பக்கம் எண் :

15

     

     புரவியையுடைய விறற்சினம் தணிந்த உறுவரென இயையும் செல்சார்
வாகித்தாளுளம் தபுத்த பொருந என இயையும். புழை கெட விலங்கிய
நாயென இயையும்.

    வெள்வீயென்றது. அதனையுடைய முல்லையை. மூவராயினும் என்ற
உம்மைசிறப்பும்மை.  கோடைப் பொருந, வேட்டுவ, பெட்பின்றீதல் யாம்
வேண்டலம்; பரிசிலர் கடும்பு களிறின்று பெயரல; நீ நோயிலையாகுகவெனக்
கூட்டுக.

    யான் களிறின்றிப் பெயரா நின்றேனென்பது கருத்தாகலின்,
நோயிலையாக வென்பது இகழ்சிக்குறிப்பு. புழை கெட விலங்கி
யென்பதூஉம் பாடம்.

    விளக்கம்: முற்றுதல்,  நிறைதல்.  வென்றி  யெய்துங்காறும் சினம்
தணியாது நின்று பொருதவர் அவ் வென்றி யெய்தியபின் தணிதலின்,
விறல்   சினம்  தணிந்த  உறுவர்   என   இயையுமென்றார்.
இவ்வியல்பினோரும் தமது மாட்டாமையுணர்ந்து புகலடைதற்குரிய
பெருமை நெடுவேட்டுவற்   குண்டென்பார்,    “உறுவர்செல்
சார்வாகி”யென்றார்.தாள் முயற்சி குறித்தாகலின், தாள் உளம்
என்றதற்கு
முயற்சியையுடைய கிளர்ந்த   
உள்ளம்  என்று  உரைத்தார்.  கோடைமலை
வெள்ளிய  முல்லைப்பூவாற்   புகழ் மிக்கதாகலின்,
“வெள்வீயென்றது  அதனையுடைய  முல்லையை” யென்றும்,
வெள்வீவேலி யென்றதற்குவெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லைவேலி
யென்றும் உரைத்தார். பரிசிலர் கடும்பு களிறின்று பெயரல வென்றது,
யான் களிறின்றிப்பெயரா நின்றேன் என்பது குறிப்பாய்ப் பெறவைத்து
நிற்கிறது. “நோன்சிலைவேட்டுவ”என்றவர்  நீநீடுவாழ்கஎனவாழ்த்தாது
நோயிலையாகுக  என்றது,பரிசிலர்  கடும்புபோலாது  யான் களிறின்று
பெயருமாறுவிடுக்குமாற்றால்என்நெஞ்சுநோவச்செய்கின்றாய்.
“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்” (குறல் 320.) என்பவாகலின்,
நீ நோயுறா தொழிக என்று இகழ்ந்து கூறியவாறாயிற்று. கலி - முழக்கம்;
நிறைந்த முழக்கத்தையுடைமைபற்றி, இடியேறு ஆர்கலி யெனப்பட்டது.
யாணர், ஈண்டுப் புதுப்பெயல் மேற்று. செம்மல், தலைமை.

---

206. அதியமான் நெடுமானஞ்சி

     அதியமான் நெடுமான் அஞ்சி கொங்கு நாட்டில் தருமபுரி
யெனப்படும் தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வருகையில், அவனதுகொடைப்
புகழ் தமிழகமெங்கும்பரந்திருந்தது. கடல்நோக்கிச் செல்லும் ஆறுகள்
போலப் புலவரும்பாணரும்பொருநரும் கூத்தருமாகிய பரிசிலர் பலரும்
அவனை நோக்கிவந்து பரிசில் பெற்றுச் சென்ற  வண்ணம்இருந்தனர்.
அக்காலத்தே தமிழகத்தே முடிவேந்தர்களையும் வேள்பாரி முதலிய
வள்ளல்களையும் பாடிப் புகழ்நிறுவி நிலவிய ஒளவையார்க்கு அதியமானது
புகழ் செவிப்புலனாகியதும் அவனைக் காணவேண்டுமென்ற விருப்பம்
எழுந்தது. வழக்கம்போலப் பரிசிலர் உடன்வர ஒளவையார் தகடூருக்குச்
சென்றார். புகழ் வள்ளலாகிய அதியமானும்ஒளவையாருடைய
புலமை  நலமும் மனநலமும் கேள்வியுற்றிருந்தான்.ஒளவையார்தன்
பெருமனைக்குவரப்  பெற்றதும், அவரைச் சின்னான் தன்னோடே
இருத்தவேண்டி, உடன்வந்த பரிசிலர் வேண்டும் பரிசிலை நல்கி
விடுத்தான்,