| அதன்றலை - அதற்குமேலே; இன்னதோர் காலை நில்லலன் - இப்படி யான் துயமுறுங்காலத்து ஆண்டு நில்லான்; இன்னே வருகுவன் - இப்பொழுதே வருவன்; அவற்கு இடம் ஒழிக்க - அவனுக்கு இடமொழிக்க; எ - று.
அகற்பட என்பதற்கு அவ் விறந்து பாட்டிலே பட என்றும், இகழ்விலன் என்பதற்கு இகழப்படுவன குணமிலனென்று முரைப் பினுமமையும். பேதைச் சோழனென்றது தான் தன்னை இழித்துக் கூறியது.
விளக்கம்: கேட்டல் மாத்திரை யல்லது யாவதும், காண்டல் இல்லாது யாண்டு பலகழிய, வழுவின்று பழகிய கிழமைய ராகினும், அரிதே தோன்றல், அதற்பட வொழுகல் என்பது சான்றோர் கூற்று. அவர் கூற்றுக்கு மாறாகப் பிசிராந்தையார் தவறாது வருவரென்னும் துணிவுபற்றி அவர் கூற்றைக் கொண்டெடுத்து மொழிந்தான். வழுவின்று பழகிய கிழமை ஈண்டு அது என்பதனால் சுட்டப்படுகின்றமையின், அதற்கு, அவ்வழுவாத கூற்று என விளக்கினார். துணிவின் கண் நின்ற தன் அறிவை அச் சான்றோரது ஐயம் பேதுறுவித்து நோய் செய்யுமாகலின், ஐயங் கொள்ளன்மின் என்றும், ஆர்ந்த அறிவின் பயன் பிறரறிவைப் பேதுறுவித்தல் கூடாதென்பது தோன்ற, ஆரறிவாளீர் என்றும் கூறினான். இகழ்விலன் என்ற வினைக்குறிப்பு எக்காலும் என்ற காலத்தைக் குறிப்பாய்க் கொண்டிருத்தலின், அதற்கு என்றும் இகழ்ச்சியிலனாய் என்று உரைத்தார். பொய்யாமை புகழாதலின், புகழ்கெடவரூஉம் பொய் என்றான்; பொய்யாமை யன்ன புகழில்லை (குறள் - 296) என்பர் திருவள்ளுவர். தன் பெயரை ஆந்தையென்னாது சோழன் என்பவன், செஞ்சாலும் தான் வேறு சோழன் என்ற பெயர் வேறு என வேறுபாட்டுணர்வின்றி உயிரொன்றிய உணர்வினனென்பதுபடப் போதைச்சோழன் என்னும் என்றான். இஃது உயிரொன்றிய அன்புடைமையின் பயனாக உண்டாகும் செயலாதல் தோன்ற, சிறந்த காதற் கிழமையும்உடைமயன்என்றான். இகழ்விலனென்றதற்கு இகழப்படுவனவாகிய குணமிலன் என்பது பொருளாயின், சான்றோரை ஐயுற வேண்டா என்றதற்கு ஏதுக் கூறியவாறாம். ---
217. பிசிராந்தையார்
கோப்பெருஞ்சோழன்பால் பெரு நட்புக்கொண்டு சூழ இருந்த சான்றோர்களுள் பொத்தியார் என்பவர் ஒருவர். சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் உண்டாகியிருந்த நட்பின் திறமும், அச் சோழனது ஆட்சி நலமும் மனப்பண்பும், அவன் வடக்கிருக்க நேர்ந்த திறமும் பிறவும் நேரில் அறிந்து அவன்பால் பிரியா அன்புகொண்டிருந்தார். கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கச்சென்றபோது பொத்தியாருடைய மனைவியார் கருப்பமுற்றிருந்தார். ஆயினும், பொத்தியாரும் அவனுடன் சென்று ஏனைச் சான்றோர் போல வடக்கிருக்க விரும்பினார். சோழனோ அதனையறிந்து நின் மனைவி கருவுறிர்த்த பின்பு வடக்கிருக்கலாம் என்று அவரைத் தடுத்துவிட்டான். பொத்தியார் அதனையுடன் பட்டு வடக்கிருத்தலை |