5944 |
தேஎத்தர் |
நாட்டில் உள்ளவர் |
5945 |
தேஎத்து |
தேயத்து |
5946 |
தேஎம் |
தேயம், கள், தேன் |
5947 |
தேக்கு |
மர வகை |
5948 |
தேக் கொக்கு |
தேமா |
5949 |
தேம் |
இடம், திக்கு, தேசம், இனிமை, மணம், தேனீ, நெய், மதம் |
5950 |
தேம் கமழ் சிலம்பு |
தேன் நாறுகின்ற மலை |
5951 |
தேம் பாய் மா மலர் |
தேன் பரவிய அழகிய மலர்கள் |
5952 |
தேம்புதல் |
அழிதல், மெலிதல், வருந்துதல், வாடுதல், கெடுதல் |
5953 |
தேம் பெய் பால் |
கண்ட சருக்கரையோடு கூடிய பால் |
5954 |
தேமா |
பழத்தையுடைய மாமரம் |
5955 |
தேமூசுதல் |
தேனினம் மொய்த்தல் |
5956 |
தேமொழி |
இனிமையுடைத்தாகிய மொழி |
5957 |
தேய்கு |
தேய்வேனாக |
5958 |
தேய்த்தல் |
அழித்தல், இல்லையாக்குதல் |
5959 |
தேய்த்தார் |
கொல்லப்பட்டவர் |
5960 |
தேய்தல் |
குறைதல், மாய்தல், அழிதல் |
5961 |
தேய்ந்தன்று |
தேய்ந்தது |
5962 |
தேய்வை |
சந்தனக் குழம்பு, தேய்தல் |
5963 |
தேய |
அழிய |
5964 |
தேயர் |
தேயும் பொருட்டு |
5965 |
தேயா மண்டிலம் |
ஆதித்த மண்டிலம் |
5966 |
தேயும் |
தேயா நிற்பன் |
5967 |
தேர் |
கானல், சிறு தேர், கொல்லா வண்டி, பேய்த்தேர் |
5968 |
தேர் அறற்கு ஓட |
பேய்த்தேரை நீரென்று கருதி உண்டற் பொருட்டு ஓட |
5969 |
தேர்க்கால் |
குயவன் திகிரி |
5970 |
தேர்க் கொடிஞ்சி |
கைக்கு உதவியாகத் தேர்த் தட்டின் முன்னே நடப்படும் தாமரைப் பூ வடிவுள்ள அலங்கார உறுப்பு |
5971 |
தேர்கு |
தேடுவேன் |
5972 |
தேர்ச்சி |
ஆராய்ச்சி |
5973 |
தேர்ச் சினை |
தேர்க் கொடிஞ்சி |
5974 |
தேர்தல் |
ஆராய்தல், தேடுதல் |
5975 |
தேர் நிலை உரைத்தல் |
ஆராய்ச்சி நிலை கூறுதல் |
5976 |
தேர் நேமி |
தேரினது சக்கரம் |
5977 |
தேர் பண்ணல் |
தேரை ஏறுதற்கு ஏற்ப அமைத்தல் |
5978 |
தேர் வண்மை |
புலவர் முதலியோர்க்கு அரசர் அளிக்கும் தேர்க் கொடை |
5979 |
தேர் வலவன் |
தேர்ப்பாகன் |
5980 |
தேரை |
தவளை, தவளை வகை |
5981 |
தேரை வாய்க் கிண்கிணி |
தேரையின் வாய்போலும் வாயையுடைய சதங்கை |
5982 |
தேரோடு வந்த விருந்து |
தேரிலே கொண்டு வந்த விருந்து |
5983 |
தேள் |
கொடுக்காற் கொட்டி வருத்தும் பிராணி வகை |
5984 |
தேற்றம் |
தெளிவு |
5985 |
தேற்றல் |
தெளிவித்தல் |
5986 |
தேற்றா |
தெளியாத |
5987 |
தேற்றாதோன் |
அறியாதவன் |
5988 |
தேற்றாமை |
மாட்டாமை |
5989 |
தேற்றாய் |
அறியாய், தெளிவியாய் |
5990 |
தேற்றார் |
தெளிவித்துக் கூறார் |
5991 |
தேற்றாள் |
அறியாள் |
5992 |
தேற்றி |
தெளிவித்து, தெளிவிப்பாய் |
5993 |
தேற்றிய |
தேற்றுதற்கு |
5994 |
தேற்றிய சிறப்பு |
தெளிவித்ததனாலுள்ள சிறப்பு |
5995 |
தேற்றிய பாகன் |
சூளுற்ற பாகன் |
5996 |
தேற்றுதல் |
சூளுறுதல், தெளிவித்தல் |
5997 |
தேற்றேம் |
தெளிவியேம் |
5998 |
தேறல் |
கள், மது, தேன், தெளிதல் |
5999 |
தேறலை |
தெளியாய் |
6000 |
தேறி |
தெளி, தெளிந்து |
6001 |
தேறியாள் |
தெளிந்தவள் |
6002 |
தேறினேன் |
தெளிந்தேன் |
6003 |
தேறீயல்வேண்டும் |
தெளிதல் வேண்டும் |
6004 |
தேறு |
கொட்டுகை |
6005 |
தேறு கள் |
தெளியும் கள் |
6006 |
தேறுதல் |
நீர் தெளிதல், தெளிதல் |
6007 |
தேறு நீர் |
தெளிந்த நீர் |
6008 |
தேறுவது |
தெளியும் தன்மை |
6009 |
தேன் |
ஒரு வகை வண்டு, தேன் இறால், தேனினம், தேனீ, பூமணம் |
6010 |
தேன் இழைத்தல் |
தேன் கூடு கட்டுதல் |
6011 |
தேன் இறால் |
தேனைச் சேர்த்து வைக்க மெழுகால் தேனீக்கள் செய்யுங் கூடு, தேனையுடைய கூடு |
6012 |
தேன் நெய் |
தேன் |
6013 |
தேனூர் |
மதுரைக்கு அருகிலுள்ள ஓர் ஊர் |