90. அதியமான் நெடுமான் அஞ்சி ஒருகால், அதியமான் தன்னைப் பகைத்துப் பொரக் கருதும் வேந்தருடன் போர்செய்தற்குச் சமைந்திருந்தான் அடிக்கடி நிகழும் போர்களால் வீரர் பலர் இறப்பதும், பொருட்கேடுண்டாவதும் அவன் நினைவிற் றோன்றி அசைவினைப் பிறப்பித்தன. போரைச் செய்யாது நிறுத்தின் வரும் கேடும் அவன் அறிவுக்குப் புலனாகா தொழியவில்லை. அந்நிலையில் அதனை யுணர்ந்த ஒளவையார் அதியமானைப் போர் செய்தற்கு ஊக்கவேண்டிய கடமை யுடையவரானார். இப் பாட்டால், புலி சினந்தால் மான் கூட்டம் எதிர் நில்லா; ஞாயிறு சினந்தால் இருள் நில்லாது; பெருமிதப் பகட்டுக்கு வழியருமை கிடையாது; அவ்வாறே நீ களம் புகின் போர் செய்வார் இல்லையென்று கூறி யூக்கியுள்ளார். | உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடைமல்கு குளவியொடு கமழுஞ் சாரல் மறப்புலி யுடலின் மான்கண் முளவோ மருளின விசும்பின் மாதிரத் தீண்டிய | 5 | இருளு முண்டோ ஞாயிறு சினவின் அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய பண்டச் சாகாட் டாழ்ச்சி சொலிய அரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ | 10 | எழுமரங் கடுக்குந் தாடோய் தடக்கை வழுவில் வன்கை மழவர் பெரும இருநில மண்கொண்டு சிலைக்கும் பொருநரு முளரோ நீகளம் புகினே. (90) |
திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது.
உரை: உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் - முரிந்த வளையையொப்ப மலர்ந்த வெண் காந்தட் பூ; அடை மல்கு குளவியொடு. கமழும் சாரல் - இலை தழைத்த குளவியுடனே நாறும் மலைச்சாரற்கண்; மறப் புலி உடலின் மான் கணம் உளவோ- மறத்தையுடைய புலி சீறின் எதிர்நிற்கவல்ல மானினமும் உளவோ; மருளின விசும்பின் மாதிரத்து - மயங்கிய ஆகாயத்திடத்தும் திசையின்கண்ணும்; இருளும் உண்டோ ஞாயிறு சினவின் - இருளுமுண்டோ ஞாயிறு கொதித் தெழுமாயின்; பார் அச்சொடு தாக்கிய - பாரத்து மிகுதியால் பார் அச்சுமரத்தோடு வந்து தாக்கி; உற்று - உற இருத்தலின் இயங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய - நிலத்தின்கட் குளித்த பண்டத்தையுடைய சகடத்தினது ஆழ்ச்சியைப் போக்குவதற்கு; அரி மணல் ஞெமர - புனல் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும்; கற்பக - கல் பிளக்கவும்; நடக்கும் - நடக்கவல்ல; பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ - மிக்க மனச்செருக்கினையுடைய கடாவிற்குப் போதற்கரிய துறையுமுண்டோ, இல்லையன்றே அவை போல; எழு மரம் கடுக்கும் தாள் தோய் தடக்கை - கணைய மரத்தையொக்கும் முழந்தாளிலே பொருந்திய பெரிய கையாகிய; வழுவில் வன் கை - தப்பாத வன்மையைச் செய்யும் கையினையுடைய; மழவர் பெரும - வீரர்க்குத் தலைவ; இரு நிலம் மண்கொண்டு சிலைக்கும் - பெரிய நிலத்தின்கண் நினது மண்ணைக் கொண்டு ஆர்க்கும்; பொருநரும் உளரோ - வீரரும் உளரோ இல்லையன்றே; நீ களம் புகின் - நீ போர்க்களத்திற் புகின் எ-று. மழவர் பெரும, நீ களம் புகின் பொருநரும் உளரோ, இல்லயன்றே யெனக் கூட்டி வினமுடிவு செய்க. தடக்கயயுடய பெருமவெனக் கூட்டி, வன்கய மழவரொடு கூட்டி யுரப்பினும் அமயும். இரு நிலமாகிய மண்ணென் பாரு முளர். மதப்பகடு என்பதூஉம் பாடம்.
விளக்கம்: காந்தட்பூ உடந்த வளபோலும் என்பத, ''வளயுடந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்'' (மலபடு. 519) எனப் பிறரும் கூறுதல் காண்க. குளவி - மலமல்லிக. மருளுதல் - மயங்குதல்; புக போலும் முகிற்கூட்டம் பரவி நீலவானத்த மறத்தல். விசும்பின் மாதிரத் விசும்பினும் மாதிரத்தினும். தாக்கி யென்ப தாக்கிய வென்றும், உறுதலின் என்ப உற்று என்றும் நின்றன; ''வினயெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய'' (சொல்.457) என்ப தொல்காப்பியம். இயங்குதல் ஈண்டுச் சேற்றிற் புததல் என்பபட வந்த. அரி மணல் - நீரலயால் கொழிக்கப்பட்ட மணல். வரி மணல் என்று பாடங்கொள்வர் நச்சினார்க்கினியர். ஞெமர்தல் - பரத்தல். ''தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்'' (நெடுநல். 60) எனப் பிறரும் கூறுதல் காண்க. எழுமரம் - கணய மரம். க தாள்வர நீண்டிருத்தல் ஆடவர்க்கு இலக்கணம் என்ப வழுவில் வன் க என்புழி, வழுவுதல் - வழுக்குதல். மழவர் - ஒருவக வீரர்; ''உருவக் குதிர மழவர்'' (அகம்.2) என வருதல் காண்க. இவ்வுரகாரர், இளய வீரர் எனக் கொள்வர்; ''மழவும் குழவும் இளமப் பொருள்'' (சொல்.305). |