2566 ஓக்கிய உயர்த்திய, எடுக்கப்பட்ட, அறுதியிட்டு வைத்த
2567 ஓக்குதும் செலுத்துவோம்
2568 ஓக்குபு ஓச்சி
2569 ஓங்கல் உயர்தல், மலையுச்சி
2570 ஓங்கிய உயர்ந்த, வளர்ந்த
2571 ஓங்கு இரும் பெண்ணை உயர்ந்த கரிய பனை
2572 ஓங்கு உயர் எழில் யானை உத்தம இலக்கணங்கள் ஓங்கும் சிறந்த அழகினை உடைத்தாகிய யானை
2573 ஓங்குதல் மிகுதல், உயர்தல்
2574 ஓங்குமிசை உயர்ந்த இடம்
2575 ஓங்கு வரல் விரி திரை உயர்ந்து வருதலையுடைய விரிந்த அலை
2576 ஓச்சம் உயர்வு
2577 ஓச்சி எடுத்து, ஓட்டி, குத்தி, உயர்த்தி
2578 ஓச்சுதல் உயர்த்துதல், ஓட்டுதல்
2579 ஒட்டை மனம் இளநெஞ்சு, திண்மை அற்ற மனம்
2580 ஓடல் கெட்டுப் போதல்
2581 ஓடியுழி ஓடிய இடம்
2582 ஓடின்று ஓடிற்று
2583 ஓடு மூன்றாம் வேற்றுமை உருபு
2584 ஓடு எரி நடந்த வைப்பு கனல் பரக்கும் இடம்
2585 ஓடு கலம் தண்ணீரின் மீது செல்லும் மரக்கலம்
2586 ஓடுதல் வருந்துதல், பிறக்கிடுதல், கழலுதல், கழன்று போதல், கெடுதல், பரத்தல், விரைந்து செல்லுதல்
2587 ஓடுவளை சுழல்கின்ற வளையல்
2588 ஓடை நெற்றிப் பட்டம், பட்டம்
2589 ஓத்திரம் ஓமத்திற்குரிய பொருள், ஒரு வகை நெல்
2590 ஓதநீர் ஒலியையுடைய கடல்
2591 ஓதம் வெள்ளம்
2592 ஓதி மகளிர் தலை மயிர், ஓந்தி
2593 ஓதிம விளக்கு அன்னப்புள் உருவாய்ச் செய்யப் பெற்ற விளக்கு
2594 ஓதி முது போத்து முதிய ஆண் ஓந்தி
2595 ஓதுதல் பாடுதல், கூறுதல்
2596 ஓதை ஓசை, ஆரவாரம்
2597 ஓப்புதல் ஓட்டுதல்
2598 ஓப்புதும் ஓட்டுவோம்
2599 ஓப்புந்து ஓட்டும்
2600 ஓப்புநர் ஓட்டுவார்
2601 ஓம் (ஓவும்) ஒழிவீராக
2602 ஓம்படுப்பல் பாதுகாப்பது செய்வேன்
2603 ஓம்பல் மறைத்தல், காத்தல்
2604 ஓம்பினை கொண்மே பாதுகாத்துக் கொள்
2605 ஓம்பு தவிர், பரிகரி, பரிகரித்துக் கொள், பாதுகாப்பாயாக
2606 ஓம்புதல் பேணுதல், நடத்துதல், பரிகரித்துக் கொள்ளுதல், பாதுகாத்தல், பேணிக் கொள்ளுதல்
2607 ஓம்புதல் வேண்டும் பாதுகாத்தலை விரும்பும்
2608 ஓம்புமதி பாதுகாப்பாயாக
2609 ஓம்புமின் பரிகரிமின், பாதுகாப்பீராக
2610 ஓ மறத்தல் ஒழிவறுதல்
2611 ஓமை ஒரு வகை மரம்
2612 ஓமைய சுரன் ஓமை மரங்களையுடைய பாலை நிலம்
2613 ஓய்தல் மாறுதல், இளைத்தல்
2614 ஓய் விடு நடைப் பகடு உழுது விட்ட ஓய்ந்த நடையை யுடைய பகடு
2615 ஓர் ஒப்பில்லாத, ஓர்ந்து, பார், ஒன்று
2616 ஓர் ஆ ஒற்றைப் பசு
2617 ஓர் உயிர்ப் புள் இருதலைப்புள்
2618 ஓர்க்கும் ஓராநிற்கும், நினைக்கும்
2619 ஓர்த்தல் கருதுதல், சூழ்தல், நினைத்தல், கூர்ந்து கேட்டல்
2620 ஓர்தல் ஆராய்தல், நினைதல்
2621 ஓர்ப்பது கருதுவது
2622 ஓர்ப்பின் ஓர்ப்பராயின்
2623 ஓர் யாட்டு ஒரு கால் வரவு ஓர் யாண்டிடத்து ஒரு கால் வருகின்ற வரவு
2624 ஒர்வு ஓர்தல்
2625 ஓரற்று ஒரு தன்மைத்து
2626 ஓரன்மை ஒரு தன்மை அல்லாமை
2627 ஓரன்ன ஒத்த
2628 ஓரனையேன் ஒரு தன்மையேன்
2629 ஓராங்கு ஒரு சேர, ஒன்று போல, ஒருபடிப்பட, ஒரு தன்மைப்பட, ஒன்றாக
2630 ஓராதி ஓராதே
2631 ஓராம் பாரோம்
2632 ஓரி குதிரைப் பிடரி மயிர், தேன் முதிர்தலாற் பிறக்கும் நீலநிறம், ஆண்பிள்ளையின் தலை மயிர், ஒரு வள்ளல்
2633 ஓரியர் சக்கரவாள சக்கரவர்த்திகள், வித்யாதரர், நாகர்
2634 ஓரும் அசைச் சொல்
2635 ஓரும் கண் ஆராய்ந்து பார்க்கும் கண்
2636 ஓரை மகளிர் விளையாட்டு
2637 ஓரை அயர்தல் ஓரைப் பாவையை வைத்து மகளிர் விளையாடுதல்
2638 ஓரை மகளிர் விளையாட்டினையுடைய மகளிர்
2639 ஓலை தென்னை, பனை, இவற்றின் மடல்; குடை
2640 ஓவம் சித்திரம்
2641 ஓவலை ஒழிவாய் அல்லை
2642 ஓவா மாறாத
2643 ஓவாது மாறாமல்
2644 ஓவாமை ஒழியாமை, மாறாமை
2645 ஓவான் ஒழியான்
2646 ஓவிறந்து நீக்கம் இன்றி
2647 ஓவு சித்திரம், ஒழிவு
2648 ஓவுதல் ஒழிதல்
மேல்