3983 |
கை |
ஏழனுருபுள் ஒன்று, அசைநிலை, செயல், கரம், யானைத் துதிக்கை, வண்டியின் ஓர் உறுப்பு, வீட்டின் ஓர் உறுப்பு, கைப்பிடி, கைத்தொழில் உலக வொழுக்கம், ஒழுங்கு |
3984 |
கை ஆற்றாள் |
கையாற் கடிய மாட்டாள் |
3985 |
கைஇ |
கோலஞ் செய்து |
3986 |
கைக்கொள்ளல் |
கொள்ளல், பற்றிக் கொள்ளுதல் |
3987 |
கை கவர் இரும்பு |
உலைத் துருத்தியின் வாயிரும்பு |
3988 |
கை கவர் தார் |
கை எனும் உறுப்பைக் கவர்கின்ற விரைந்த தூசிப்படை |
3989 |
கை கவர் முயக்கு |
கைகள் விரும்புகின்ற கூட்டம் |
3990 |
கை கவி தேறல் |
கையைக் கவித்தற்குக் காரணமான கள் |
3991 |
கை காய்த்துதல் |
எரியச் செய்தல் |
3992 |
கை சுமந்து அலறுதல் |
கைகளைத் தலை மேலேந்தித் தம் குறையை எடுத்துக் கூறுதல் |
3993 |
கைசெய் |
அழகுறச் செய்யப் பெற்ற |
3994 |
கை சேர்த்த |
தூக்கி வைத்த |
3995 |
கைத் தங்கா |
நின்னிடத்தே தங்கி |
3996 |
கை தூவாமை |
கையொழியாமை |
3997 |
கைதூவு |
செயலற்றிருக்கை |
3998 |
கைதூவுதல் |
கையொழிதல் |
3999 |
கைதை |
தாழை |
4000 |
கை தொழுதல் |
கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல் |
4001 |
கை தோய்வு |
கையால் எட்டிப் பிடிக்கக் கூடிய நிலை |
4002 |
கைந் நிறுத்துதல் |
நிலை நிறுத்துதல், அடக்குதல் |
4003 |
கைந் நீவுதல் |
அவமதித்துக் கடத்தல் |
4004 |
கைந்நூல் |
கையிற் கட்டும் காப்பு நாண் |
4005 |
கைநிமிர்தல் |
கைகடத்தல் |
4006 |
கைநில்லா |
கையின் எல்லையில் நில்லா, மீறிப் போகும் |
4007 |
கைநில்லாது |
என்பால் நில்லாது போய் விடும் |
4008 |
கை நீவி |
கை கடந்து |
4009 |
கைநெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன் |
கை நெகிழ்ந்து, வீழ்ந்தேனாக அவன் கருதும்படி பொய் உண்டாக வீழ்ந்தேன், கை தவறி விழுந்தாள் என்று தலைவன் எண்ணும்படி பாசாங்கு செய்து, ஊஞ்சலிலிருந்து விழுந்தேன் |
4010 |
கைப்படுக்கப் பட்டாய் |
அகப்படுக்கப் பட்டாய், அகப்படுத்திக் கொள்ளப்பட்டாய் |
4011 |
கைப்படுத்தல் |
தெளிதல் |
4012 |
கைப்பற்றுதல் |
கையால் வலிதிற் பிடித்துக் கொள்ளுதல், கையாற் பிடித்தல் |
4013 |
கைப் பிணி |
கையால் தழுவுகை |
4014 |
கைப் போர் |
புதிய போர் |
4015 |
கைப்போன் |
செலுத்துவோன் |
4016 |
கை பரிதல் |
ஒழுங்கு குலைதல் |
4017 |
கை பிணைதல் |
கை கோத்தல் |
4018 |
கை பிணைந்து |
கையைக் கோத்து |
4019 |
கை பிற்கொளீஇ |
கையைப் பின்புறமாக வைத்துப் பிணைத்தல் |
4020 |
கை புடைத்தல் |
கை தட்டுதல் |
4021 |
கை புனைதல் |
அலங்கரித்தல் |
4022 |
கை புனை வேழம் |
கையால் அலங்கரிக்கப் பெற்ற யானை |
4023 |
கைம் மகவு |
கைக் குழந்தை |
4024 |
கைம்மா |
யானை |
4025 |
கைம்மாறி |
ஒழுக்கத்தைக் கைவிட்டு |
4026 |
கைம்மாறுதல் |
மேற்கொள்ளுதல், ஒழுக்கத்தைக் கைவிடுதல் |
4027 |
கைம்மிக |
அளவுமிக |
4028 |
கைம்மிகல் |
அளவு கடத்தல், மிகுதல் |
4029 |
கைம்மிகுதல் |
ஒழுக்கத்து எல்லையைக் கடத்தல், கடத்தல், கை கடத்தல் |
4030 |
கைம்முற்றல |
முடியா |
4031 |
கைம்முற்றுதல் |
முடிவு பெறுதல் |
4032 |
கைம்மை |
கைம்மைத் துன்பம் |
4033 |
கை மடித்து உயவும் |
துதிக்கையை மடித்துக் கொண்டு வருந்தும் |
4034 |
கையகப்படுதல் |
வசப்படுதல் |
4035 |
கையது |
கையிடத்தது |
4036 |
கையதை |
கையிடத்தது |
4037 |
கையழிதல் |
செயலறுதல் |
4038 |
கையற்ற கங்குல் |
உயிர்களெல்லாம் செயலறுதற்குக் காரணமான கங்குல் |
4039 |
கையறல் |
இல்லை யாதல், செயலறல் |
4040 |
கையறவு |
ஊடல், தரித்திரம் |
4041 |
கையறுதல் |
செயலறுதல், செயலற்று வருந்துதல் |
4042 |
கையறு நெஞ்சு |
செயலற்ற மனம் |
4043 |
கையறுபு |
செயலழிந்து |
4044 |
கையறு மாலை |
செயல் அறுதற்குக் காரணமாகிய மாலைப்பொழுது |
4045 |
கையாறு |
செயலறுகை, ஒழுக்க நெறி, உயிர்ப்பின்றி வினையொழிந்து அயர்தல், வினையொழிந்தயர்தல் |
4046 |
கையாறு ஓம்புதல் |
செயல் அறுதலை ஒழித்தல் |
4047 |
கையின் |
கையாலே |
4048 |
கையுடை நல் மா |
துதிக்கையையுடைய நல்ல ஆண் யானைகள் |
4049 |
கையுறை |
கையின் கண்ணே சேர்ப்பது, காணிக்கை |
4050 |
கையெறிதல் |
கையைத் தட்டல் |
4051 |
கையொடு கண்டாய் |
கையோடே பிடித்துக் கொண்டாய் |
4052 |
கையொடு கோட்பட்டாம் |
கையோடே பிடித்துக் கொள்ளப்பட்டேம் |
4053 |
கை வல் சீறியாழ் |
பண்ணை வாசித்தலில் வல்ல சிறிய யாழ் |
4054 |
கைவழி |
யாழ் |
4055 |
கை வள் ஓரி |
கை வண்மையை உடைய ஓரி |
4056 |
கைவளை |
கையின்கண்ணே அணியும் வளையல் |
4057 |
கைவிடுதல் |
கைசோர விடுதல், எறிதல், கைவிடுவாயாக |
4058 |
கைவினை மாக்கள் |
தொழில் புரியும் உழவர் |