பக்கம் எண் :

402

     

384. கரும்பனூர் கிழான்

     வெள்ளியாகிய  மீன்  தென்றிசைக்கண்  நிற்கின் நாட்டிற்கு  கல
முண்டாகாதென்பது  கோணிலையறிந்தோர் கொள்கை. நாடு நலங் குன்றுவது
தெரிந்து சான்றோர் வருந்துவது இயல்பு. அன்னதொரு காலத்தில் புறத்திணை
நன்னாகனார்  வெள்ளியது  நிலையறிந்தும்  வருத்தமோ கவலையோ இன்றி
இனிதிருந்தார்.  அவரைக்கண்ட  சான்றோர்  வியப்புக் கொண்டனர். அவர்
கருத்தறிந்த    நன்னாகனார்   இப்பாட்டால்   தம்முடைய   மனக்கோளை
எடுத்துரைத்தார். இதன்கண், தொண்டை நாட்டுக் கரும்பனூர் கிழான்
நெல்லும் பொன்னும்  நறவும்  ஊனும் நிரம்பவுடையன்; யான் அவற்றாற்
குறைவுறுங் காலத்து  அவன்  அவற்றைத்  தந்து  என்னை   நிறைத்தலிற் 
குறைவதிலன்; அவனைத்  தலைவனாக  யாம் உடையோமாகலின், நாட்டில்
வறம் உண்டாதல் குறித்து வெள்ளி எவ்விடத்து நிற்பினும் நிற்க; இதுகாறும்
அவனது பேராதரவால்  உண்டுந்தின்றுமே  என்  நாட்கள் கழிந்தன;
அந் நாட்களை யான் வரக்கண்ட துண்டே  யன்றி  அவை  யெத்துணை
கழிந்தன  வென்பது  அறிந்திலேன்; அவனுடைய  கரும்பனூர்  இயற்கை
நலம் மிகச் சிறந்ததாம்; மென் புலத்து மீனுண்டு பசி தீர்ந்த நாரை, வஞ்சி
மரத்தின் கிளையிற்றங்கிப் பின் கரும்பின் பூ வருந்த அதன்பால் தங்கும்; 
வரகரிந்த  அரிகாலில் வாழும் எலியை யலைக்கும்   இயல்   பிற்றாகிய
குறும்  பூழ்க்கு  அங்கே வாழும் முயல் அஞ்சியோட, அதனால் இருப்பைப்
பூ உதிரும்; ஊரில் விழாவொன்றும் இல்லையாயினும், உழவர் உண்கலமாகிய
மண்டையில் கெடிற்று மீனாகியவுணவுடனே கள் நிறைந்திருக்கும்.

 மென்பாலா னுடனணைஇ
வஞ்சிக்கோட்டுறங்கு நாரை
அறைக்கரும்பின் பூவருந்தும்
வன்பாலாற் கருங்கால்வரகின்
5அரிகாற் கருப்பை யலைக்கும் பூழின்
 அங்கட் குறுமுயல் வெருவ வயல
கருங்கோட்டிருப்பைப் பூவுறைக் குந்து
விழவிண் றாயினு முழவர் மண்டை
இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து
10கரும்ப னூரன் கிணையேம் பெரும
 நெல்லென்னாம் பொன்னென்னாங்
கனற்றக் கொண்ட பொன்னென்னாங்
மனைமன்னா வவைபலவும்
யான்றண்டவுந் தான்றண்டான்
15நிணம் பெருந்த கொழுஞ்சோற்றிடை
 மண்ணாண்ப் புகழ்வேட்டு
நீர்நாண நெய்வழங்கிப்