பக்கம் எண் :

298

     

349. மதுரை மருதனிளநாகனார்

     சோழநாட்டு உட்பிரிவுகளுள் சிக்கல் நாடு என்பது ஒன்று. இஃது இந்
நாளில் திருவாரூர்க்குக் கிழக்கிலுள்ள பகுதியாகும். இதன் தலை நகரம்
சிக்கல் எனப்படும் இக்காலத்தில் அது சிக்கல் என்றே வழங்குகிறது. சிக்கல்
நாட்டுத் தலைநகரமாகிய பெருமையுடைமையால் பெருஞ் சிக்கல் என்பது
பண்டைநாளை வழக்கு. அதன்கண் மருதனிளநாகனார் காலத்தே வேளாண்
தலைமகனொருவன் இருந்தான். அவனைப் பெருஞ் சிக்கல்கிழான் என்பர்.
அவனுடைய மகள் பெண்மை நலங் கனிந்து வேந்தர் விரும்பி வேட்கம்
வீறுகொண்டு விளங்கினாள். அவளை மணக்க விரும்பினானொரு வேந்தன.
பெருஞ்சிக்கல் கிழான் அவன்பால் தன் மகளை மணத்தற்கு வேண்டும் நலம்
குறைந்திருப்பது கண்டு மகட்கொடை மறுத்தான். அதனால் இருவரிடையே
பகைமை தோன்றிற்று. சினம் சிறந்த வேந்தன் தன் நுதல் வியர்வையைத் தன்
கைவேலாற்றுடைத்துக் கடிய சொற்களையே கூறலுற்றான். பெருஞ்சிக்கல்
கிழானும் வேந்தனது வலிமிகுதி யறிந்த பணிந்து மொழிந்தடங்காது
நெடுமொழி நிகழ்ித்தினான். இருவர் நிலைகளைமயும் மருதனிளநாகனார்
கண்டார். “இவர்தம் இயல்பு இதுவாயின், இதற்கெல்லாம் காரணம் இக்கிழான்
பெற்ற மகளேயாவாள்; விறகிற் றோன்றும் தீ விறகையே யழிப்பதுபோல
இவ்வூரிற் பிறந்த இவள் இவ்வூர் அழிதற்குக் காரணமாயினள்” என இப்
பாட்டின்கண் வருந்திக் கூறியுள்ளார்.

 நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய வல்லது பணிந்துமொழி யலனே
இஃதிவர் படிவ மாயின் வையெயிற்
 5.றரிமதர் மழைக்க ணம்மா வரிவை
 மரம்படு சிறுதீப் போல
அணங்கா யினடான் பிறந்த வூர்க்கே.

     திணையுந் துறையு மவை. மதுரை மருதனிளநாகனார் பாடியது. இது
பெருஞ் சிக்கல் கிழான் மகண் மறுத்தது என்பர் இளம்பூரணர்.


     உரை: வேல் நுதிகொண்டு நுதல்வியர் துடையா - தன் கைவேலின்
கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து; வேந்து கடிய கூறும்
- வேந்தனும் கேட்டார் அஞ்சத் தக்க மொழிகளைக் கூறாநின்றான்; தந்தையும்
நெடிய வல்லது பணிந்து மொழியலன் இவன் தந்தையும் நெடுமொழிகளைத்
தவரிப் பணிவைப் புலப்படுத்தும் சொற்களைச் சொல்லுகின்றானில்லை; இஃது
இவர் படிவம் - இஃது இவர்கள் கொள்கை யாகும்; ஆயின் - இதனை ஆரா
யுங்கால்; வை எயிற்று அரிமதர் மழைக் கண் அம்மா அரிவை - கூரிய
பற்களையும் அரிபரந்து மதர்த்துக் குளிந்த கண்களையும் அழகிய மாமை
நிறத்தையுமுடைய அரிவையாவாள்; மரம்படு சிறு தீப்போல் - மரத்தைக்
கடையு மிடத்துத் தோன்றும் சிறுதீ அம் மரத்தையழிப்பது போல, தான்
பிறந்தவூர்க்கு அணங்காயினள் - இவள் தான்