1 அகழியில் முதலையை இடுதல் பதி. 53:8: புற. 37:7-8
2 அசுண மாவைப் பிடிக்கும் முறை நற். 304:8 - 9
3 அணிகளும் மாலைகளும் கலி. 85:12-16
4 அணியும் பூமாலை கலி. 91:1-5
5 அந்தணர் அதிகாலையில் வேதம் ஒதுதல் மது. 655-656
6 அந்தணர் அந்தியில் செய்யும் கடன் புற. 2:22 - 24
7 அந்தணர் அறுதொழில் புரிதல் பதி. 24:6-8
8 அந்தணர் இல்லில் கோழியும் நாயும் வளர்க்காமை பெரு. 299-301
9 அந்தணர் தீயை வழிபடுதல் கலி. 119: 12-13; புற. 397:20-21
10 அந்தணர் பூணூல் தரித்தல் முரு. 183-184
11 அந்தணர் முருகனை வழிபடும் முறை முரு. 183-187
12 அந்தணரின் வாழ்க்கை முறை முரு. 177-182
13 அந்திக் காலத்துக் கடை மது. 544
14 அயலார் சுடலையைப் பாராமை குறு. 231:3-4
15 அரசர் அளிக்கும் உணவு வகை பொரு. 103-119
16 அரசர் அளிக்கும் பரிசில்கள் பொரு. 151-173; சிறு. 246:261; மது. 101-103; மலை. 568-581; பதி. தி. 3:2-3; புற. 377:16-20; 392:14-21
17 அரசர் இலாஞ்சனை பொறித்தல் புற. 33:8-9; 39:15-16
18 அரசர் உணவு அளிக்கும் வகை சிறு. 236-245
19 அரசர்க்குத் திறை கொடுத்தல் கலி. 141:24-25
20 அரசர்கள் விருந்தோம்பும் முறை பொரு. 74-89
21 அரசர் நாளவையில் வீற்றிருத்தல் பொரு. 54-55; பதி. 61:17-18; 65:13; அக. 76:3-5
22 அரசர் பகைவர் மதிலை அழித்தல் பதி. 37:9-11
23 அரசர் முரசு மூன்று ஆள்தல் கலி. 132: 4-5
24 அரசர் யானைப் பரிசில் அளித்தல் பொரு. 125-126
25 அரசருக்கு வெண் கொற்றக் குடை உரியது பதி. 52:29-31; புற. 75:10-12, 174:15-16
26 அரசரைச் சந்தி செய்வித்தல் குறி. 27-28; கலி. 46:7-8
27 அரசவையில் முறையிடுதல் குறு. 276, 5-6; பொரு. 187-188
28 அரசன் குடிகளைப் பாதுகாத்தல் புற. 35:31-34
29 அரசன் குடிகளோடு புதுப் புனலாடுதல் பரி. தி. 2:91-97
30 அரசன் நின்று பாணர் முதலியோர்க்கு உணவு கொடுத்தல் சிறு. 244-245
31 அரசன் பாசறையில் இருத்தல் பதி. 16:1-9
32 அரசன்மேல் ஆணையிடல் கலி. 94:36
33 அரசனே உலகுக்கு உயிராவன் எனல் புற. 186:1-2
34 அரசனை வாழ்த்துதல் கலி. 104:78-80, 105:71-75, 106:47-50
35 அரிசிப் பலி சிதறுதல் பட். 165
36 அரையில் அணியும் ஆபரணம் ஐங். 310:1
37 அரையில் பொலங்காசு அணிதல் அக. 269:15-16
38 அவல் இடித்தல் பெரு. 224-226
39 அவையத்து நீதி வழங்குதல் புற. 39:8-10, 71:7-9
40 அறச்சாலை அமைத்தல் பட். 42-43
41 அற நூல் வழக்கை எடுத்துக் காட்டுதல் கலி. 62:14-15
42 அறம் கூறும் அவையத்தார் இயல்பு மது. 489-492.
மேல்