98.அதியமான் நெடுமான் அஞ்சி

     தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்த அதியமானுக்கும் கோவலூரிலிருந்து
ஆட்சிபுரிந்து வந்த மலாடர் வேந்தனுக்கும் பகைமையுண்டாயிற்று. பகைமை
முதிரவே   அதியமான்  பெரும் படையுடன் கோவலூரை நோக்கிச்
செல்லத் தலைப்பட்டான். இடைநிலத்து  வாழ்ந்து  வந்த சிற்றரசர்  
அதியமான் படையினைக்  கண்டு  அஞ்சி  அலமரலாயினர்.
ஒளவையார், இந்நிகழ்ச்சிகளைக்கண்டு, “இனி இவனுடன் போரெதிர்ந்து
நிற்கும் வேந்தரதுநாடு என்னாகுமோ?”என்று  நினைந்து   இப்பாட்டின்
கண், வேந்தே, நின் யானைப்படை செல்லக் கண்ட வேந்தர் தத்தம் மதில்
வாயில்கட்குப் பழைய கதவுகளை மாற்றிப் புதுக் கதவுகளை நிறுத்திப்
புதிய  கணைய  மரங்களை  யமைக்கின்றனர்; குதிரைப் படையைக்
கண்டவர்  காவற்காட்டின்  வாயில்களைக்  கவைத்த  வேல்
முட்களைப் பெய்து அடைக்கின்றனர்; வேற்படை கண்டவர் தம்
கேடகங்கட்குப் புதிய காம்பும் கைந்நீட்டும் செறிக்கின்றனர்; மறவரது
பெரும்  படை  கண்டவர்   தம்தம்  தூணிகளில் அம்பை யடக்கிக்
கொள்கின்றனர்; நீயோ கூற்றத்தனையை; இனி நின் பகைவரது வயல்
வளம்  சிறந்த  நாடு  அவர்  மனம் வருந்தி யிரங்குமாறு கெடுவது
திண்ணம்”என இவன் படைச் சிறப்பும் பகைவர் நாட்டழிவு குறித்த
இரக்கமும் தோன்றப் பாடியுள்ளார்.
 

முனைத்தெவ்வர் முரணவியப்
பொரக்குறுகிய நுதிமருப்பினின்
இனக்களிறு செலக்கண்டவர்
மதிற்கதவ மெழுச்செல்லவும்

5பிணனழுங்கக் களனுழக்கிச்
செலவசைஇய மறுக்குளம்பினின்
இனநன்மாச் செலக்கண்டவர்
கவைமுள்ளிற் புழையடைப்பவும்
மார்புறச் சேர்ந்தொல்காத்
10தோல்செறிப்பினின் வேல்கண்டவர்
தோல்கழியொடு பிடி செறிப்பவும்
வாள்வாய்த்த வடுப்பரந்தநின்
மறமைந்தர் மைந்துகண்டவர்
புண்படுகுருதி யம்பொடுக்கவும்
15நீயே, ஐயவி புகைப்பவுந் தாங்கா தொய்யென
உறுமுறை மரபிற் புறநின் றுய்க்கும்
கூற்றத் தனையை யாகலிற் போற்றார்
இரங்க விளிவது கொல்லோ வரம்பணைந்
திறங்குகதி ரலம்வரு கழனிப்
20 பெரும்புனற் படப்பையவ ரகன்றலை நாடே.  (98)

     திணை:வாகை. துறை: அரசவாகை. திணை வஞ்சியும், துறை:
கொற்றவள்ளையுமாம். அவனை அவர் பாடியது.

