2015 |
எ |
வினா |
2016 |
எஃகம் |
வாள், வேல் |
2017 |
எஃகு |
கூர்மை, வேல், கத்தரிகை |
2018 |
எஃகுடை எழில் |
நுண்ணிய அழகு |
2019 |
எஃகுதல் |
வில்லால் பஞ்சினை அடித்தல், குறைதல் |
2020 |
எஃகுறுதல் |
அறுக்கப்படுதல், பன்னப் படுதல் |
2021 |
எஃகுறு பஞ்சி |
கடைகருவியால் கடையப் பெற்ற பஞ்சு |
2022 |
எக்கர் |
இடுமணல், நீர் கொணர்ந் திட்ட மணல், மேடு, மணற் குன்று |
2023 |
எக்கால் |
எப்பொழுது |
2024 |
எக்கி |
நீர் முதலியன வீசுங் கருவி |
2025 |
எக்குதல் |
மேலே செல்லுதல், மேலே செல்ல வீசுதல் |
2026 |
எகினம் |
அன்னம், கவரிமா, நாய் |
2027 |
எச்சம் |
பிறப்பிலே வரும் குறை, சந்ததி, உடம்பினை யொழித்து உயிர் போன இடம் |
2028 |
எச்சில் |
புரோடாசம், வேள்வித் தீயில் இடும் அரிசிமாவாலாகிய ஓமப்பொருள், வேள்வியில் தீ உண்டு எஞ்சிய சேடம் |
2029 |
எஞ்சாது |
ஒழியாமல் |
2030 |
எஞ்சாமை |
ஒழியாமை |
2031 |
எஞ்சினம் |
நீங்கினேம் |
2032 |
எஞ்சுதல் |
கெடுதல், கடத்தல் குறைதல், தனக்குப் பின் உரிமையாக வைத்தல், ஒழிவுபடுதல், கைகடந்து நிற்றல், பிரிதல், போதல், விட்டுப்போதல் |
2033 |
எடுக்கல் |
தூக்குகை |
2034 |
எடுக்கல் செல்லாது |
எடுத்தலாற்றாது, எடுக்க இயலாது |
2035 |
எடுக்கல்லா |
சுமக்கமாட்டாத |
2036 |
எடுத்த |
உண்டாக்கிச் சொன்ன, எதிர்ந்தன |
2037 |
எடுத்த சொல் |
பலகாற் கூறிய கூற்று |
2038 |
எடுத்தரற்றுதல் |
உயர்த்துக் கூப்பிடுதல் |
2039 |
எடுத்தல் |
சுமத்தல், எழுப்புதல், உண்டாக்குதல், உயர்த்தல், உயர்த்துப் புகழ்தல், உயர்தல், எடுத்தணைத்தல், தூக்குதல், மிகக் கூறுதல், மிகுத்தல், விழித்தல் |
2040 |
எடுத்து |
உயர்த்து, கூட்டி |
2041 |
எடுத்து ஆய்தல் |
உயர்த்து ஆராய்தல் |
2042 |
எடுத்து ஏத்துதல் |
மிகுத்துக் கொண்டாடுதல் |
2043 |
எடுத்து ஓதல் |
பலகாலும் கூறுதல் |
2044 |
எடுத்தேறு |
எடுத்தெறிகை |
2045 |
எடுப்புதல் |
துயிலைப் போக்குதல், நெருப்பை எழுப்புதல் |
2046 |
எண் |
எள், எண்ணம், எண்ணிக்கை, சூழ்ச்சி |
2047 |
எண்கின் ஏற்றை |
ஆண் கரடி |
2048 |
எண்கு |
கரடி |
2049 |
எண்ணல் |
ஆலோசனை |
2050 |
எண்ணுதல் |
கணக்கிடுதல், கருதுதல், சூழ்தல், நினைத்தல் |
2051 |
எண் நாட் திங்கள் |
அஷ்டமிச் சந்திரன் |
2052 |
எண்மதி |
எண் நாட் திங்கள் |
2053 |
எண்மை |
