5626 துகள் குற்றம், துளி, புழுதி, பொடி, பழுது, பூந்துகள்
5627 துகிர் பவளம், பவளப் பலகை
5628 துகிர்க் கோவை பவள வடம்
5629 துகில் வெள்ளிய ஆடை, தலைப்பாகை, சிறந்த உடை வகையுள் ஒன்று
5630 துகில் போர்வை துகிலால் போர்த்த போர்வை
5631 துகில் முடித்தல் தலைப்பாகை கட்டுதல், மயிர்க் கட்டுக் கட்டுதல்
5632 துச்சில் குடியிருப்பு, தங்கும் இடம்
5633 துஞ்ச துயில் கொள்ள
5634 துஞ்சல் மடிதல்
5635 துஞ்சலை துயில் கொள்ளாய்
5636 துஞ்சா நோய் துயிலாத காம நோய்
5637 துஞ்சாமை மடிதலில்லாமை
5638 துஞ்சாய் மடியாய்
5639 துஞ்சு துஞ்சு குழல்
5640 துஞ்சு குழல் ஐம்பால் வகையுள் ஒன்று, ஐம்பால்களுள் பின்னித் தொங்க விட்ட கூந்தல் வகை
5641 துஞ்சுதல் தங்குதல், துயிலுதல், தொழிலின்றியிருத்தல், சோம்புதல், தூங்குதல், மடிந்திருத்தல், இறந்து படுதல்
5642 துஞ்சு மரம் மதில் வாயிற் கணைய மரம்
5643 துட்கு அச்சம்
5644 துடக்கல் சுற்றல், பிணித்தல், இழுத்தல்
5645 துடக்குதல் அகப்படுத்துதல், கட்டுதல்
5646 துடரி தொடரி, செடிவகை
5647 துடவை தோட்டம்
5648 துடி ஒரு வாச்சியம், உடுக்கை என்னும் பறை வகை
5649 துடியன் துடி கொட்டும் சாதியான், உடுக்கை அடிப்பவன்
5650 துடுப்பு அகப்பை, துடுப்புப் போலும் காந்தள் மடல், துழாவும் கருவி
5651 துடுமெனல் நீரில் விழுதற் குறிப்பு
5652 துடைத்தல் ஒப்பமிடுதல், தடவுதல், தடவி நீக்குதல்
5653 துடைத் தொறும் துடைக்குந் தோறும்
5654 துடையா துடைத்து
5655 துண்ணென நடுக்குற
5656 துணங்கை முடக்கிய இரு கைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியடித்துக் கொண்டு அசைந்தாடும் ஒரு வகைக் கூத்து, மகளிர் ஆடும் துணங்கைக் கூத்து
5657 துணர் குலை, கொத்து
5658 துணர்ந்தன்ன பூத்தாற் போன்ற
5659 துணரியது குலை கொண்டது
5660 துணி துண்டம், தெளிவு
5661 துணி கடல் தெளிந்த கடல்
5662 துணி கயம் தெளிந்த குளம், தெளிந்த நீர் நிலை
5663 துணிகிற்றல் துணிதல்
5664 துணிதரல் துணிதலைச் செய்தல்
5665 துணிதல் நிச்சயித்தல்
5666 துணிந்தது அறுதியிட்டு வந்த காரியம்
5667 துணி நீர் தெளிந்த நீர்
5668 துணிபு தெளிவு, துணிந்து
5669 துணியல் தடி, துண்டு
5670 துணிவாம் துணியக்கடவாம்
5671 துணிவிலள் அறுதியுடையள் அல்லள்
5672 துணை இரண்டு, இனம், உதவி, ஒப்பு, அளவு, துணையாக உதவும் பொருள், பேடு, கணவன், மனைவி, பரத்தையர்
5673 துணை ஈர் ஒதி கடை யொத்த குளிர்ந்த கூந்தல்
5674 துணைத்தல் மாலை முதலியன கட்டுதல்
5675 துணைதரல் துணையாந் தன்மையைத் தரல்
5676 துணைப்ப துணையாக
5677 துணை மலர்க் கோதை இணைந்த மலரால் செய்த கோதை
5678 துணையாக இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக
5679 துணையார் தோழியர்
5680 துணையும் அளவும்
5681 துணை வஞ்சி பிறரை வெல்லவேனும் கொல்லவேனும் துணிந்து நின்கின்றானொருவனைச் சில கூறிச் சந்தி செய்வித்தலைக் கூறும் புறத்துறை
