5477 திகழ்தரும் விளக்கத்தைத் தருகின்ற
5478 திகழ்தல் உள்ளடக்கிக் கொள்ளுதல், விளங்குதல்
5479 திகிரி சக்கராயுதம், சூரியன், தேருருள்
5480 திகிரியான், திகிரியோன் திருமால்
5481 திங்கட் கண்ணியன் சிவன்
5482 திங்கட் குழவி பிறைச் சந்திரன்
5483 திங்கள் சந்திரன், மாதம்
5484 திசை திக்கு
5485 திசைதிசை திசைதோறும்
5486 திட்டை மேடு
5487 திண் தேர் திண்ணிய தேர்
5488 திண் பிடி திண்ணிய குசை
5489 திண்மை உறுதி, பெருமை
5490 திணி திட்பம், செறிவு
5491 திணிதல் செறிதல்
5492 திணை ஒழுக்கம், குலம், திண்ணை, நிலம், வீடு
5493 தித்தன் ஒரு பழைய சோழ அரசன்
5494 தித்தி தேமல், திதலை
5495 தித்தியம் தித்தி, வேள்விக் குண்டம்
5496 திதலை ஈன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம், தேமல், துத்தி
5497 திதனி திதலை
5498 திமிர்தல் தடவுதல், பூசுதல், அப்புதல், வாரியிறைத்தல், பிசைதல்
5499 திமிரி திமிர்ந்து
5500 திமில் குட்டேறு, மரக்கலம், படகு
5501 திமிலோன் மீன் பிடிப்போன்
5502 திரங்கல் வாடல்
5503 திரங்குதல் உலர்தல், தளர்தல், சுருங்குதல்
5504 திரள் திரட்சி
5505 திரள்தல் மிகுதல்
5506 திரி முறுக்குகை, விளக்குத் திரி
5507 திரித்தல் சுழற்றுதல், சோதித்தல்
5508 திரிதர திரிதலைச் செய்ய
5509 திரிதரல் இயங்குதல்
5510 திரிதல் சுற்றுதல், அலைதல், திருகுறுதல், மயங்குதல், வேறுபடுதல்
5511 திரிபு வேறுபாடு, திரிந்து, வேறுபட்டு
5512 திரிபுறீஇ மனத்தைத் திரிவுறுத்தி
5513 திரிமரம் தானியம் அரைக்கும் திரிகை
5514 திரி மருப்பு முறுக்கின கொம்பு
5515 திரி மருப்பு ஏறு திரிந்த கொம்பினை உடைய மான் ஏறு
5516 திரு அழகு, அமைதி, செல்வம், திரு மகள்
5517 திருகல் முறுகல்
5518 திருகுதல் முறுகுதல்
5519 திருச் சீரலைவாய் திருச்செந்தூர்
5520 திருத்தகும் அழகு பெறும்
5521 திருத்துதல் திருத்தல், அழகுபடச் செய்தல், செவ்விதாக்குதல், மேன்மைப்படுத்துதல்
5522 திருந்தடி நன்றாகிய அடி, பிறக்கிடாத அடி
5523 திருந்தாத செய்தல் நன்மையாகாத காரியங்களைச் செய்தொழுகுதல்
5524 திருந்திழை பெண்
5525 திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு திருந்தின இழையினையுடையாளைத் தான் பெறுதற்குப் பொருந்தின வார்த்தைகளைத் தான் கூறக் கேட்டு
5526 திருந்து தொடை தப்பாத தொடை
5527 திருந்துபு திருந்தி
5528 திருநகர் செல்வமுள்ள மனை
5529 திரு நலம் திருவின் நலம் போன்ற நலம்
5530 திருநாள் திருவிழா திருநிலைஇய வீங்கு சோற்று அகல் மனை செல்வம் நிலை பெற்ற மிகுகின்ற சோற்றையுடைய அகன்ற மனையிடம்
5531 திரு நுதல் அழகிய நுதல்
5532 திருப்பரங்குன்றம் முருகக் கடவுளின் படை வீடு ஆறனுள் ஒன்றும் மதுரைக்குத் தென் மேற்கில் உள்ளதுமான குன்று
5533 திருமருதந் துறை திருமருத முன்துறை
5534 திருமருதமுன்துறை மதுரையில் வைகை நதித் துறை
5535 திருமறு திருவாகிய மறு (ஸ்ரீவத்ஸம்)
5536 திருமறு மார்பன் திருமால்
5537 திருமா மெய் அழகினையுடைய மாந் தளிர்போலும் நிறத்தினையுடைய மெய்
5538 திருமாவுண்ணி ஏதிலாளனால் ஏற்பட்ட கவலையினால் தன் ஒரு முலையை அறுத்த ஒரு பெண்மணி இவளைக் கண்ணகி என்று கருதுவாரம் உளர்
5539 திருவாவினன்குடி மதுரை ஜில்லாவைச் சார்ந்ததும் முருகக் கடவுள் படைவீடு ஆறனுள் ஒன்றுமாகிய பழனி என்னும் தலம்
5540 திருவில் இந்திர வில்
5541 திருவேரகம் முருகக் கடவுள் கோயில் கொண்ட ஆறு படை வீடுகளுள் ஒன்று
5542 திரை அலை, அலையொலி
5543 திரைத்தல் தன்னுள் அடக்குதல்
5544 திரைதந்திட திரை ஏறக்கொண்டு வந்து போகடுகையினால்
5545 திரை துகில் திரைத்த துகில்
5546 திரைப்பு திரையால் மறைத்த இடம்
5547 திரையன் கடல் வழியாக வந்து தொண்டை நாட்டை ஆண்டதாகக் கருதும் பழைய அரச வகுப்பினன்
5548 தில் ஒழியிசை, காலம், விழைவுப் பொருள்களில் வரும் இடைச்சொல்
5549 தில்ல தில்
5550 தில்லை மரவகை, உப்புநீர் அருகே வளர்வதொரு மரம், நெய்தல் நிலத்துக்கு உரிய ஒரு மரம்
5551 திலகம் நெற்றிப் பொட்டு, மஞ்சாடி மரம்
5552 திலதம் திலகம்
5553 திவலை நீர்த் துளி
5554 திவவு யாழ்த்தண்டிலுள்ள நரம்புக்கட்டு
5555 திளைஇ திளைத்து
5556 திளைத்தல் அசைத்தல், விளையாடுதல், புணர்ச்சி
5557 திளையாமை நெருங்காமை
5558 திற்றி இறைச்சி
5559 திறத்து இடத்தே
5560 திறப்பல் வெளியிடுவேன்
5561 திறம் கூறுபாடு, பாகுபாடு, சார்பு, வழி, பக்கம், உடம்பு, பண்களுள் ஒன்று
5562 திறல் ஒளி, வலி, வலிமை
5563 திறவது இல் செல்லுதற்குத் திறவதாகிய இல்
5564 திறவோன் பகுத்தறிவுள்ளவன்
5565 திறன் கூறுபாடு, வகை, நற்குணம்
5566 திறை கப்பம்
5567 தின்ம் தின்னுங்கள்
5568 தின்றி தின்பாய்
5569 தின்னுதல் உண்ணுதல் வெட்டுதல்
5570 தின தின்று விட
5571 தினப்படல் இரை என்று தின்னப்படுதல்
5572 தினை சிறு தானிய வகை
5573 தினை உணங்கல் உலர்ந்த தினை
5574 தினைக்கால் தினை அரிந்த தாள்
5575 தினைப் பிரப்பு தினையையுடைய பிரப்பு
மேல்