எளிமை |
2054 |
எதிர் |
நேர் முரண், எதிர்ப்படுவாய், மாறு |
2055 |
எதிர் ஒளி |
பிரதி பிம்பம் |
2056 |
எதிர் கழறுதல் |
ஒத்தல் |
2057 |
எதிர் குதிர் |
மாறுபடுதலைக் குறிக்கும் ஓர் உலக வழக்கு |
2058 |
எதிர்கொள்ளுதல் |
வரவேற்றல் |
2059 |
எதிர்சுளை |
சுவை மிக்க சுளை |
2060 |
எதிர்தல் |
ஏற்றுக் கொள்ளுதல், எதிர் கொள்ளுதல், மாறுபடுதல், தம்மிற் கூடுதல், பகைத்தல் |
2061 |
எதிர் தோன்றல் |
உருவெளித் தோற்றம் |
2062 |
எதிர்ந்தன்று |
மேற்கொண்ட தன்மைத்து |
2063 |
எதிர்ந்தனன் |
ஏற்றுக் கொண்டான் |
2064 |
எதிர்ந்தோர் |
மாறுபட்டோர் |
2065 |
எதிர்ப்பை |
வாங்கிய அளவே பொருளைத் திருப்பிக் கொடுப்பது |
2066 |
எதிர்பு |
ஏறட்டுக் கொண்டு, பிதிர்ந்து |
2067 |
எதிர் பேணுதல் |
எதிர் முகமாகச் சென்று உபசரித்தல் |
2068 |
எதிர் மலர் |
புதிய மலர் |
2069 |
எதிர் வரவு |
பிற்காலத்து வருகை |
2070 |
எதிர் வளி |
காற்றின் எதிரே |
2071 |
எதிரல்ல |
மாறல்ல |
2072 |
எதிரி |
ஏற்றுக் கொண்டு |
2073 |
எதிரிய |
எதிர் கொண்ட, ஏற்றுக் கொண்டிருக்கின்ற, தோன்றின |
2074 |
எதிரே |
முன்னே |
2075 |
எந்திரம் |
மதிற் பொறி, கரும்பு ஆலை |
2076 |
எந்தை |
என் தந்தை, என் தலைவன் |
2077 |
எந்தை பெயரன் |
என் தந்தை பெயர் தரித்த என் மகன் |
2078 |
எந்நீரிரோ |
எத்தன்மையில் உள்ளீரோ |
2079 |
எம்மனோர் |
எம்மை ஒத்தவர், நாங்கள் |
2080 |
எம்மோர் |
எம்மவர் |
2081 |
எம்மோன் |
எம்முடைய தலைவன் |
2082 |
எமர் |
எம்முடைய சுற்றத்தார், எம் சாதியார் |
2083 |
எமி |
தனிமை |
2084 |
எமியம் |
தமியேம் |
2085 |
எய் |
முள்ளம் பன்றி |
2086 |
எய்கணை |
வில்லிலிருந்து விடப்படும் அம்பு |
2087 |
எய்த்தல் |
இளைத்தல், அறிதல் |
2088 |
எய்த உரைத்தல் |
பொருந்தக் கூறுதல் |
2089 |
எய்தமை |
வருத்தினமை |
2090 |
எய்தல் |
பொருந்துதல், அனுபவித்தல் |
2091 |
எய்த வருதல் |
அணுக வருதல் |
2092 |
எய்திய |
பெற்றவை |
2093 |
எய்துதல் |
அணுகுதல், பொருந்துதல், அடைதல், சேர்தல் பெறுதல் |
2094 |
எய்துதல் வேட்கை |
அடைவதில் உள்ள விருப்பம் |
2095 |
எய்ம்மான் |
முள்ளம் பன்றி |
2096 |
எய்யா |
அறிய வொண்ணாத |
2097 |
எய்யாதாகின்று |
அறியாததாயிற்று |
2098 |
எய்யாமை |
அறியாமை |
2099 |
எய்யாய் |
அறியாய் |
2100 |
எய |
எய்கையினாலே |
