| 91. அதியமான் நெடுமான் அஞ்சிஒருகால், வேட்டம் புரிவான் சென்ற அதியமான் தன் நாட்டில் நின்ற மலக்குச் சென்றான். அம்மலயிடத்தே பிளவு ஒன்றுண்டு. அதன்கண்
 அருநெல்லி மர மொன்று இனிய கனி தாங்கி நின்ற. அதன யுண்டோர்
 நெடி வாழ்வ ரென்பர். வேட்டக்குச் சென்ற அஞ்சி அந்நெல்லி மரத்த
 யடந் அதன் தீங் கனியப் பறித்க் கொண்டு வந்தான். வந்தவன் அதனத்
 தானே உண்டொழியா, அப்போ தன்பால் வந்திருந்த ஒளவக்குத் தந்தான்.
 அதன அவர் உண்ட பின்னர், அதன யுண்டவர் நெடி வாழ்வ ரென்ற
 செய்தி தெரிந்த. ஒளவயார், பெருவியப்புற்றுத் ''தான் நெடி வாழ நினயா,
 எனக்குத் தந் என்ன நெடி வாழப் பண்ணிய இந் நெடுந்தகயின்
 பெருந்தகமய யென்னென்பேன்'' என நினந் அவன வாழ்த்தலுற்று, ''இந்
 நெல்லிக்கனியின் அரும கருதா எனக்குத் தந் சாதல நீக்கிய நீ நீலமணி
 மிடற்றுக் கடவுள்போல மன்னுவாயாக'' என இப்பாட்டினப் பாடி
 வாழ்த்தியுள்ளார்.
 
 |  | வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார் களம்படக் கடந்த கழறொடித் தடக்க
 ஆர்கலி நறவி னதியர் கோமான்
 போரடு            திருவிற் பொலந்தா ரஞ்சி
 |  | 5 | பால்புர            பிறநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல
 மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
 பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
 சிறியிலை            நெல்லித் தீங்கனி குறியா
 |  | 10 | தாத            னின்னகத் தடக்கிச் சாத னீங்க வெமக்கீத் தனையே.  (91)
 | 
 திணை: பாடாண்டிணை. துறை: வாழ்த்தியல். அவனை
 அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.
 
 உரை:வலம்படு வாய் வாள் ஏந்தி - வென்றியுண்டான
 தப்பாத வாளை எடுத்து; ஒன்னார் களம் படக் கடந்த - பகைவர்
 களத்தின்கட்பட வென்ற; கழல் தொடித் தடக்கை - கழல விடப்பட்ட
 வீர வளை பொருந்திய பெரிய கையினையுடைய; ஆர் கலி நறவின்
 அதியர்  கோமான் - மிக்க    ஆரவாரத்தைச்    செய்யும்
 மதுவினையுடையஅதியர் கோமான்; போர் அடு திருவின் பொலந்தார்
 அஞ்சி - மாற்றாரைப் போரின்கட் கொல்லும் வீரச் செல்வத்தினையும்
 பொன்னாற் செய்யப்பட்ட மாலையையுமுடைய அஞ்சி; பால் புரை
 பிறை நுதல் பொலிந்த சென்னி - நீ பால் போலும் பிறை நுதல்
 போலப் பொலிந்த திருமுடியினையும்; நீலமணி மிடற்று ஒருவன்
 போல - நீலமணிபோலும் கரிய திருமிடற்றினையுமுடைய
 ஒருவனைப்போல; மன்னுக - நிலைபெறுவாயாக; பெரும நீயே -
 பெரும நீ; தொல் நிலை பெருமலை விடரகத்து - பழைய
 நிலைமையையுடைய பெரிய மலையிடத்து விடரின் கண்;
 அருமிசைக்கொண்ட - அரிய உச்சிக்கட் கொள்ளப்பட்ட; சிறி
 யிலை நெல்லித் தீங்கனி - சிறிய இலையினையுடைய நெல்லியின்
 இனிய பழத்தை; குறியாது ஆதல் நின் அகத்து அடக்கி - பெறுதற்
 கரிதென்று கருதாது அதனாற் பெறும் பேற்றினை எமக்குக் கூறாது
 நின்னுள்ளே அடக்கி; சாதல் நீங்க எமக்கு ஈத்தனை - சாதலொழிய
 எமக்கு அளித்தாய் ஆதலால் எ-று.
 