5682 துணைவி மனைவி
5683 துதி நுனி, உறை, தோலடி
5684 துதை நெருங்கிய
5685 துதைதல் செறிதல், நெருங்குதல்
5686 துதைபு நெருங்கி
5687 துதைவு செறிவு
5688 துப்பு வலி, பவளம்
5689 துப்பு உறழ் பவளத்தை ஒத்த
5690 தும்பி உயர்ந்த சாதி வண்டு, வண்டு
5691 தும்பை தும்பைச் செடி, அதன் பூ
5692 துமித்த அறுத்தெடுத்த
5693 துமித்தல் அறுத்தல், வெட்டுதல், விலக்குதல், இடையே விலக்குதல்
5694 துமிதல் துணிதல்
5695 துமிய துணிபட
5696 துய் கதிர் பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி, பஞ்சு, பஞ்சின் நுனி போன்றதொரு பொருள், மென்மை, புளியம் பழத்தின் ஆர்க்கு
5697 துய்த்தல் தின்றல், நுகர்தல்
5698 துய்ப்பேம் நுகர்வேம்
5699 துயர் வருத்தம்
5700 துயர்தல் வருந்துதல்
5701 துயரம் மனத் துக்கம்
5702 துயருழத்தல் வருத்தத்திலேவருந்துதல், வருத்தத்தே அழுந்துதல்
5703 துயல் கழை அசைகின்ற மூங்கில்
5704 துயல்வர அசைதலுண்டாக, அசைய
5705 துயல்வரல், துயல்வருதல் அசைதல், அலைதல், பிறழ்தல்
5706 துயலல், துயலுதல் ஆடுதல், அசைதல்
5707 துயில் தூக்கம், புணர்ச்சி
5708 துயில் இயம்புதல் துயில் செல்வதனால் உயிர்ப்பின் ஒலி உண்டாதல்
5709 துயில் எடுப்புதல் துயிலினின்றும் எழுப்புதல்
5710 துயில் துஞ்சும் துயிலைக் கொண்டு வருந்தும்
5711 துயில் மடிதல் உறங்குதல்
5712 துயிலார்தல் உறங்குதல்
5713 துயிலேற்றல் உறக்கத்தைப் பொருந்துதல்
5714 துயிற் சான்றீரே துயில் கொள்ளக் கருதிய சான்றீரே
5715 துயிற்றுதல் படுக்க வைத்தல்
5716 துயிற்றும் துயிலப் பண்ணும்
5717 துரக்குவன் செலுத்துவன்
5718 துரத்தல் அடித்தல், ஓட்டிச் செல்லுதல்
5719 துரப்ப உஞற்றுகையினாலே
5720 துரப்பு முடுக்குகை
5721 துராய் அறுகம் புல்லால் திரித்த பழுதை
5722 துரு செம்மறியாடு
5723 துருத்தி ஆற்றிடைக்குறை, உலையூது கருவி
5724 துரும்பு கூளம்
5725 துருவை செம்மறியாடு
5726 துரூஉ செம்மறியாடு, செம்மறிக் குட்டி
5727 துலங்கு ஊர்தி தூங்கு கட்டில்
5728 துலங்குதல் தொங்கியசைதல்
5729 துலாஅம் துலாக் கோல்
5730 துவ்வாமை நுகராமை
5731 துவ்வாள் உண்ணாள்
5732 துவ்வுதல் நுகர்தல்
5733 துவர் செம்மை நிறம், பாக்கு, பவளம்
5734 துவர்ச் செவ்வாய் இயல்பான சிவப்பாற் சிவந்த வாய்
5735 துவர்தல் புலர்த்துதல், ஈரத்தைப் புலர்த்துதல்
5736 துவர் மணல் சிவந்த மணல், புலர்ந்த மணல்
5737 துவர் வாய் காவி நிறமுடைய வாய்
5738 துவர முற்ற
5739 துவரா பிளவுடாத
5740 துவராடை காவியூட்டிய ஆடை, துவர் ஊட்டின ஆடை
5741 துவரா நட்பு உவர்த்தல் இல்லாத நட்பு
5742 துவருதல் ஈரத்தைப் புலர்த்துதல்
5743 துவரை துவாரகை, துவார சமுத்திரம்
5744 துவலை நீர்த் திவலை, மழைத் தூவல், கூட்டம்
5745 துவள் துவட்சி
5746 துவற்றுதல் தூவுதல்
5747 துவன்றல் நெருங்கல்
5748 துவன்றி நெருங்கி
5749 துவன்றுதல் குவிதல், நிறைதல், நெருங்குதல்