2101 |
எயில் |
மதில், ஓர், ஊர், முப்புரம் |
2102 |
எயிற் பட்டினம் |
நல்லியக் கோடனுடைய ஊர் |
2103 |
எயிற்புறம் |
மதிற் பக்கம் |
2104 |
எயிற்றி |
எயினச் சாதிப் பெண், மறத்தி |
2105 |
எயிறு |
பல், யானைக் கொம்பு |
2106 |
எயிறு உண்கு |
வாயை முத்தம் இடுவேன் |
2107 |
எயிறு உணல் |
எயிற்றில் ஊறிய நீரை உண்ணல் |
2108 |
எயினர் |
மறவர் |
2109 |
எயினன் |
வேடன், ஓர் உபகாரி |
2110 |
எரி |
கார்த்திகை, வால் நட்சத்திரவகை, தீ, வெம்மை |
2111 |
எரிக் கொடி |
நெருப்பின் கொழுந்து |
2112 |
எரி கால் இளந் தளிர் |
நெருப்பைப் போன்ற ஒளியைக் கக்குகின்ற இளந்தளிர் |
2113 |
எரி சினம் |
எரியும் தீ |
2114 |
எரிநகை |
வெட்சி மலர் |
2115 |
எரி நுதி |
தீக் கொழுந்து |
2116 |
எரிப்பூ |
எரிபோலும் நிறமுள்ள பூ |
2117 |
எரி மலர் |
எரி போலும் நிறமள்ள தாமரைப் பூ |
2118 |
எரி மேய்தல் |
நெருப்புத் தின்னுதல், நெருப்பினால் வெந்து கரிதல் |
2119 |
எரு |
உலர்ந்த சாணம் |
2120 |
எருக்கங் கண்ணி |
எருக்கம் பூவினால் ஆன மாலை |
2121 |
எருக்கம் |
எருக்கு |
2122 |
எருக்கிய |
அறைந்து கொண்ட |
2123 |
எருக்குதல் |
வருத்துதல், வெட்டுதல், அடித்தல், அழித்தல், போக்குதல் |
2124 |
எருத்தம் |
கழுத்து |
2125 |
எருத்து |
கழுத்து |
2126 |
எருது |
இடபம் |
2127 |
எருந்து |
கிளிஞ்சில் |
2128 |
எருமை |
எருமை மாடு, யமன், கூற்றுவன், ஓர் உபகாரி |
2129 |
எருமைப் பெடை |
எருமையாகிய பேடு |
2130 |
எருவை |
தலை வெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து, கொறுக்காந்தட்டை, பஞ்சாய்க் கோரை |
2131 |
எருவைச் சேவல் |
பருந்தின் சேவல் |
2132 |
எல் |
ஒளி, சூரியன், பகல், மாலை, இரவு, பெருமை, இயக்கம் |
2133 |
எல்லரி |
சல்லி என்னும் ஒருவகை வாத்தியம், பறைவகை |
2134 |
எல்லா |
ஏட என்னும் முன்னிலைச் சொல், ஏடா, ஏடி |
2135 |
எல்லாம் |
எல்லோரும், முழுதும், யாவையும் |
2136 |
எல்லி |
பகல், இரவு, சல்லரி என்னும் வாத்தியம் |
2137 |
எல்லிய காலை |
இராவான காலம் |
2138 |
எல்லின்று |
ஒளி மழுங்கியது |
2139 |
எல்லினை |
விளக்கத்தினையுடையாய், அழகுடையை |
2140 |
எல்லீரும் |
நீங்கள் எல்லோரும் |
2141 |
எல்லுதல் |
ஒளி மங்குதல் |
2142 |
எல்லை |
பகல், சூரியன், வரம்பு, அளவு, மரண காலம் |
2143 |
