4669 சூட்டிய நடாத்திய, பரப்பிய
4670 சூட்டு வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச் சூழ அமைக்கப்பட்ட வளைவு மாம், மத்தக மணி
4671 சூட்டு அயல் அரிச் சூட்டின் பக்கம்
4672 சூட்டுதல் ஆணை முதலியன செலுத்தல், பரப்புதல்
4673 சூடா நறவு கள்; நறவு என்னும் ஊர்
4674 சூடு சூட்டிறைச்சி, சுடப்பட்டது, நெற்கட்டு, நெற்சூடு
4675 சூடுதல் கவிதல், தலையில் அணிதல்
4676 சூடு நறவு நறவம் பூ
4677 சூது உட்புரை, உள் துளை
4678 சூர் அச்சம், கடுப்பு, கொடுமை, சூர பதுமன், தெய்வம்
4679 சூர்ப்பு வளைவு, கைக்கடகம், கொடுந்தொழில்
4680 சூர்மருங்கு சூரபன்மாவும் அவன் சுற்றமும்
4681 சூரல் சுழித்தடிக்கை, சூரற் கொடி, சூரை, பிரம்பு
4682 சூல் கருப்பம், முட்டை, மேகம் நீர் நிரம்பியிருக்கை
4683 சூல் வயா சூலான் உண்டான வயா நோய்
4684 சூலி துர்க்கை
4685 சூழ் கோடை சூழ் வளி
4686 சூழ்ச்சி ஆலோசனை
4687 சூழ்த்தல் சுற்றுதல்
4688 சூழ்தந்து சூழ்தலைச் செய்து
4689 சூழ்தல் ஆராய்தல், எழுதுதல். நினைத்தல், கருதுதல், பண்ணுதல், உசாவுதல், சுற்றுதல், தங்குதல்
4690 சூழ்ந்தவை நுகரக் கருதியவை
4691 சூழ்ந்தார் துணிந்தார்
4692 சூழ்ந்திசின் எண்ணினேன்
4693 சூழ்பு சூழ்ந்து
4694 சூழ்வதை சூழ்கின்ற காரியம்
4695 சூழ்வலோ சூழ்வேனோ
4696 சூழாதி நினையாதே
4697 சூழாதே கருதாமல்
4698 சூழி நீர்நிலை, யானையின் முக படாம்
4699 சூழும் வயங்கு நீர் சூழ்ந்து விளங்குகின்ற நீர்
4700 சூள் சூளுறவு, சபதம்
4701 சூள்தல் ஆணையிடுதல்
4702 சூள் வாய்த்த மனத்தவன் சூளுற்ற மனத்தையுடையவன்
4703 சூளின் ஆணையிட்டால்
4704 சூளை செங்கல் முதலியன சுடும் காளவாய்
மேல்