5816 தூ தூய்மை, வலிமை, தசை, தூவு
5817 தூஉம் தூவுகின்ற
5818 தூஉய் தூவி
5819 தூக்கணங் குரீஇ தூக்கணங் குருவி
5820 தூக் கணை மாமிசத்தையுடைய அம்பு
5821 தூக்கல் அசைத்தல், ஆராய்தல்
5822 தூக்கு ஆராய்ச்சி, தாளத்தின் இடை நிகழுங் காலத்தது
5823 தூக்கு இலி ஆலோசனையில்லாதவன், மனத்தால் தூக்குதல் இல்லாதவன்
5824 தூக்குதல் அசைதல், ஆராய்ந்து பார்த்தல், உயர்த்துதல், தொங்க விடுதல், விளக்குதல், சீர்தூக்கிப் பார்த்தல்
5825 தூங்கல் தொங்குதல், நித்திரை மயக்கம், கூத்தாடுதல்
5826 தூங்கல் வங்கம் அசைகின்ற தோணி
5827 தூங்கு இருள் செறிந்த இருள்
5828 தூங்கு எயில் சோழனொருவனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆகாயக் கோட்டை
5829 தூங்கு கொளை முழவு மந்த ஓசையையுடைய முழவு
5830 தூங்குதல் அசைதல், ஊசல் முதலியவற்றில் ஆடுதல், கூத்தாடுதல், செறிதல், தொங்குதல், நிலையாகத் தங்குதல், மெத்தென நடத்தல், அசையா நிற்றல், செறிதல்
5831 தூங்கு தோல் பாம்பின் சட்டை
5832 தூங்குந்து தூங்கும், ஆடும்
5833 தூங்கு வழி அசைந்த இடம்
5834 தூண் கம்பம்
5835 தூண்டில் வேட்டுவன் மீன் பிடிப்போன்
5836 தூண்டுதல் குறுதல், செலுத்துதல்
5837 தூணி மரக்கால், புட்டில், அம்புக் கூடு
5838 தூத் திரை தூய அலை
5839 தூதாடுதல் தூதாகப் போதல், தூதாய்த் திரிதல்
5840 தூது கூழாங்கல்
5841 தூது உண் அம் புறவு தூதுணம், கல்லைத் தின்னும் அழகிய புறாவகை
5842 தூதை விளையாட்டுக்கு உதவும் சிறிய மரப்பானை, சிறு பானை
5843 தூ நீர் அலையாலே தூவப்படும் நீர், தூய நீர்
5844 தூம்பு உள் துளை, மூங்கிற் குழாய் மூங்கிலாலாகிய பெருவங்கியம் என்னும் இசைக் கருவி, களிற்றின் கை
5845 தூ மதி தூய மதி
5846 தூமம் தூமகேது, புகை
5847 தூய் தூவி, சிதறி
5848 தூயர் தூய்மையானவர்
5849 தூர் பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப்பகுதி
5850 தூர்தல் அடைந்து போதல், குழி நிரம்பல்
5851 தூர்பு நிறைந்து
5852 தூர மறைய
5853 தூரியம் வாச்சியப் பொது
5854 தூவல் துவலை, மழை
5855 தூவறத் துறத்தல் வலி இல்லையாம் படி துறத்தல்
5856 தூவா தூவாத, உண்ணாத
5857 தூவி அன்னத்தின் இறகு, பறவை இறகு, சூட்டு மயிர்
5858 தூவி அன்னம் சூட்டுமயிரினையுடைய அன்னம்
5859 தூவி அன்ன மென் சேக்கை அன்னத்தூவியால் செய்த மெல்லிய படுக்கை
5860 தூவியல் (தூஇயல்) தூய இயல்பு
5861 தூற்றல் தூற்றுகை
5862 தூற்றுதல் பலர் அறியச் செய்தல், பழி கூறுதல், பலர் அறியக் கூறுதல், வெளியாகக் கூறுதல்
மேல்