எல்லை இல் இடும்பை |
முடிவு இல்லாத துன்பம் |
2144 |
எல்வளி |
பெருங் காற்று |
2145 |
எல் வளை |
ஒளி பொருந்திய வளையை உடையவள் |
2146 |
எல் விருந்து |
பகல் விருந்து |
2147 |
எலுவ |
நண்ப |
2148 |
எவ்வத் திரை |
மன வருத்தமாகிய திரை |
2149 |
எவ்வ நோய் |
எவ்வத்தைத் தருகின்ற காமநேய், வருத்தத்தையுடைய காம நோய் |
2150 |
எவ்வம் |
துன்பம், வருத்தம் |
2151 |
எவ்வம் படரன்மின் |
வருத்தமுறாதே கொள்ளுமின் |
2152 |
எவ்வாய் |
எவ்விடம் |
2153 |
எவ்வி |
ஒரு தலைவன் |
2154 |
எவ்வை |
எம் தங்கை |
2155 |
எவணரோ |
எவ்விடத்தில் உள்ளாரோ |
2156 |
எவன் குறித்தனை |
எத்தன்மையாகக் கருதினாய் |
2157 |
எவன்கொல் |
எத்தன்மையது கொல் |
2158 |
எவன் செய்தி |
என்ன காரியஞ் செய்கின்றாய், என்ன காரியஞ் செய்வை |
2159 |
எவன் போலுமோ |
என் போலேயிருக்கின்றது |
2160 |
எழ |
தோன்ற, உயர, கட்டும்படியாக |
2161 |
எழால் |
புல்லூறு என்னும் பறவை, யாழ் |
2162 |
எழில் |
அழகு, உயர்ச்சி, பருமை, எழுச்சி பெருமை |
2163 |
எழில் எஞ்சு மயில் |
பீலி உதிர்ந்த மயில் |
2164 |
எழில் நலம் |
அழகின் நலம், எழுச்சியும் நலனும் |
2165 |
எழில் நீலம் |
எழுச்சியையுடைய நீலம் |
2166 |
எழில் வரைத்தன்றி நலிதல் |
அழகைக் கெடுக்குமளவன்றி மிக வருத்தல் |
2167 |
எழில் வனப்பு |
உறுப்பழகும் தோற்றப்பொலிவும் |
2168 |
எழிலி |
மேகம், மேகத்திற்கு உரிய ஞாயிறு |
2169 |
எழிலிய |
அழகு வாய்ந்த |
2170 |
எழினி |
கடை வள்ளல்கள் எழுவருள் ஒருவன், எழினி அதியமான், அதியமான் மகன் |
2171 |
எழினியாதன் |
ஓர் உபகாரி |
2172 |
எழீஇ |
எழுந்திருந்து, எழுப்பி |
2173 |
எழீஇய |
வாத்தியம் வாசித்த |
2174 |
எழீஇயவை |
எழுப்பியவை, வாத்தியம் வாசிப்பவை |
2175 |
எழு |
கணைய மரம் |
2176 |
எழுத்து |
சித்திரம் |
2177 |
எழுத்துடை நடுகல் |
இறந்த வீரனது செய்தி பொறிக்கப் பெற்ற நடுகல் |
2178 |
எழுத்து நிலை மண்டபம் |
சித்திரம் நிற்றலையுடைய மண்டபம், சித்திர சாலை |
2179 |
எழுதரூஉ |
எழுந்து |
2180 |
எழுதரூஉம் |
தோன்றும் |
2181 |
எழுதல் |
பரவுதல், தோன்றுதல், போதல் |
2182 |
எழுதாக் கற்பு |
எழுதாத கிளவியைக் கற்ற கல்வி: அதாவது வேதம் உணர்தல் |
2183 |
எழுது எழில் |
எழுதுதற்கு ஏதுவாகிய எழில் |
2184 |
எழுது எழில் அம்பலம் |
சித்திரம் எழுதிய அழகிய பொது இடம், சித்திரசாலை |
