5040 |
ஞாங்கர் |
அங்கே, பக்கம், மேல், இடம், வேலாயுதம் |
5041 |
ஞாட்பு |
போர் |
5042 |
ஞாண் |
கயிறு, வில்லின் நாண் |
5043 |
ஞாய் |
தாய், நின்தாய் |
5044 |
ஞாயர் |
தாய்மார், நின் தாய்மார் |
5045 |
ஞாயர் மாட்டைப்பால் |
நின்தாய்மாரிடத்துப் பொருந்திய பால் |
5046 |
ஞாயில் |
மதிற்சூட்டு |
5047 |
ஞாயிற்று எல்லை |
பகற் காலம் |
5048 |
ஞாயிற்றுப் புத்தேள் மகன் |
கன்னன் |
5049 |
ஞாயிறு |
சூரியன் |
5050 |
ஞால் |
தொங்குகின்ற |
5051 |
ஞால |
நான்று விழும்படி |
5052 |
ஞாலம் |
உலகம், ஞாலத்திலுள்ளார் |
5053 |
ஞாலம் மூன்று அடித் தாய முதல்வன் |
உலகம் மூன்றையும் தன் திருவடியாலே அளந்த எப்பொருட்கும் முதலாயிருக்கின்றவன், திருமால் |
5054 |
ஞாலுதல் |
நாலுதல், தாழ்தல், பொழுது சாய்தல் |
5055 |
ஞாழல் |
புலிநகக் கொன்றை |
5056 |
ஞாளி |
நாய் |
5057 |
ஞான்ற ஞாயிறு |
சூரியாஸ்தமன சமயம் |
5058 |
ஞான்று |
நாள், பொழுது, இறங்கி, தொங்கி |
5059 |
ஞான்றை |
ஞான்று, பொழுது |