 நீலமணி மிடற் றொருவன்போ லென்ற கருத்து, சாதற்குக்
 காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல, நீயும் சாவாதிருத்தல்
 வேண்டும் என்பதாம். அதியர் கோமான், அஞ்சி நெல்லித் தீங்கனி, எமக்கு
 ஈத்தாயாதலால், பெரும, நீ நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக வெனக்
 கூட்டி வினைமுடிவு செய்க. பிறைநுதற் பொலிந்த சென்னி என்பதற்குப்
 பிறைதான் நுதலிடத்தே பொலிந்த சென்னி யெனினு மமையும்.
 
 விளக்கம்: வில்லும் வாளும் வேலும் ஏந்தி நிற்கும் வீரர்க்குத்
 தொடி செறிய அணியப்படின் இடையூறு செய்யுமாதலின், இனிது கழல
 இடப்பட்ட தென்றற்குக் கழல் தொடிஎன்றார். தொடி கழல விடப்பட்ட
 தாயினும் கைபெருமை குறைந்த தன்றென்றற்கு, தடக்கையெனப்பட்டது.
 போர் அடு திரு - போரின்கட் பகைவர்களைக் கொல்லும் மனத்
 திட்பமும்   வினைத்  திட்பமுமே திருவாகக் கருதப்படுகின்றன.
 பால் போலும் நிறத்தையுடைய  பிறைத்திங்கள்  இறைவன்  முடியில்
 நுதல் போல விளங்குதலால், பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
 என்றார். பிறை   இறைவன்  நுதற்கண்ணே பொலிய விளங்கும் சென்னி
 யென்று  உரைப்பினும்  அமையும்  என்றற்கு, பிறை நுதல் அமையும்
 என்றார். ஒருவன், இறைவன் பெயர்களுள் ஒன்று; ஒருவனென்னும்
 ஒருவ  போற்றி எனச்  சான்றோர் கூறியிருத்தல்  காண்க. நீலமணி
 மிடற்  றொருவன்  என்ற  விடத்து,  நீலமணி  நிறம்   நஞ்சுண்டமை
 நினைப்பித்து, விண்ணோரமுதுண்டுஞ் சாவ ஒருவரும், உண்ணாத நஞ்
 சுண்டிருந்தருளச் செய்யும்  சிறப்பைப்  புலப்படுத்துகிறது. இறைவன்
 நஞ்சினைத் தானுண்டு   அமுதினை விண்ணோர்க்கு  வழங்கியது
 போல,  அதியமானும்   நெல்லிக்கனியே ஒளவைக்கீந்து சிறப்புற்றான்.
 தன்னை  நெடிது  வாழப்பண்ண   வேண்டுமெனக் கருதிய அவன்
 கருத்தை வியந்த ஒளவையார்,  அவனும்   இறைவன் போன்ற
 செய்கையுடையனாயது பற்றி,   அவ்விறைவனே  போல நிலைபெறுதல்,
 வேண்டுமென்றெண்ணி, ஒருவன்   போல  மன்னுக  பெரும
 நீயே என்றார். நெல்லிக்கனியின் அருமை  தோன்றப்   பெரும  நீயே
 என்றார்.  நெல்லிக்கனியின் அருமிசை - ஏறுதற்கரிய  உச்சி.   ஆதல் -
 நீடிய  உயிர் வாழ்க்கைக்கு ஆக்க மாதல்.  நெல்லிக்கனி  தன்னை
 யுண்டார்க்குச் சாதல் உண்டாகாமை   தருவது  தோன்றச்  சாதல்
 நீங்கஎன்றார். பிறிதோரிடத்தும், அதிகா, வன் கூற்றின் நாவை
 அறுப்பித்தாய்ஆமலகம் தந்து(தனிப் பாட்டு)      என்பதும் ஈண்டு
 நினைவுகூரத் தக்கது.
 |