5863 தெங்கு தென்னை
5864 தெடாரி தடாரிப் பறை
5865 தெண் கண்ணி விளங்கிய கண்ணி
5866 தெண் பனி தெள்ளிதாகிய நீர்
5867 தெண்மை தெளிவு
5868 தெம் முனை போர்க் களம்
5869 தெய்ய தெய்யோ, ஓர் அசை நிலை
5870 தெய்யோ ஓர் அசை நிலை
5871 தெய்வக் கடி அயர்தல் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்தல்
5872 தெய்வஞ் செப்புதல் கடவுளைத் துணை வேண்டி வழிபடுதல்
5873 தெய்வப் பிரமம் தெய்வத் தன்மையுடைய பிரம வீணை
5874 தெய்வம் வருடம், கடவுள்
5875 தெய்வவுத்தி சீதேவி, என்னும் தலைக்கோலம்
5876 தெரி இணர் ஞாழல் விளங்குகின்ற கொத்தினையுடைய ஞாழற் பூ
5877 தெரி கல்லா இடை தெரியாத இடை
5878 தெரி கோல் துலாக் கோல்
5879 தெரிதல் அறிதல், தெரிந்தெடுத்தல், ஆராய்தல்
5880 தெரி தீம் கிளவி ஆராய்ந்த இனிய சொற்கள்
5881 தெரி பொருள் ஆன்மா
5882 தெரிய உணர்தல் தெளிய அறிதல்
5883 தெரியல் பூமாலை, கண்ணி, தார், மாலை
5884 தெரியா விளங்கி
5885 தெரிவை பெண்
5886 தெரு வழி, வீதி
5887 தெருமந்திட்டு அலமந்து
5888 தெருமரல் தெருமருதல், மனஞ் சுழலாதே
5889 தெருமருதல் மனஞ் சுழலுதல், அலமருதல், சுழலுதல்
5890 தெருவு வீதி
5891 தெருள் அறிவின் தெளிவு, தெளிவு
5892 தெருளுதல் தெளிதல், விளங்குதல்
5893 தெவ் பகை, பகைவர்
5894 தெவ்வர் பகைவர்
5895 தெவ்விர் பகைவிர், பகைவரே
5896 தெவ்வுதல் கொள்ளுதல், நிறைத்தல்
5897 தெவிட்டல் உமிழப்பட்டது, வாய் குதட்டுதலால் உண்டாகும் விலாழி நீர்
5898 தெவிட்டுதல் அசையிடுதல், ஒலித்தல் திரளுதல்
5899 தெவிட்டும் ஒலிக்கும்
5900 தெவிளுதல் திரளுதல்
5901 தெழி ஒலி
5902 தெழித்தல் அதட்டுதல், உரப்பி ஓட்டல்
5903 தெள் அறல் தெளிந்த நீர்
5904 தெள் விளி கூவி வெருட்டும் ஓசை, தெளிந்த சொல், தெளிந்த ஓசை
5905 தெள்ளிதின் தெள்ளிதாக, விளங்க
5906 தெளிக்கு தெளிவிப்பேன்
5907 தெளிக்குநர் தெளிவிப்பார்
5908 தெளித்தல் சூளுறுதல், துள்ளுதல், தூவுதல், தெளிவித்தல்
5909 தெளிதல் அறிதல், அமைதியுறுதல்
5910 தெளிந்திசின் தெளிந்தேன்
5911 தெளிப்பவும் சூளுறவும்
5912 தெளிப்பான் தெளிவிப்பான்
5913 தெளிப்பேன் தெளிவிப்பேன்
5914 தெளிர்த்தல் ஒலித்தல், செழித்தல், மகிழ்ச்சியுறுதல்
5915 தெளிர்தல் ஒளி பெறுதல்
5916 தெளிர்ப்ப ஒலிப்ப
5917 தெற்றி திண்ணை, மரவகை, குரவை, வேதிகை, மேடை
5918 தெற்றுதல் நெருங்குதல்
5919 தெற்றென கடுக, தெளிய, தெளிவாக, விரைவாக
5920 தெற சுட, சுடும்படியாக
5921 தெறல் அழிக்கை, கோபிக்கை, வெம்மை, காய்தல், கொல்லுதல், சுடுதல்
5922 தெறாஅ சுடாத
5923 தெறித்தல் துள்ளுதல், துளி அல்லது பொறியாய்ச் சிதறுதல், முற்றுதல்
5924 தெறித்து நடை துள்ளு நடை
5925 தெறிப்ப முற்ற, வீழ்வன
5926 தெறி மறி துள்ளி விளையாடும் குட்டி
5927 தெறு அச்சம், சுடுகை, கோபம், துன்பம்
5928 தெறு கதிர்க் கனலி சுடுகின்ற கிரணத்தையுடைய சூரியன், சுடுகின்ற கதிரையுடைய மழுப்படை
5929 தெறுத்தல் குவித்தல்
5930 தெறுதல் அழித்தல், கொல்லுதல், கோபித்தல், சுடுதல், வருத்துதல், தண்டஞ்செய்தல்
5931 தெறுப்ப வருத்த
5932 தெறுவர் பகைவர்
5933 தெறுவர வெகுட்சி தோன்ற
5934 தெறுவரல் அச்சமுறல்
5935 தெறுழ் ஒரு காட்டுக் கொடி வகை
5936 தெறூஉம் சுடும், வருத்தும்
5937 தென் பரதவர் தென் திசைக்கண் உள்ள குறு நில மன்னர்
5938 தென்புலம் தென் தேயம், பாண்டி நாடு, பிதிரருலகம்
5939 தென்புல வாழ்நர் இறந்தோர், பிதிரர்
5940 தென்வளி தென்றல்
5941 தென்னம் பொருப்பு பொதிய மலை
5942 தென்னவன் இராவணன், பாண்டியன்
5943 தெனாது தெற்குள்ளது
மேல்