5750 துவை துவையல்
5751 துவைத்தல் ஆரவாரித்தல், ஒலித்தல், புகழப்படுதல், தைத்தல்
5752 துழத்தல் சூழ வருதல், துழாவுதல்
5753 துழந்து துழாவி
5754 துழவுவோள் சூழ்பவள், தடவுபவள்
5755 துழவை துழாவி அட்ட கூழ்
5756 துழாய் துளசி
5757 துழாவுதல் நாடுதல்
5758 துழாவும் துழாவா நிற்கும்
5759 துழைஇ துழாவி, தேடி
5760 துழைஇய துழாவிய
5761 துள்ளல் துள்ளுகை, துள்ளுதல்
5762 துள்ளுதல் துள்ளித்துள்ளி விழுதல், பதைத்தல்
5763 துளங்கல் கலங்கல், தளர்தல், நடுக்கம்
5764 துளங்குதல் அசைதல், நிலை கலங்குதல், துள்ளுதல்
5765 துளர் பயிரின் களை, களைக்கொட்டு, மண் வெட்டி
5766 துளர்தல் நிலம் முதலியவற்றைக் கொத்துதல்
5767 துளவு துளசி
5768 துளி நீர்த் துளி, துளித்தல், மழை
5769 துளித்தல் மழை பெய்தல்
5770 துளி தலைஇய தளிர் மழைத் துளி தன்னிடத்தே பெய்யப் பெற்ற தளிர்
5771 துளி நசைப் புள் வானம்பாடி
5772 துளு துளுவம்
5773 துளை தொளை, துவாரம்
5774 துற்ற செறிந்த, வேயப்பட்ட
5775 துற்றல் மேற்கொளல், விழுங்கல்
5776 துற்றுதல் உண்ணுதல், மேற்கொண்டு நடத்தல்
5777 துறக்கம் சுவர்க்கம்
5778 துறக்குநர் துறப்பவர்
5779 துறத்தல் கைவிடுதல், நீங்குதல், பிரிதல்
5780 துறந்ததை துறந்தது
5781 துறந்தவள் துறக்கப்பட்டவள்
5782 துறந்தார் மறந்தார்
5783 துறந்து உள்ளார் துறந்து நினையார்
5784 துறப்பாய் கை விடுவாயிரா நின்றாய்
5785 துறப்பாயேல் துறப்பையாயின்
5786 துறப்பான் துறக்கின்றவன், துறக்குமவன்
5787 துறப்பு பிரிவு, நீக்கம்
5788 துறுகல் உருண்டைக் கல், குன்று, பாறை
5789 துறு காழ் வல்சியர் செறிவு மிக்க உணவினர்
5790 துறுதல் நெருங்குதல், செறிதல்
5791 துறை கடல், கூறுபாடு, வண்ணான் ஆடை ஒலிக்கும் இடம், நீர்த் துறை, கடல் துறை
5792 துறை துறை துறை தொறும் துறை தொறும்
5793 துறைபோதல் காரியம் முடிவு போதல்
5794 துறையூர் ஓர் ஊர்
5795 துறைவன் நெய்தல் நிலத் தலைவன்
5796 துன்பு துன்பம், வறுமை
5797 துன்புறுதல் அல்லற்படுதல், வருந்துதல்
5798 துன்புறூஉந் தகைய துன்பமுறுத்துந் தகைமைய
5799 துன்னம் தையல்
5800 துன்னல் அருகுதல், தையல், நெருங்குகை, பொருந்துதல்
5801 துன்னலம் பொருந்த மாட்டேம்
5802 துன்னா பொருந்தாத
5803 துன்னுதல் அணுகுதல், அணைதல், சேர்தல், நெருங்குதல், வருதல்
5804 துனி துயரம், வெறுப்பு, பிரிவு, கையிகந்த ஊடல், நீக்கம்
5805 துனி கொள்ளல் வெறுப்புக் கொள்ளாதே
5806 துனித்தல் நெடிது புலத்தல், ஊடுதல், வெறுத்தல்
5807 துனிப்பேன் துனித்திருப்பேன்
5808 துனியல் வருத்தமுறாதே
5809 துனை விரைவு
5810 துனைஇய விரைந்த
5811 துனை செலல் விரைந்த செலவு
5812 துனை தரல் வருந்தி வரல், விரைதலைத் தருதல், விரைந்து செல்லுதல், விரைந்து வருதல்
5813 துனைதல் விரைதல்
5814 துனைபரி விரைந்த செலவு
5815 துனைவரு நெஞ்சம் விரைதல் வரும் நெஞ்சம்
மேல்