     உரை: முனைத்  தெவ்வர்  முரண் அவிய - போர் முனைக்
கண் பகைவரது மாறுபாடு அடங்க; பொரக்குறுகிய நுதி மருப்பின்
நின்  இனக்  களிறு - பொருதலால்  தேய்ந்து  குறைந்த
நுனையுடைத்தாகிய  கோட்டையுடைய நினது இனமாகிய யானை;
செலக் கண்டவர் - போகக் கண்ட பகைவர்; மதிற் கதவம் எழுச்
செல்லவும் - தமது மதில்வாயிற்
கதவங்களும் கணய மரங்களும்
புதியனவாக  இடுதற்குப்  பழயன போக்கவும்; பிணன் அழுங்கக்
களன் உழக்கி - பட்டோர பிணம் உருவழியப் போர்க்களத்த
யுழக்கி; செலவு அசஇய மறுக் குளம்பின் நின் இனமா செலக்
கண்டவர் - செல்லுதலால் வருந்திய குருதிக்கற பொருந்திய
குளம்பயுடய நின இனமாகிய நல்ல குதிர போகக்கண்ட அப்
பகவர் தாம்; கவ முள்ளின் புழ அடப்பவும் - கவத்த வேல
முள்ளால்   காட்டு   வாயில்கள  யடப்பவும்;  மார்புறச் சேர்ந்
ஒல்கா - நின் பகவர மார்பின்கண் எறிந்த  வழி   ஆண்டுத் தத்
நில்லா    உருவிப்  போன;  தோல்  செறிப்பு   இல் நின் வேல்
கண்டவர் - உறயின்கட் செறித்தல் இல்லாத நின் வேலக் கண்ட
பகவர்;   தோல்  கழியொடு  பிடி செறிப்பவும் - தம கிடுகக்
காம்புடனே கந்நீட்டுச் செறிக்கவும்; வாள் வாய்த்த வடுப் பரந்த
நின் மற மந்தர் - வாள் வாய்க்கத் தத்த வடுப்பரந்த நின்னுடய
மறத்தயுடய வீரர; மந் கண்டவர் - வலியக் கண்ட அப் பகவர்;
புண் படு குருதி யம்பொடுக்கவும் - புண்  பட்ட   குருதியயுடய
அம்பத் தூணியகத் தடக்கிக்கொள்ளவும்; நீயே - நீதான்; ஐயவி
புகப்பவும்  தாங்கா - வெண்  சிறு கடுகக் காவலாகப் புகப்பவும்
தரியா; ஒய்யென உறுமுற மரபின் - விரய வந் பொருந்தல் முறமய
யுடய இயல்பின்; புற நின்று உய்க்கும் - புறத்தே நின்று உயிரக்
கொடுபோம்;  கூற்றத் அனய - கூற்றத்த யொப்ப; ஆகலின் -
ஆதலால்; போற்றார் இரங்க விளிவ கொல்லோ - பகவர் இரங்கக்
கெடுவ  கொல்லோ;  வரம்பு  அணந் இரங்கு கதிர் அலம் வரு
கழனி - வரம்பச் சேர்ந் வளயும் நெற்கதிர் சுழலும் கழனியொடு;
பெரும் புனல் படப்ப - மிக்க நீர்ப்பக்கத்தயுடய; அவர் அகன்றல
நாடு அவர அகன்ற இடத்தயுடய நாடு எ-று.

     செலவு   மென்ப   முதலாய  செயவெனெச்சங்கள்  கூற்றத்தனய
யென்னும் வினக்குறிப்போடு முடிந்தன. நீ கூற்றத்தனய யாதலின் போற்றார்
நாடு அவர் இரங்க விளிவகொல் லெனக் கூட்டுக. கொல்லும் ஓவும் அசநில.

     விளக்கம்:செல்லவும்,  அடப்பவும்,   செறிப்பவும்,  ஒடுக்கவும்,
புகப்பவும் கூற்றத்தனயயாயின என முடிதலின் ''செல்லவு..... முடிந்தன''
என்றார். யானக்கோடு நெடிதாயிருப்ப குறுகியதற்குக் காரணம் கூறுவார்.
''பொரக் குறுகிய'' என்றார். கதவம் எழுச்செல்லவும் என்ற, கணய மரத்தப்
புக்குதல் குறித் நின்ற. குதிரகள் விரந்தோடு மிடத்ப் பிணங்களின் குருதி
வழுக்குதலால் அவ வருந்வ பற்றி, ''செலவு அசஇய'' என்றார். கவ
முள் - வேலமுள். தோல் செறிப்பு - தோலாலாகிய உறயில் இடப்படுதல்.
தோல் - கேடயம். பிடி - கைப்பிடியாகிய  காம்பு;  இது  கைந்நீட்டு
எனப்பட்டது. படையெடாதவழி, பகைவர் பொருதலைச் செய்யாராதலால்,
“அம்பு ஒடுக்கவும்” என்றார்.  புறத்தே நின்று உயிரைக் கொண்டுபோதல்
கூற்றுவற்கு  இயல்பு.  அலம்  வரு கழனி - சுழலும் கழனி. அலம்
வருதல், அலமருதல் போலச் சுழற்சிப் பொருளது.