பக்கம் எண் :

118

     

ஒலியைக் கேளாதபடி பிறருக்கு நேராகக் கொடுத்தல் வல்லனாயினான்
அவனுக்கு; எ - று.


     பகைவர்  மல்நடக்கவொட்டாது  எதிரினின்று விலக்குதலின்
“செருப்பிடைச் சிறுபர லன்னன்” எனப்பட்டான். அன்ன என்று
பாடமொதிச் செருப்பிடைச்   சிறு   பரலோசைபோல   நெடிய
ஓசையையுடைய காலென்றுரைப்பாருமுளர்.  யார்கொல்  என்றது
அறியான் வினாதலன்றி வியப்பின்கண் வந்தது. “ஊர் பெரி
திகந்தன்றுமிலனே” என்பது நிரைகோட் கடுமை.

     சிறுபரலன்னன் கவுளனாகிய அளியனானவன் தான் யார்கொல்லோ,
தேரின்,   வில்லொடு   ஊர்   பெரிது   இகந்தன்றுமிலனாய்,   காடு
கைக்கொண்டதுமிலனாய், நோக்கி எண்ணி மாற்றினான்; மாற்றிக் குழிசி
காண்டலோடு மத்தொலி கேளாதோனாயினான்; அவனுக்கு அவைதாம்
மிகப்பலவாயினும் என்னாமெனக் கூட்டுக. கேளாதோற் கென வுருபு
விரித்துரைப்பினு மமையும்.

     விளக்கம்: செருப்பிடைச்   சிறுபரல்   என்பது   பழமொழி.
“தருக்கியொழுகித்தகவல்ல  செய்தும்,  பெருக்க மதித்தபின் பேணாமை
செய்தும்,  கரப்பிடை  யுள்ளங் கனற்று பவரே, செருப்பிடைப்பட்ட பரல்”
(பழ 224) என வருதல் காண்க, குச்சி, குச்சிப்புல். கவுள் என்றது, செவி
மருங்கிருந்து மோவாய்வரை வளர்ந்து நன்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மயிர்.
“ஊர் பெரிது இகந்தன்றுமிலன்” எனவே, அச்சமுடைய னென்பது படாமை
விலக்கற்கு   “அரணெனக்காடுகைக்  கொண்டன்றுமிலன்”  என்றான்.
பகைவருடைய இனநிரை முன்னின்று நோக்கினும் மருங்கிருந்தெண்ணினும்,
அவர்க்ள்  அயிர்த்தற்கிடனாமென்றெண்ணிப்  புறமிருந்து  நோக்கினமை
தோன்ற,  “செல்புறம் நோக்கி”  யென்றும்,  நிரைகோடற்குச்சூழ்ச்சியை
விரைந்தெண்ணுதல்  முறையன்மையால்  “பைய வெண்ணி” யென்றும்,
கரந்தையாரைத்  தொலைவிலேநிறுத்திப்  பொருதுசாய்த்தமை விளங்க,
“சிலையின் மாற்றியோன்” என்றும் கூறினார். பகைவர் முன்னேறவிடாது
முன்னோக்கி அடிவைக்குந்தோறும் அவரைத் தடுத்து மாற்றுவது பற்றி,
“பகைவர்...எனப்பட்டான்” என்றும் பரலன்னனென்னாது அன்ன என்று
பாடங்கோடலும்  உண்டாதலின்,  அதற்குப்  பொருள்  இதுவென்பார்
“அன்ன...ஊர்”  என்று  கூறினார்.  “ஊர் பெரிது...கடுமை”  யென்றது,
“ஊரிலேயிருந்துகொண்டுதான்   இருந்தான்;   பகைவர்நிரை   கவர்ந்து
கொணரப்பட்டது” என்று உலகுரை காட்டிநின்றது. நிரைவந்ததும்
பிறர்க்குப் பகுத்ததும் பிறர்  அறிதற்குமுன்பே  மிக  மிக  விரைவாக
விடிவதற்குள் நிகழ்ந்தன என்பது, “எனைத்தும்...கேளாதோன்”
என்பதனால் பெறப்படுகிறது.