பக்கம் எண் :

294

     

     கொண்டு  புரையரல்லோர்க்கு  இவளை  மகட்கொடை  நேர்தற்கு
உடன்படுவானல்லன்;   அஃது   உண்மையாதல்  காணப்படும்  என்று
உரைத்தலுமாம். இவள் நலங் குறித்து  நிகழவிருக்கும்  போரில், கெட்டு
அழிபவர் அழிய, இறவாது எஞ்சுவோர்க்கு ஒக்கலாய் நின்று  பேணுவார்
ஒருவரும் இலராமாறு இவ்வூர் பெரும் பாழாகும் எனினுமாம்.நல்ங்காரணமாக
நிகழும் போரால் விளையும் செயலை நலத்தின்மேலேற்றிக் கூறினார். தாய்
அன்புடையள்; தந்தை ஒக்கல்; உடன்பிறந்தான் கல்வியென் என்னும்; மகள்
அன்புடையள்; தந்தை ஒக்கல்; உடன்பிறந்தான் கல்வியென் என்னும்; மகள்
நலன் பெரும்பாழ் செய்யும் என அவரவர் கூறுபாடும் வகுத்துரைத்தவாறு.

347. கபிலர்

     மகட்கொடை வேண்டிய வேந்தர் போந்து தம் போர்யானைகளைக்
காவிலுள்ள மரங்களிற் பிணித்திருப்ப, தந்தை மகள் மறுக்கும் கருத்தினைாய்
இருத்தலைக் கபிலர் கண்டார். அவனது மறுப்பால் போர் நிகழுமெனக்
கருதிய கபிலர் தந்தை மகட்கொடை நேரானாயின், இவ்வூர் போரால்
வருந்துவது ஒருதலை; இவ் வேந்தருடைய யானைகள் பிணிக்கப்பட்டிருக்கும்
மரங்கள் பருத்த அரையையுடையவாயினும், யானைகளின் வலிக்கு ஆற்றாது
துளங்குவனவாயின, ஆகவே, இவ்வூரும் பெருவருத்தம் எய்தும் போலும் என
இரங்கி இப் பாட்டைப் பாடியுள்ளார்.

 உண்போன் றானறுங் கள்ளி னிடச்சில்
நாவிடைப் பஃறேர்பு கோலச் சிவந்தாங்
கொளிறொள் வாளடக் குழைந்தபைந் தும்பை
எறிந்திலை முறிந்த கதுவாய் வேலின்
5 மணநாறு மார்பின் மறப்போ ரகுதை
 குண்டுநீர் வரைப்பிற் கூட லன்ன
குவையிருங் கூந்தல் வருமுலை சேப்ப
..............................
வென்னா வதுகொ றானே நன்றும்
10விளங்குறு பராரைய வாயினும் வேந்தர்
 வினைநவில் யானை பிணிப்ப
வேர்துளங் கினநம் மூருண் மரனே.

     திணையும் துறையு மவை. கபிலர் பாடியது.

     உரை: உண்போன்   தான்   நறுங்கள்ளின்   சில  இட - நறிய
கள்ளளையுன் பவன் அதற்குத் துணையாக்ச சில வெஞ்சனங்களை அதன்
கண் இட்டுண்ணுகையில்: பல் இடை நா தேர்பு கோல சிவந்தாங்கு -
பற்களின் இடையே ஒட்டிக்கொண்டவற்றை நாவை அவற்றின் இடையில்
தொடுத்துத் தேர்ந்து பல்லால் அரைபடுமாறு செலுத்துவதால் நாச்
சிவப்பேறினாற்போல: ஒளிறு ஒள் வாள் அட - சிவந்த ஒளிபொருந்திய
வாள் எதிரேற்ற பகைவரை வெட்டுதலால்: குழைந்த பைந் தும்பை - சாம்பிய