10615 வை கூர்மை, வைக்கோல்
10616 வைகம் வைவோம்
10617 வைகல் நாள், காலம், வைகும் பொழுது, பொழுது, நாள் தோறும், விடியற் காலம்
10618 வைகலான் நாளின்கண்
10619 வைகலும் நாள்தோறும்
10620 வைகறை விடியல், விடியற் காலம்
10621 வைகியாங்கு கழிந்தாற் போல
10622 வைகு ஆர்ப்பு இடையறாத ஆரவாரம்
10623 வைகு சுடர் விடியுமளவும் எரியும் விளக்கு
10624 வைகுதல் தங்குதல், விடிதல்
10625 வைகுறு மீன் விடி வெள்ளி
10626 வைகுறு விடியல் வைகுதலுற்ற விடியற் காலம், அருணோதய காலம்
10627 வைகுந்து வைகும்
10628 வைத்தல் உடைத்தாயிருத்தல், வஞ்சித்தல்
10629 வைந் நுதி கூரிய நுனி
10630 வைந் நுனை கூரிய முனை
10631 வைப்பு நிலப் பகுதி, ஊர், செல்வம்
10632 வையம் பூமி, உலகம்
10633 வையா மாலையர் ஒரு தன்மையிலே வைத்து எண்ணப்படாதவர்
10634 வையாவிக் கோப்பெரும் பேகன் பேகன் என்னும் வள்ளல்
10635 வையினர் வைத்து
10636 வையை மதுரை அருகே ஓடும் நதி
10637 வை வார் வாளி கூர்மையுடைய நீண்ட அம்பு
மேல்