2185 |
எழுதுகோ |
எழுதுவேனோ |
2186 |
எழுதுதல் |
பாவை முதலியன நிருமித்தல், குழித்தல் |
2187 |
எழுந்த சொல் |
பிறந்த சொல் |
2188 |
எழுந்து ஆர்த்தல் |
மிக்கு ஆரவாரித்தல் |
2189 |
எழுந்து இசைத்தல் |
மிக்கு ஒலித்தல் |
2190 |
எழுபு |
எழுந்து |
2191 |
எழுமீன் |
சப்தரிஷி மண்டலம் |
2192 |
எழுமுடி |
வெல்லப்பட்ட ஏழரசர் முடியாற் செய்த சேரன் மாலை |
2193 |
எழூஉ |
கணைய மரம் |
2194 |
எழூஉக |
எழுப்புவார்களாக |
2195 |
எழூஉம் |
உணரும், துயிலெழும், உயர்ந்துபோம் |
2196 |
எள் |
எள்ளுதல், இகழ்தல், ஒரு தானியம் |
2197 |
எள் அற விடுதல் |
பிறரை இழித்தல் |
2198 |
எள் அறு காதலர் |
இகழ்ந்திருத்தல் நீங்கின காதலர் |
2199 |
எள்ளல் |
இகழ்கின்ற இகழ்ச்சி, இகழ்ந்திருத்தல் |
2200 |
எள்ளுதல் |
இகழ்தல் |
2201 |
எள்ளுபு |
இகழ்ந்து |
2202 |
எளியம் |
எளியேம் |
2203 |
எளியவோ |
எளியவாய் இருக்குமோ |
2204 |
எளிவரல் |
எளியராந்தன்மை தோன்றல் |
2205 |
எற் காட்டி |
எனக்குக் காட்டி, எனக்குக் காட்டுவாய் |
2206 |
எற்கு |
எனக்கு |
2207 |
எற்படுபொழுது |
அத்தமிக்கும் காலம் |
2208 |
எற்றம் |
மனத் துணிபு, துணிவு |
2209 |
எற்றமிலாட்டி |
துணிவில்லாதாள் |
2210 |
எற்றா மழு |
வெட்டாத மழு |
2211 |
எற்றி |
துணிந்து |
2212 |
எற்று |
எத்தன்மைத்து |
2213 |
எற்றுதல் |
நினைத்தல், வெட்டுதல், மோதுதல் |
2214 |
எறி |
வீசுதல் |
2215 |
எறிஉளி |
எறிகின்ற உளி, ஓர் ஆயுதவகை |
2216 |
எறிகோல் |
பறையை அடிக்கும் குறுந்தடி |
2217 |
எறித்த படை |
கலப்பையில் தைக்கும் படைவாள், கொழு |
2218 |
எறித்தல் |
தைத்தல், உறைத்தல் |
2219 |
எறிதர |
எறிதலைச் செய்ய |
2220 |
எறிதல் |
வெட்டுதல், அறுத்தல், அலைத்தல், தள்ளுதல், முறித்தல், அறைதல், பொழிதல், செறித்தல், நுகர்வித்தல், இறையைப் பாய்ந்தெடுத்தல், அடித்தல், அழித்தல், ஒத்துதல், கொட்டுதல், வீசுதல் |
2221 |
எறி திரைத் திவலை |
வீசுகின்ற அலைகளின் நீர்த்துளி |
2222 |
எறிந்தவை |
அழுந்தப் பட்டவை |
2223 |
எறி பந்து |
அடிக்கின்ற பந்து |
2224 |
எறி புனம் |
வெட்டிச் சுட்ட கொல்லை நிலம் |
2225 |
எறியா |
அடித்துக் கொண்டு |
2226 |
எறியாது விடாது |
நுகர்வியாமற் போகாது |
2227 |
எறியா வாள் |
வெட்டாத வாள் |
2228 |
எறும்பி |
எறும்பு |