பாதலின், “தெற்றி யாடும்” என்றார்; “குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்” (புறம்:36) என்று பிறரும்
கூறுதல் காண்க. விரிப்பின் அகலுதலாலும், தொகுப்பின் எஞ்சுதலானும்
இவ்விரண்டினும் வேறு நெறி யில்லாமையாலும் பாடுவோர்க்கு மயக்க
முண்டாதலின், “மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க்” கென்றார். கல்வி
கேள்விகளால் உயர்ந்தோர்க் குளதாகும் புகழ் காரணமாகப் பிறக்கும்
இசை, ஈண்டு ஒளியெனப் படுகிறது. ஒத்தல், ஈண்டு உவமப்
பொருளதாகாது “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்”
(தொல். உவமை:8) என்றாற் போல அமைதி குறித்து வந்தது. சிறிதும்
“தாழாது கபிலன் இன்றுளனாயின் நன்றுமன் என்ற” என இயையும்.
தாழா தென்னும் வினை யெச்சத்தைச் செய் யென்பதனோடு முடித்தலும்
அமையும் என்றற்குத் “தாழாது........அமையும்” என்றார். வாழ்தல்,
பாடற்குரியோரைப் பாடி வாழ்தலாதலின், “வாழே மென்றலும் அரிதென்ற
கருத்து......கொள்க” என்றார்.

54. சேரமான் குட்டுவன் கோதை

     இவன், சேரநாட்டின் ஒரு பகுதியாகிய குட்ட நாட்டுக்கு உரியவன்
ஆதலால், இவன் குட்டுவன் கோதை யெனப்படுகின்றான். கோதை யென்பது
இயற்பெயர். இவன் காலத்தில் சோழ நாட்டில் இலவந்திகைப் பள்ளித்
துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா
வளவனும் ஆட்சி புரிந்தனர். “வானம் நாண வரையாது சென்றோர்க், கானா
தீயும் கவிகை வண்மைக், கடுமான் கோதை” யெனப்படுதலால், இவனது
கொடைச் சிறப்பும், “புலி துஞ்சு வியன்புலத் தற்றே, வலிதுஞ்சு தடக்கை
யவனுடை நாடே” என்பதனால், இவனது வென்றிச் சிறப்பும் புலவர் பாடும்
புகழ் பெற்று விளங்குகின்றன.

     இக் குமரனார், கோனாட்டு எறிச்சிலூரைச் சார்ந்த மாடல னென்பாற்கு
மகனாராவர். மாடல னென்ற பெயரை நோக்கின் இவர் பார்ப்